_______________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*
*தெய்வத்தின் குரல்*
( *1820*) *01.06.2021*
*தெய்வ விஷயம்*
பகுதி - 14
_______________________
*தெய்வ ஸாக்ஷி*
பகுதி - 13
_________________________
*'ஸாக்ஷிநாதேச்வரர்'*
- பகுதி - *3*
__________________________
*முடிவுரை : திருவொற்றியூர்*
_________________________
*ஸ்ரீமஹாபெரியவா*
*Volume 7*. *பக்கம்* *810*
****************************************
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
*(*மஹா பெரியவா அருளுரை*)*
*தெய்வ விஷயம்*. (14)
(புதிய பகுதி தற்போது சென்று கொண்டிருப்பது)
*தெய்வ சாக்ஷி*. (13)
*ஸாக்ஷி நாதேச்வரர்* (3)
(இந்த பாகத்தின் நேற்றைய சில உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)
திருப்புறம்புய க்ஷேத்திரத்தில் அவர்கள் ஒருநாள் ராத்தங்க வேண்டி வந்தது. ரொம்ப தூரம் நடந்து வந்த அலுப்பும் புழுதியும் போவதற்காக அவன் கோவில் கிணற்றில் குளித்தான். மடப்பள்ளிக்குப் போய் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு இரண்டு பேரும் சாப்பிட்டார்கள். அப்புறம் ப்ராகாரத்திலேயே தள்ளித் தள்ளிப் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விட்டார்கள்.
பாதி ராத்ரியில் ஒரு பாம்பு வந்து அவனைக் கடித்தது. முழித்துக் கொண்டு "ஐயோ!" என்று அலறினான். சத்தம் கேட்டு அந்தப் பெண்ணும் எழுந்திருந்து வந்து அவனைப் பார்த்தாள். கிடுகிடுவென்று அவன் உடம்பு நீலம் பாரித்துப் போயிற்று. அப்புறம் அவனிடமிருந்து பேச்சு மூச்சு இல்லை. அவள் பாம்புக்கடி என்று புரிந்து கொண்டு நடுநடுங்கிப் போய் விட்டாள்.
மனசினால் அவனுக்கே தான் உரியவள் என்று உறுதியாக ஆத்மார்ப்பணம் பண்ணியிருந்தாலும் சாஸ்த்ரப் படிக் கல்யாணமாகாததால் சரீர ஸம்பந்தம் கூடாது என்று, அந்த ஆபத்து வேளையிலும் அவனைத் தொட்டுக் கூடப் பார்க்காமல், அவர்களைப் போலவே ப்ராகாரத்தில் படுத்துக் கொண்டிருந்த வேறு ஜனங்களை எழுப்பியே தொட்டுப் பார்க்கப் பண்ணினாளாம்! 'அரவம் தீண்டினாலும் ஆரணங்கு தீண்டாமல்' என்று புஸ்தகத்தில் பார்த்திருத்திருக்கிறேன். ஸாதாரண ஜனங்களிடங்கூட இத்தனை ஸாஸ்த்ர வ்யவஸ்தை, மனக் கட்டுப்பாடு இருந்ததுதான் ஸமீப காலம் வரையில் நம் தேசத்தை லோகத்தின் மதிப்பிலேயே உசத்தி வைத்திருக்கிறது.
'கல்யாணம் பண்ணிக் கொண்டு நல்வாழ்வு தர இருந்தவன், பாவம் போய் விட்டான்' என்று தெரிந்தது. அந்தப் பெண் அழுது துடித்தது. இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது.
அப்போது அந்த ஊருக்குத் திருஞானஸம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அவர் காதுக்குத் துக்க ஸமாசாரம் போயிற்று. அவர் அந்தப் பெண்ணிடம் ரொம்பவும் கருணை கொண்டார். உடனே, ஹாலாஹால விஷ பானம் பண்ணிய ஸ்வாமியிடம் போய் அந்த மதுரை வணிகனுக்கு விஷத்தை இறக்கி மறுபடி உயிர் கொடுக்கும்படிப் பதிகம் பாடினார். அப்பூதி பிள்ளைக்கு விஷம் இறங்க அப்பர் பாடின மாதிரியே!
திருமருகலிலும் இதே மாதிரி இந்த ஞானஸம்பந்தரே இன்னொருத்தனுக்கு விஷம் இறங்குவதற்காகப் பாடியிருக்கிறார். அதைப் பற்றிப் பெரிய புராணத்திலேயே இருக்கிறது. திருப்புறம்பய விஷயம் அந்த ஊர் ஸ்தல புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் சொல்லியிருக்கிறது.
சிலப்பதிகாரம் ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளுக்கும் பல நூற்றாண்டு முந்தினது. அதிலும் இதே மாதிரி கதை இருப்பதிலிருந்து பகவான் ஏறக்குறைய ஒரே மாதிரி கதை உடைய மூன்று பத்தினிப் பெண்களை இந்தத் தமிழ் நாட்டில் படைத்து விளையாடியிருக்கிறானென்று தெரிகிறது.
"நீ ச்மசானவாஸி – 'பிணம்புகு மயானம் புரிந்தனை'. ஆனாலும் யமன் கபளீகரம் பண்ணிவிட்ட உயிரைக்கூட உன்னால் வெளிப்படுத்த முடியுமே- 'விழுங்குயிர் உமிழ்ந்தனை!' என்றிப்படி ஸ்வாமியை அவருக்குப் புத்ர ஸ்தானத்திலிருந்து, ஆளுடைய பிள்ளையார் என்று பெயர் பெற்ற ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் திரும்புறம்பயத்தில் பாடிய பதிகத்தில் போற்றி வேண்டினார்.
ஸ்வாமி அநுக்ரஹம் செய்தார். விஷம் ஏறின வேகத்திலேயே கிறுகிறுவென்று இறங்கிற்று. 'மாண்டவன் மீண்டான்' என்பது நிஜமாயிற்று.
"அப்பா, இன்னமும் இந்தப் பொண்ணைக் காக்க வைக்காதே! மொதல்ல கல்யாணத்தைப் பண்ணிக்கோ. அப்புறம் க்ஷேத்ராடனம் முடிச்சுட்டு மதுரைக்குத் தம்பதியாப் போய்ச் சேருங்கோ" என்று ஸம்பந்தர் அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு அங்கேயிருந்து புறப்பட்டார்.
"மஹான் சொன்னதை மீறப்படாது. ஆனாலும் இங்கே கல்யாணமாச்சுன்னு ஊர்ல போய்ச் சொன்னா ஊர்க்காரா ஸாக்ஷி கேட்பாளே! இங்கே யாரைப் பிடிச்சு, அவச்யம் ஏற்படறப்போ, அங்கே ஸாக்ஷி சொல்ல வரப்பண்ண முடியும்?" என்று அவனுக்கு யோசனையாயிற்று.
முடிவாக ஸ்வாமியேதான் ஸாக்ஷி என்று வைத்துக் கொண்டான். 'ஸ்வாமி' என்று நினைத்தவுடன் அவன் மனக் கண்ணில் ஸ்வாமி – சிவலிங்கம் – மட்டுமில்லாமல் கோவில் இருந்த முழு 'ஸெட்-அப்'பும் தோன்றிற்று. குறிப்பாக, அவன் களைத்து வந்த போது குளிக்கிறதற்குக் குளுகுளுவென்று ஜலம் கொடுத்த கிணறும், கிளுகிளுவென்று கிளை பரப்பிக் கொண்டு அவன் சாப்பிட இடம் கொடுத்த வன்னி மரமும் ஸ்வாமியோடுகூட அவன் மனக் கண்ணில் பதிந்தது. கிணற்றுக்குப் பதில் சில பேர் அவனுடைய வாடிய வயிற்றுக்கு ஆஹாரம் தந்த மடைப்பள்ளியைச் சொல்வார்கள். சிலப்பதிகாரத்தில் அப்படித்தான் இருக்கிறது. வன்னி, எல்லாரும் ஒப்புக் கொள்வது அதோடு கிணறு and/or மடைப்பள்ளி என்று வைத்துக் கொள்ளலாம்!
மனஸில் பார்த்தது அப்படியே அவன் வாயில் வர, "ஸ்வாமி, வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி ஸாக்ஷியாக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்லி மாமா பெண் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
லிங்கமென்பதே அக்னி ஸ்வரூபந்தான். 'வன்ஹி' என்றாலும் அக்னி என்றே அர்த்தம். இப்படி இரட்டை அக்னி ஸாக்ஷி!
தம்பதியாக மதுரைக்குத் திரும்பினார்கள்.
(*இனி இன்றைய தொடர்ச்சி*.......)
திடுதிப்பென்று மாமா பெண் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளையாளை அகமுடையான் அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்ததும் மூத்தாளுக்கு ஆத்திரமும் அஸூயையுமாக வந்தது. ஆனாலும் மென்று முழுங்கிக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.
அப்புறம் சண்டை என்று மூளாமலே உள்ளூர கமுக்கமாக cold war என்று சொல்கிறார்களே, அந்தச் சூழ்நிலையிலே அந்தக் குடும்பம் சில வருஷங்கள் நடந்தது. இதற்கிடையில் இளையாளுக்கும் குழந்தை பிறந்து வளர்ந்தது.
ஒரு நாள் மூத்தாள் பிள்ளை இளையாள் பிள்ளையைக் காட்டடியாக அடித்து விட்டது. அதுவரை எவ்வளவோ பொறுமையாயிருந்து வந்த இளையாள் அடித்த பிள்ளையை அதட்டினாள். அப்போதுங்கூட அடிக்காமல் அதட்டத்தான் செய்தாள்.
ஆனால் அதுவே எரிமலை மாதிரி வெடிக்கத் தயாராயிருந்த மூத்தாளைக் கிளறிவிட்டு நெருப்பைக் கக்க வைக்கப் போதுமானதாயிருந்தது. "குலம் கோத்ரம் இல்லாம, முறைப்படி கல்யாணம் பண்ணிக்காம என் புருஷனைக் கையில போட்டுண்ட" – சின்ன பாஷையில் அவளை ஒரு சொல் சொல்லி – "அப்படிப்பட்டவளுக்கு சாஸ்த்ரப்படி, ஸம்ப்ரதாயப்படி, சட்டப்படி இந்த வீட்டுக்கு வார்ஸா இருக்கிற பிள்ளையை ஏச வாயேது?" என்று ஆரம்பித்து ஒரு பாட்டம் தீர்த்து விட்டாள்.
அவமானத்தில் அப்படியே மட்கி மண்ணாகிவிட்ட மாதிரி உட்கார்ந்த இளையாள் அப்புறம் மீனாக்ஷி – ஸுந்தரேச்வரர் ஆலயத்துக்கு ஓடினாள். பொற்றாமரைக் குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸ்வாமி ஸந்நிதிக்குப் போய்க் கதறினாள். "அப்பா! உன்னையும், உன் ஸ்தல வ்ருக்ஷத்தையும், உன் அபிஷேகக் கிணற்றையும் – உனக்கு நைவேத்யம் பண்ணும் மடைப்பள்ளியையும் என்றும் வைத்துக் கொள்ளலாம் – ஸாக்ஷி சொல்லியே என் முறைப் பிள்ளையான அத்தான் என்னைக் கைப்பிடித்தார். இதை இன்றைக்கு ஒருத்தி ஸந்தேஹப்பட்டு வாய்விட்டுச் சொல்கிறாளென்றால், சொல்லாமலே ஸந்தேஹப் படுகிறவர்கள் பல பேர் இருப்பார்கள். எல்லார் ஸந்தேஹத்தையும் நீதான் தீர்த்து வைக்கணும், இல்லாவிட்டால் உன் ஸந்நிதியிலேயே உயிரை விட்டு விடுவேன்" என்று கதறினாள்.
"உன் மூத்தாளையும் ஊராரையும் இங்கு அழைத்து வருக!" என்று ஸ்வாமி அசரீரியாகச் சொன்னார்.
அப்படியே அழைத்துக் கொண்டு வந்தாள்.
ஸுந்தரேச்வர ஸ்வாமி, ஸோமஸுந்தரக் கடவுள் என்றும் சொக்கநாதப் பெருமான் என்றும் தமிழ் நூல்களில் அன்போடு சொல்லப்படுபவர், தமது அறுபத்து நாலாவது லீலையாக, தாமே நேரில் ஒன்றும் செய்யாமல் ஸினிமா 'ட்ரிக்-ஷாட்' காட்சி மாதிரித் திருப்புறம்புயத்து ஸாக்ஷிகளை மட்டும் மதுரையில் தன் ஸந்நிதிக்கே வருவித்துக் காட்டினார்!
ஸந்நிதியின் ஈசான்ய திசையில் திருப்புறம்புய சிவலிங்கம், வன்னி, கிணறு – மடைப்பள்ளி சேர்த்துக் கொள்ளலாம் – எல்லாம் தோன்றின. ஒரு முஹூர்த்த காலம் அப்படித் தோன்றிவிட்டு யதா ஸ்தானம் போய்ச் சேர்ந்தன.
ஊரே அதிசயப்பட்டு ஆஹாகாரம் பண்ணி, இளையாளுடைய பக்தி மஹிமையை ஸ்தோத்ரம் செய்தது.
மூத்தாளும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
கோபம் தணியாத புருஷன், அவளைத் தள்ளி வைக்க நினைத்தான்.
அப்போது இளையாள் அவனிடம், "அப்படிப் பண்ணாதீங்க! யாருக்கும் தோணக் கூடிய ஸந்தேஹந்தான் அக்காவுக்கும் தோணிச்சு. அவங்க அதை மறைக்காம சொன்னதாலதான் இந்தச் சின்னவளோட கற்பு, பக்திங்களை ஸ்வாமியே ரூபிச்சுக்காட்டி, உலகம் தெரியப் பண்ணியிருக்காரு" என்று கேட்டுக் கொண்டாள்.
புருஷனும் மனஸை மாற்றிக் கொண்டான்.
கதை மங்களமாக முடிந்தது.
*முடிவுரை* : *திருவொற்றியூர்*
நான்தான் கதைக்கு மங்களம் பாடுவேனா என்று இருக்கிறது! விக்நேச்வர்ரை வேண்டிக் கொண்ட்து போக, போதும் போதும் என்கிற அளவுக்கு அவர் கிளறி விட்டுக் கொண்டிருக்கிறார்! வன்னி மரத்தைச் சொன்னவுடன் திருவொற்றியூர் மகிழ மரம், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கதையில் சங்கிலி நாச்சியாருக்காக ஸ்வாமி அந்த மரத்துக்குள்ளே ஸாக்ஷியாக ஸாந்நித்யம் அடைந்தது எல்லாம் ஞாபகம் வருகிறது. நிறுத்திக் கொள்கிறேன். பெரிய புராணம் மூலம், வசனம் எல்லாம் புஸ்தகம் இருக்கிறது. நீங்களுந்தான் கொஞ்சம் தேடி, கீடிக் கண்டுபிடித்துப் படித்துப் பாருங்களேன்! எல்லாவற்றையும் நானே சொல்லி விட்டால்?
*தெய்வ விஷயம்* பாகம் இத்துடன் முடிகிறது.நாளை முதல்
*கங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும்* என்கிற பகுதி ஆரம்பம்.
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
**********************************
*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.
*Deiva Sãkshi* – *Divine Witness*
( A new section currently goingon)
*Sãkshi Natheshwar*
(Yesterday's few texts of this chapter Repeated again today)
*Sãkshi Natheshwar temple is located in a place known as Thiruppurambiyam* – '*திருப்புறம்பியம்*, *which is some five miles NW of Kumbakonam*
61. They reached Thiruppurambiyam Kshetram one evening. To get rid of the tiredness and dirt after a long day's walk, they bathed with water from the temple well. The cold water was really refreshing! They had a darsan of the Siva Perumãn. They got some Prasãdam from the temple kitchen and sat under the Vanni tree and had food. Then in the outer Prãhãram of the temple itself they went to sleep, quite physically apart. Sometime in the night he was bitten by a snake and was shouting in the throes of the effect of the poison. The girl got up and observed that it was the effect of a snake bite. Though mentally she had surrendered herself to him as a would-be wife, till proper marriage function is done, she was not to even touch him. Accordingly she got some others who were sleeping similarly in the Prãhãram woken up, to see if they can extend some care for this man. I happen to remember reading the words in the book about this story, 'aravam theendinãlum ãraNangu theendãmal' – 'அரவு தீண்டினாலும் ஆரணங்கு தீண்டாமல்', meaning, 'though bitten by the snake, without the girl even touching him'! It is really heartening to note as to how even common folks were maintaining such abidance to the moral code of conduct as given in the Sãstrãs, till recent times in the past that was the reason for the high opinion about this country in the whole world!
62. The girl cried her hearts out that the man who was going to marry her and give her life-long protection and sustenance has so pitifully died of snake bite, cursing her own ill-luck! By then it was day light. Luckily for her, Thiru Gnãna Sambandar had camped in their village that day. He was informed of this case of death due to a snake bite in the temple premises. He took pity on this girl and sang a padigam on the Swami who had swallowed the Alahãla Visham, praying for the resurrection of this trader from Madurai, like Appar had sung for Appoodi AdigaL's son for the effect of poison to come down. In Thirumarugal too, the same Gnãna Sambandar had sung a song beseeching Siva Perumãn to remove the effect of poison for another man, about which it has been mentioned in Periya PurãNam. This event of Thiruppurambiyam has been mentioned in the Sthala PurãNam and in ThiruviLaiyãdal PurãNam.
63. Events of Silappadigãram occurred a few centuries prior to the time of Thiru Gnãna Sambandar. Looking at three similar stories of three different women of exceptional fidelity to their yet-to-be-husbands one can only wonder about the playfulness of God. Sambandar sang, "You dwell in cremation grounds – 'piNampugu mayãnam purindanai' – 'பிணம்புகு மயானம் புரிந்தனை'. But you are capable reviving even someone, who has been swallowed by Yama the God of Death – 'vizhungu uyir umizhndanai' – 'விழுங்கு உயிர் உமிழ்ந்தனை'." Thus he approached God from the deserving rightful freedom of a son with his father, as he used to be known as the 'ÃLudiya PiLLaiyar' – 'ஆளுடைய பிள்ளையார்', as he requested in this padigam. With the Anugraha of Swami, the effect of poison receded and in no time this man was alive again! Before leaving Thiru Gnãna Sambanda SwamigaL advised him, "Appã, do not make this girl wait any longer. First get married and then visit temple towns in Kshetrãdanam and reach Madurai as a wedded couple". With that Sambandar took leave of them all.
64. That young man was in a quandary! We have to obey the command of a Mahatma who has just this moment saved our life from certain death. But if we go back to Madurai as a wedded pair, who will come and give Sãkshi that we are married? Finally the boy decided that God is the witness. The moment he thought of Swami, the picture before his mind's eyes were that of the temple environs, with the well from which they had cold water to bathe, the Siva Lingam of the temple, and the Vanni tree under which they had eaten the Kovil Prasãdam as food for the night, were all deeply etched in his mind. Instead of the well, some would quote the temple kitchen known as 'MadaippaLLi' from where he got food. That is what is said in Silappadigãram. Everybody accepts the Vanni tree, with that we could accept the Well and or MadaippaLLi.
65. So as the picture in his mind came as the words of his mouth he said, "Swami Siva Lingam, Vanni Maram, the well and MadaippaLLi as the witness I marry you" and tied the knot of the sacred thread of a thick Saradu dipped in turmeric paste. Siva Lingam is of the form of fire / Agni. The Vanni Maram or tree is also a representation of fire only as any wood is also fire wood. Additionally the word in Sanskrit is 'Vahni' – 'वह्नि' which means fire. So thus there are two witnesses of Agni for the marriage. They returned to Madurai as a wedded couple.
*Continuing further from here*...........
Suddenly when her husband landed back with a second wife as his Mãmã's daughter, that is, Mother's brother's daughter; the first wife was extremely annoyed with apparent detestation! But anyhow controlling herself she welcomed them. Without open acrimony and fight, there was a 'cold war' situation. A few years went by and the second wife also became a mother.
66. One day there was a fight between the first wife's son and the second wife's son. The elder of two was a little too rough, for which the step mother ticked him off, for being unkind. This was the spark that lit up a huge fire-work in that, the first wife poured out all her suppressed venom saying, "Nobody knows as to what is your Kulam or Gothram and as to how you ever got married with my husband! But somehow you have managed to trap my husband like any cheap woman. I am tolerating all this. But how dare you talk to my son, who is the heir to all this wealth as per tradition and law?" The second wife felt so insulted that she was wondering as to why the earth is not caving in and swallowing her! She ran to Meenãkshi Sundareswarar Kovil. Taking a dip in the pond of golden lotus known as, 'por-tãmaraik-kuLam' – 'பொற்றாமறைக்குளம்' she went inside the temple and cried her hearts out! "My father, with you, your Sthala Vruksham the Vanni tree, your water well which provides water for your Abhishekam, and your MadaippaLLi where all your Prasãdam are cooked; as witness only my rightful relation Aththãn married me, isn't it? Today another woman has doubted my character and fidelity! If she is openly talking like this, there may be many who have similar doubts. You have to clarify the situation or I shall die here in your Sannidy itself", she declared. Swami spoke as an Asareeri "Come here again with your husband's other wife and anybody else you care to invite from the towns people". So, she did come back with a whole lot of people!
67. Sundareswara Swami, referred as 'Somasundara KadavuL' and Sokkanãtha Perumãn – 'சோமசுந்தரக் கடவுள் மற்றும் சொக்கநாதப் பெருமான்' in Tamil books with love, as his 64th ViLayãdal, recreated the scene of their marriage repeatedly, like a trick shot in the movies says PeriyavãL. (KTSV adds: – I would like to say that it must have been like a replay in U-tube or I-pad, Google 3 D photography from 360º angles available these days or even in your smart cell-phones these days, for the viewing pleasure of all the assembled, in his temple itself!) Every one of them could see the environs of the Thiruppurambiyam temple, the Kovil Water Well, the MadaippaLLi, inner Sannidãnam with the Siva Lingam, and 'Vanni' Tree as the Sthala Vruksham, repeatedly ending in the Hero telling the Heroine that with all these as the Sãkshi, I take you as my second wife! The whole city was flabbergasted at the truth of the girls love for her Aththãn and her devotion. The first wife also asked her pardon. The husband it was who wanted to divorce the first wife for being too cruel with the younger girl. But our heroine said, "Please do not even think of any divorce or anything like that. Her reaction to my presence was natural and her doubt about my veracity was very much on the cards. It is only because she doubted the fact of our marriage that it could be made public with God's Blessings, for the whole world to witness! Please do not be unkind to her!" So the husband did and 'All is well that ends well!'
*Epilogue*; *Thiruvortriyur*
68. Will I ever sing the Mangalam to the narration and bring it to an end, I wonder! Stranded half way in the narrative I thought of Vigneshwara. As though he is annoyed as to why I did not start with a prayer to him first, he is repeatedly agitating my memory cells on many other connected and not so very connected events. Once I talked about the Vanni tree, I am reminded of the Thiruvortriyur Magizha Maram which occurs in the story of Sundara Murthy SwamigaL, where for the sake of Sangili Nãchiyar, Swami got himself installed in that tree, that is known as Ãvirbhãvam. Enough is enough. Let me stop here. There is Periya PurãNam in the original form with narrative and explanations in books nowadays. Why don't you also do some searching and researching for yourself? What is the fun in my telling you everything with no effort on your part to know?
Chapters of Deiva Sãkshi – Divine Witness section coming to end with this), A new section *Ganga Snãnam and Cauvery Snãnam* starting from tomorrow.
*Maha Periyava thiruvadigal Saranam*
***************************************
No comments:
Post a Comment