Monday, August 2, 2021

Saranagati

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
           *சரணாகதி* 

 *பகுதி 16* 

 *"ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதியோ நர:* 
 *தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |* 
 *ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்* 
 *அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||"* 
 *வராஹப்பெருமானின் சரம ஸ்லோகம்* 

 இதன் பொருள், நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை முழுமனதுடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் நினைவு இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!.  

உயிர்கள் அனைத்திற்குமே அச்சம் என்கிற உணர்வு பொதுவானதாகும். அச்ச உணர்வுகள் எல்லாமே மரணத்துடன் தொடர்புடையவையாக இருக்கிறது. மரணம் பயங்கரமானதல்ல ஆனால் மரண பயம் கொடுமையானது. இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் இந்த மரணபயம் பாடாய்படுத்துகிறது. பிறருக்கு ஏற்படும் துர்மரணங்களை கண்டு மேலும் பயப்படுகின்றனர். இப்படியான பயங்கள் மற்றும் கவலைகளை போக்க ஸ்ரீவராக கூறிய  ஸ்லோகங்களைப் பின்பற்றலாம்.    

பிரம்ம தேவர் பூமியில் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று எண்ணிய சமயத்தில், இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அப்போது மகாவிஷ்ணுவிடம் சமுத்திரத்தில் அமிழ்ந்து இருக்கும் பூமியை வெளிக்கொண்டு வர பிரார்த்தனை செய்தார்.    மகாவிஷ்ணு பிரம்மாவின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, வராக அவதாரம் எடுத்தார்.  பகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி ஹிரண்யாட்சன் என்ற அசுரனுடன் போரிட்டு அவனை வென்று, தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியை வெளிக்கொணர்ந்து நிலை நிறுத்தினார்.
நீரில் இருந்து வெளிவந்த பூமாதேவி தாயார், வராகபெருமானின் மடியில் அமர்ந்து, நம் பொருட்டு, "நம் குழந்தைகளாகிய இந்த பூமியின் பிரஜைகள் உய்வதற்கு வழி என்ன" என்று கேட்க பகவான் நம் மேல் உள்ள கருணையினால், "அவர் கொடுத்த கைகளினால் தூய மலர்களை தூவி, அவர் கொடுத்த வாயினால் பாடி, அவர் கொடுத்த மனத்தினால் அவரை சிந்திக்க வேண்டும்" என்று காட்டிக்கொடுக்கிறார்.   இதை நமக்கு திருப்பாவை என்ற திவ்ய பிரபந்தந்தின் மூலம், பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் கொடுக்கிறார். வாயினால்பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர்த்தூவித் தொழுது. என்று முக்கரணங்களாலும் சரணாகதி பண்ணச் சொல்லுகிறார். சோறு கிடைக்காத ஒருவன் பட்டினி கிடப்பது விரதமாகது. பகவான் கொடுத்த சொத்துகள் பல இருந்து பாவனைக்காக முழு அர்ப்பணிப்புடன் எந்த நிபந்தனையுமின்றி அவருக்காக செய்யப்படும் விரதம், தவம், யாகம் நிச்சயமாக பகவனால் அங்கீகரிக்கப்பட்டு இப்பிறவியில் இனிய வாழ்வும் மறுமையில் உயிர் பிரிந்தபின் பரம்பதமும் கிடைக்கும்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  சரணாகதி   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment