குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 100
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
கோபஸ்த்ரீகளெல்லாம் பால், தயிர், வெண்ணெய் விற்கப் போனார்கள். யமுனையில் கடந்து போனார்கள். எல்லாவற்றையும் விற்றுவிட்டு திரும்புகின்றனர். . அவர்கள் போகும்போது முழங்கால் வரை இருந்த யமுனை ஜலம், திரும்பி வரும் போது இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. இவர்களுக்கு என்ன பண்ணுவது ன்று பிரிய வில்லை. " குழந்தைகள் அழுவார்களே. பசுக்கள் கத்துமே.. என்ன பண்ணுவது" என்று பயப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஒருபுறம் வியாச மஹரிஷி அமர்ந்திருந்ததை கண்டனர். அவரைக் கண்டதும் தைரியம் வந்து அவரை சேவித்து ' ஸ்வாமி நாங்கள் அக்கரைக்கு போக வேண்டும் . நீங்கள்தான் அதற்கு அனுக்ரஹம் செய்து வழி பண்ண வேண்டும் ' என்றனர்.
அவர்' என்கு ரொம்ப பசியால் காது அடைக்கிறது. உங்களிடம் சாப்பாடு மீதி இருந்தால் கொடுங்கள். சாப்பிட்டுவிட்டு அழைத்துப் போகிறேன்' என்றார். சரியென்று அவர்களிடத்திலே மீதியிருந்த பால், தயிர், வெண்ணெய் கொடுத்தார்கள். அவரும் சாப்பிட்டுவிட்டு யமுனை கரையில் கையலம்பிக் கொண்டார். பிறகு யமுனையை பார்த்து கை கூப்பியபடி சொன்னார் , ஹே சூர்ய பத்ரி யே ! காளிந்தி! நான் இன்று சுத்த உபவாசம் இருந்தது உண்மை என்றால் வழிவிடு என்றார்.
யமுனையில் இரண்டாக பிரிந்து வழி விட்டாள். அவர் முன்னே நடக்க கோபஸ்த்ரீகள் பின் தொடர்ந்தனர். மறுகரையில் அடைந்ததும் யமுனை பழையபடி கூடிக் கொண்டது. கோபியருக்கள் ஆச்சர்யம் தாங்காமல் அவரையே கேட்டனர்.. என்ன கேட்டனர் !!
' உங்களை போன்ற பெரியோர் பொய் சொன்னால் தவறில்லையா?'
' பொய்யா .. நான் சொன்னேனா ' என்றார் அவர்.
' இன்றைய தினம் உபவாசம் இருந்தது உண்மையானால் வழி விடுஎன்றீர்கள். யமுனையும் வழி விட்டாள். இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரியோர் பொய் சொன்னால் தவறில்லை போலிருக்கிறது ' என்றனர் கோபஸ்த்ரீகள்.
' நான் பொய் சொல்லவில்லை. இன்றைய தினம் நான் உபவாசம் இருந்தது மெய்தானே' என்றார்.
' உபவாசமா! இவ்வளவு வெண்ணெய், பால், தயிர் எல்லாம் சாப்பிட்டு விட்டை உபவாசமா இருந்தது மெய்யென்றால் எப்படி பொருந்தும் ' ?
' பால், தயிர், வெண்ணெய் நானா சாப்பிட்டேன்? உள்ளே இருக்கும் அந்தர்யாமிகல்லவோ நிவேதனம் செய்தேன் ' என்றார் வியாசர் !
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்
No comments:
Post a Comment