Wednesday, August 11, 2021

Krishna Avatar part49

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
           *தஸாவதாரம்* 

          *ஸ்ரீகிருஷ்ணாவதாரம்* 

 *பகுதி 49*       

 *"நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்* 
 *கர்மம் என்னறியேண்டது முன்பினால்* 
 *முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்* 
 *ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்"* 
க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே!!!

 *ஞானப்பன, பூந்தானம்* 

 *விளக்கம்* 

நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது நம்முடைய பூர்வ ஜென்ம கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் (ஸ்ரீகிருஷ்ணரிடம்) ஒடுங்குகின்றது ஆகையால் உன் திருநாமங்களைப் போற்றுகிறேன்.

 *திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்* 

கிருஷ்ண பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆன்மீக திருத்தலமாக இந்த திருவம்பாடி கிருஷ்ணர்  1000 வருடங்கள் பழமையான இந்தக் கோவில் கேரளாவில் உள்ள பிரபலமான கிருஷ்ணன் கோவில்களில் ஒன்றாகும்.
கேரளாவின் மிகப்பிரசித்தியான வருடாந்தர திருவிழாவான திருசூர் பூரத்தில் பங்கு பெறும் முக்கியமான கோவில்களில் இது ஒன்றாகும். இத்திருவிழாவின்போது வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் ராக்ஷசக் குடைகளுடனும், வாண வேடிக்கைகளுடனும் ஊர்வலமாக வடக்குநாதன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலம் மடத்தில் வரவு என பிரசித்தி பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இக்கோயிலைப்பற்றி ஏராளமான புராணக்கதைகளும் கூறப்படுகின்றன.

 *தல வரலாறு*  

 திருவம்பாடி கோயில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.  இந்த கோயில் முன்பு திருச்சூர் டவுனுக்கு 20 கி.மீ வடமேற்கே எடக்கலாத்தூரில் பார்த்தசாரதி கோயிலாக அமைந்திருந்தது. அப்போது ஏற்பட்ட கலவரங்களால்  இந்த சிலை கிராமவாசிகளால் தற்போதைய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, மேலும் கச்சனப்பள்ளி காந்தநாத் என்ற குழந்தை இல்லாத தம்பதியினரால் பாதுகாத்து பூஜிக்கப் பட்டது.  அவர்கள் அதை தங்கள் சொந்தக் குழந்தையாகக் கருதினார்கள், கிருஷ்ணர் அவர்களிடம் செய்த பல்வேறு லீலைகளாலும் பக்தியாலும் மிகவும் ஈர்க்கப்பட்டனர், அவர்  கையிலிருந்த சாட்டை மாறி புல்லாங்குழலுடன் ஒரு வித்தியாசமான தோரணையைப் பெற்றார், மறுபுறம் தம்பதியினர் தொடர்ந்து வழங்கும் வெண்ணெயை ஏற்றுக்கொள்ள கையை நீட்டினான் உன்னிக் கிருஷ்ணன்.  கோவிலின் உரிமையை பின்னர் தம்பதியினர் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இது திரிச்சூரின் பிரசித்தமான ஸ்வராஜ் ரவுண்ட் பகுதிக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் காலை 5 மணியிலிருந்து 11 மணி வரை திறக்கப்படுகிறது. பிரசித்தமான 
திரிசூர் பகுதியின் இரண்டு மண்டலங்களின் சார்பாக இந்த இரண்டு கோயில்களும் பூரம் திருவிழாவில் பங்கேற்பது 200 வருடங்களாக தொடரும் மரபாக அறியப்படுகிறது. வாண வேடிக்கைகளுடன் தங்க சரிகை அணிகள் பூட்டிய யானைகள் ஊர்வலமாக வருவது இந்த திருவிழாவின் கண்கொள்ளா காட்சியாகும்.
உலகில் மிகச்சிறந்த கோலாகலத் திருவிழாக்களில் ஒன்றாக திரிசூர் பூரம் திருவிழாவை 'யுனெஸ்கோ' அமைப்பு அங்கீகரித்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். வெயில் மற்றும், ஈரப்பதத்தை உங்களால் சகித்துக்கொள்ள முடியுமெனில், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இடம் பெறும் இத்திருவிழாவை கண்டு மகிழ்வது ஒரு மறக்க முடியா அனுபவமாக இருக்கும்.
கேரளத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி உள்பட பல்வேறு கோவில்களில் திருவம்பாடி கிருஷ்ணன் தனி சன்னதிகள் உள்ளன.

 *அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்* 

இந்த புராதனமான கோயிலானது, செம்பகச்சேரி பூராடம் திருநாள் – தீவநாராயணன் தம்புரான் எனும் ராஜாவால் 790ம் ஆண்டிலேயே கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் மூலவரான பார்த்தசாரதி பகவான் ஒரு கையில் சாட்டையுடனும் மறு கையில் சங்குடனான கோலத்தில் காட்சியளிக்கின்றார். மற்ற கோயில்களில் உள்ள எல்லா விஷ்ணு அவதாரங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் காட்சியளிக்கும் விஷ்ணு அவதாரத்தை அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

மேலும், புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோயிலுடன் நெருங்கிய தொடர்பை இக்கோயில் கொண்டுள்ளது. இங்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பால் பாயசத்தை ஏற்றுக்கொள்ள குருவாயூரப்பன் தினமும் இக்கோயிலுக்கு விஜயம் செய்வதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
இக்கோயிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தில் ஒவ்வொரு வருடமும் அம்பலப்புழா கோயில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆராட்டு திருவிழா என்ற மற்றொரு திருவிழாவும் இங்கு அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தலம் கடன் தீர்க்கும் ஆலயமாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. பிறவிக் கடனையே தீர்ப்பவர் சாதாரண பணக்கடனையும் நிச்சயமாக தீர்ப்பார்.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment