*ஒரு கார்யத்திற்கு கிளம்பும் பொழுது யார்யார் எந்தெந்த எண்ணிக்கையில் போகக்கூடாது?*
नगच्छेत् राज युग्मं च न गच्छेत् ब्राह्मण त्रयम् ।
चतुश्शूद्रो न गच्छेयुः न गच्छेत् वैश्य पञ्चकम् ।।
ந கச்சேத் ராஜ யுக்மம் ச ந கச்சேத் ப்ராஹ்மண த்ரயம் ।
சதுஶ்ஶூத்ரோ ந கச்சேயு: ந கச்சேத் வைஶ்ய பஞ்சகம் ।।
ஒரு கார்யத்திற்கு போகும் போது இரண்டு பேராக க்ஷத்ரியரும், மூன்று பேராக ப்ராம்மணரும், நான்கு பேராக ஶூத்ரரும், ஐந்து பேராக வைஶ்யரும் போகலாகாது.
*நீதி ஶாஸ்த்ரம்*
*பூணூலை நிவீதியாக (மாலையாக) போடவேண்டிய காலங்கள்?*
वृद्धमनुः
मनुष्यतर्पणे स्नानवस्त्र निष्पीडने तथा।
निवीती तू भवेद्विप्रः तथा मूत्रपुरीषयोः ।।
வ்ருத்தமனு
மனுஷ்ய தர்பணே ஸ்நானவஸ்த்ர நிஷ்பீடநே ததா ||
நிவீதீது பவேத்விப்ர: ததா மூத்ரபுரீஷயோ:
வ்ருத்தமனு
மனுஷ்ய தர்பணத்திலும். ஸ்நான வஸ்த்ரத்தை பிழிவதிலும். மூத்ரமல விஸர்ஜன காலத்திலும் ப்ராம்ஹனன் நிவீதியாய் இருக்க வேண்டும்
வைத்யநாத தீக்ஷிதீயம் *गण्डूष विधिः வாய்க் கொப்பளிக்கும் முறை. 01*
अपां द्वादशगण्डूषान् पुरीषोत्सर्जने द्विजः ।
मूत्रेषु चतुरःकुर्यात् भोजनान्ते तु षोडश ।।
அபாம் த்வாதஶ கண்டூஷாந் புரீஷோத்ஸர்ஜநே த்விஜ: ।
மூத்ரேஷு சதுர:குர்யாத் போஜநாந்தே து ஷோடஶ ।।
மல விஸர்ஜன காலத்தில் 12 தடவை வாய்க் கொப்பளிக்க வேண்டும், மூத்ர விஸர்ஜனத்தில் 4 தடவையும், போஜனம் செய்த பிறகு 16 தடவையும் வாய்க் கொப்பளிக்க வேண்டும்.
*வைத்யநாத தீக்ஷிதீயம்*
*கண்டூஷ விதி 02*
अपसृत्य ततः पश्चात् गण्डूषान् षोडशाचरेत् ।
विप्रस्य दक्षिणे भागे देवास्तिष्ठन्ति यत्नतः।
आसीन एव गण्डूषान् वाम भागे विसर्जयेत् ।।
அபஸ்ருத்ய தத: பஶ்சாத் கண்டூஷாந் ஷோடஷாசரேத் ।
விப்ரஸ்ய தக்ஷிணேபாகே தேவாஸ்திஷ்டந்தி யத்நத: ।
ஆஸீந ஏவ கண்டூஷாந் வாமபாகே விஸர்ஜயேத் ।।
உத்தராபோசனத்திற்கு பிறகு நகர்ந்து கொஞ்சம் தூரம் சென்று 16 தடவை வாய்க் கொப்பளிக்க வேண்டும் எச்சில் ஜலத்தை உட்கார்ந்து கொண்டு தன் இடது பாக பூமியில் துப்பவேண்டும் ப்ராம்மணனுடைய வலது பாகத்தில் தேவர்கள் இருக்கிறார்கள் ஆகையால் வலதுபாகத்தில் பூமியில் வாய் கொப்பளித்து ஜலத்தை துப்பக்கூடாது.
*வைத்யநாத தீக்ஷிதீயம்*
*எவரிடமும் பிரகடனப்படுத்தக் கூடாத விஷயங்கள்*
न कञ्चिदात्मनः शत्रुं नात्मानं कस्यचिद्रि पुम्।
प्रकाशयेन्नापमानं न च निःस्नेहतां प्रभोः ।।
ந கஞ்சிதாத்மந: ஶத்ரும் ஆத்மாநம் கஸ்யசித்ரிபும் ।
ப்ரகாஶயேந்நாபமாநம் ந ச நி:ஸ்நேஹதாம் ப்ரபோ: ।।
எவரையும் தனக்கு எதிரி என்றோ . எவருக்கும் தான் எதிரி என்றோ பிரகடனப்படுத்தாதே, தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை வெளிப்படுத்தாதே. தனது எஜமானன் தன்னிடம் ப்ரியமாக
இல்லையென வெளிப்படையாகக் கூறாதே. வேறொருவர் இதனைப் பயன்படுத்தி எஜமானனுக்கு மேலும் வெறுப்பேற்படச் செய்யக்கூடும்.
*।। भावप्रकाशे பாவப்ரகாஶம் ।।*क्षौरं शनैश्चर वारे तु पाषाणैर्गन्ध लेपनम् ।*
*आत्मरूपं जले पश्यन्न् शक्रस्याऽपि श्रियं हरेत् ।।*
*க்ஷௌரம் ஶநைஶ்சர வாரே து பாஷாணைர்கந்த லேபநம் ।*
*ஆத்மரூபம் ஜலே பஶ்யந் ஶக்ரஸ்யாபி ஶ்ரியம் ஹரேத் ।।*
*1) சனிக்கிழமையில் க்ஷவரம் (முடி வெட்டுதல் , ஷேவ்)செய்து கொள்வதும்.*
*2) சந்தனம் அரைத்த சந்தனகல்லின் மீது உள்ள சந்தனத்தை பூசி கொள்வதும்.*
*3) ஜலத்தில் தனது உருவத்தை காண்பதும்.*
*ஆகிய மூன்று செயல்களும் தேவர்களிள் தலைவனான இந்த்ரனாக இருந்தாலும் கூட அவனது செல்வத்தை அழித்து விடும். ஆகையால் இந்த விஷயங்களில் கவனம் தேவை!*
*நீதி ஶாஸ்த்ரம்*
*இலக்கண கல்வி எவ்வளவு முக்யம்???*
यद्यपि बहु नाधीषे तथापि पठ पुत्र व्याकरणम् ।
स्वजनः श्वजनो मा भूत सकलं शकलं सकृत्शकृत् ।।
யத்யபி பஹு நாதீஷே ததாபி பட புத்ர வ்யாகரணம்|
ஸ்வஜந: ஶ்வஜனோ மா பூத ஸகலம் ஶகலம் ஸக்ருத்ஶக்ருத் ||
இது ஒரு தந்தை மகனுக்கு சொல்வதாக உள்ள ஶ்லோகம்.
மகனே, நீ நிறைய படிக்கா விட்டாலும் பரவாயில்லை, கொஞ்சமாவது இலக்கணம் (வ்யாகரணம்) அவஶ்யம் தெரிந்து கொள் என்கிறார். ஏனெனில், உன் பேச்சில் ஸ்வஜன (ஸொந்தக்காரர்கள்) , ஶ்வஜன: (நாய்) ஆகி விடும். ஸகலம் (முழுமையானது), ஶகலம் (துண்டானது) ஆகிவிடும், ஸக்ருத் (ஒரு சமயம்), ஶக்ருத் (மாட்டுச்சாணம்) ஆகி விடும்.
இங்கே இலக்கணம் (வ்யாகரணம்) என்று சொன்னது உச்சரிப்பையும் சேர்த்த மொழி இலக்கணம் தான்.
*ஸுபாஷிதம்* *பணம் எப்போது ஸுகத்தை கொடுக்கிறது?*
अर्थानामर्जने दुःखमर्जितानां च रक्षणे ।
आये दुःखं व्यये दुःखं धिगर्थाः कष्टसंश्रयाः ॥
அர்தாநாமர்ஜநே து:கமர்ஜிதாநாம் ச ரக்ஷணே ।
ஆயே து:கம் வ்யயே து:கம் திகர்தா: கஷ்டஸம்ஶ்ரயா: ॥
பணத்தை சம்பாதிப்பது கடினம் , சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது அதைவிட கடினம், பாதுகாத்த பணத்தை செலவு செய்யும் பொழுது வரும் வலி அதை விட கடினமானது. ஆகையால் பணத்தை சம்பாதிப்பதும், பாதுகாப்பதும், செலவிடுவதும், கடினமான செயலே இப்படியிருக்க பணம் எவ்வழியில் ஸுகத்தை கொடுக்கிறது.
பணத்தை ஸுகமாக மாற்றிக் கொள்ளலாமே தவிர பணம் எப்பொழுதும் ஸுகத்தை கொடுப்பதில்லை.
*உலக வாழ்க்கையில் இன்பம் தரக்கூடிய ஆறு விஷயங்கள்?*
अर्थागमो नित्यमरोगिता च
प्रिया च भार्या प्रियवादिनी च ।
वश्यस्य पुत्रो Sर्थकरी च विद्या
षड् जीवलोकस्य सुखानि राजन् ।।
அர்தாகமோ நித்யமரோகிதா ச
ப்ரியா ச பார்யா ப்ரியவாதிநீ ச ।
வஶ்யஸ்ய புத்ரோர்தகரீ ச வித்யா
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகாநி ராஜந் ।।
தடையற்று வரக்கூடிய செல்வம் (passive income போல்), நல்ல உடல் ஆரோக்யம், ப்ரியமான மனைவி , ப்ரியமான வார்த்தைகளை பேசும் மனைவி, நமது சொல்லை தட்டாமல் கேட்கும் மகன் (அ) மகள் , மற்றும் நாம் நிபுணத்வம் வாய்ந்த துறையிலிருந்து சம்பாதிக்கும் பணம். இவை ஆறும் நமது உலக வாழ்க்கையில் நமக்கு ஸுகத்தையும் ஸந்தோஷத்தையும் அளிக்கக்கூடியவை.
*எவரிடமும் பிரகடனப்படுத்தக் கூடாத விஷயங்கள்*
न कञ्चिदात्मनः शत्रुं नात्मानं कस्यचिद्रि पुम्।
प्रकाशयेन्नापमानं न च निःस्नेहतां प्रभोः ।।
ந கஞ்சிதாத்மந: ஶத்ரும் ஆத்மாநம் கஸ்யசித்ரிபும் ।
ப்ரகாஶயேந்நாபமாநம் ந ச நி:ஸ்நேஹதாம் ப்ரபோ: ।।
எவரையும் தனக்கு எதிரி என்றோ . எவருக்கும் தான் எதிரி என்றோ பிரகடனப்படுத்தாதே, தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை வெளிப்படுத்தாதே. தனது எஜமானன் தன்னிடம் ப்ரியமாக
இல்லையென வெளிப்படையாகக் கூறாதே. வேறொருவர் இதனைப் பயன்படுத்தி எஜமானனுக்கு மேலும் வெறுப்பேற்படச் செய்யக்கூடும்.
*।। भावप्रकाशे பாவப்ரகாஶம் ।।*🙏🙏🙏தாஸன் ஆர் மணிகண்ட ஶ்ரௌதிகள் திண்டிவனம்.9367731112 7904261612
No comments:
Post a Comment