குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 101
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
வியாசர் போல அந்தர்யாமி நிவேதனமாக எண்ணியா நாம் உணவு கொள்கிறோம் ? ஒரே பரபரப்புடன் சாப்பிடுகிறோம். அந்த நேரத்தில்தான் ஊர்க் கதை, உலகக் கதை எல்லாம் வந்து சேரும். அன்னத்தை வைத்துக் கொண்டு பிறரை நிந்திக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். அப்படி நிந்தித்தால் என்ன ஏற்படும் ?அந்த அன்னத்தினுடைய கோபத்திற்கு நாம் ஆளாவோம்... ' என்னை வைத்துக் கொண்டு நிந்தித்தாயல்லவா! நான் உனக்கு கிடைக்காமல் போக்க கடவது' என்று அதுவே சபித்து விடுமாம். அதனால்தான் பெரியோர், மஹான்கள் அன்னத்தை வைத்துக் கொண்டு மௌனமாக விடுவார்கள். . அப்படி மௌனமாகும்போது அந்தர்யாமி நிவேதனம் நிகழ்கிறது. இந்த நிவேதனத்தைதான் உபநிஷத் ' யஜ்ஞம்' என்ற பெயரில் நமக்குச் சொல்கிறது.
யஜ்ஞத்திலே வெளியில் ஹோம குண்டத்தில் ஹவிஸை எடுத்து ஹோமம் பண்ணுகிறோம். அது வெளியிலே பண்ணக் கூடிய யஜ்ஞம்.. இதுஉள்ளுக்குள்ளே அந்தராத்மாவுக்கு பண்ணக்கூடியது யஜ்ஞம்.. அங்கேயும் விஷ்ணு இங்கேயும் விஷ்ணு . உள்ளிருந்து சுவீகரிக்கிறான்.
யஜ்ஞம் பண்ணுகிறவர் ஒருவர் அந்த விஷ்ணுவை அழைத்தால் அவன் வருவான் . அந்தக் காலத்திலிருந்தவர்களுக்கு அந்த சக்தி இருந்தது. மஹாவிஷ்ணு தோன்றுவதோடு, ' ருத்ரமாவஹ' என்றால் பரமேஸ்வரன் வருவான்.' இந்திரமாவஹ' என்றால் இந்திரன் வருவான் . இப்படியே பிரும்மா, தேவர்கள் எல்லோரும் வருவர்....
இக்காலத்தில் இவர்களை வரவழைக்க நமக்கு சக்தி போதவில்லை . ஆனால் விச்வாமித்ர, ஜமதக்னி, வசிஷ்டாதி மஹரிஷிகளெல்லாம் கடவுளை நேரே கொண்டு வந்து நிறுதிதினார்கள். அவர்களால் பலருக்கும் பரமாத்மாவைப் பார்க்க கடைத்தது.. சேவிக்க முடிந்தது .
இராமாயணத்தில் கூட அத்தனை பேருக்கும் இடையே சங்கு - சக்ரதாரியாக பகவான் தோன்றியது வருகிறது . ' எல்லா தேவதைகளும் சூழ அவன் நின்றான். அது எப்படி இருந்ததென்றால் , ஆயிரம் பசுக்களடங்கிய ஒரு பசுக்கூட்டத்தினிடையே ஒரு காளை மாடு நின்றால் எவ்வளவு கம்பீரமாக இருக்குமோ அப்படி இருந்தது' என்று வர்ணனை வருகிறது. அப்படி பகவான் நேரே வந்து பலப்ரதானம் பண்ணுகிறான் .
ஆசார்யர்கள் வேதாந்த விஷயத்தில் உள்ளே புகுந்து, அவன் தமக்கு எப்படியெல்லாம் உபகரிக்கிறான், அவனுடைய பெருமை என்ன என்பதை ஒன்பது ஒன்பதாவது பதினாறு ஒன்பதுகளில் விளக்குகிறார் கள் ...11 × 9 = 99.
முதல் ஒன்பதை பார்ப்போம்..இந்த விஷ்ணு என்கிற சப்தத்தினால் நாம் எதைத் தெரிந்து கொள்கிறோம் என்றால் சர்வேச்வரத்வம் முதலான குணங்களை . விஷ்ணு என்கிற நாமா குணத்தை காட்டுகிறது. சஹஸ்ரநாமத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாமாவும் குண பிரயுக்தமான நாமா - நாம் இதை மறக்கக் கூடாது.
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment