Thursday, August 12, 2021

Ganga & kaveri snanam - Periyavaa

_______________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*

*தெய்வத்தின் குரல்*

( *1821*) *02.06.2021*                    

                    *தெய்வ விஷயம்*
                                    பகுதி - 14
________________________
*தெய்வ ஸாக்ஷி*
               
_________________________
*'ஸாக்ஷிநாதேச்வரர்'*
- பகுதி - *3*
__________________________
*முடிவுரை : திருவொற்றியூர்*
_________________________

  *கங்கா ஸ்நானமும்*
*காவேரி ஸ்நானமும்*

*முன்னுரை*
__________________________

*ஸ்ரீமஹாபெரியவா*

*Volume 7*. *பக்கம்* *814*

 ****************************************
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
*(*மஹா பெரியவா அருளுரை*)*

*தெய்வ விஷயம்*. (14)
(புதிய பகுதி தற்போது சென்று கொண்டிருப்பது)

*தெய்வ சாக்ஷி*. 

*ஸாக்ஷி நாதேச்வரர்* (3)
(இந்த பாகத்தின் நேற்றைய சில உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)

அப்புறம் சண்டை என்று மூளாமலே உள்ளூர கமுக்கமாக cold war என்று சொல்கிறார்களே, அந்தச் சூழ்நிலையிலே அந்தக் குடும்பம் சில வருஷங்கள் நடந்தது. இதற்கிடையில் இளையாளுக்கும் குழந்தை பிறந்து வளர்ந்தது.

ஒரு நாள் மூத்தாள் பிள்ளை இளையாள் பிள்ளையைக் காட்டடியாக அடித்து விட்டது. அதுவரை எவ்வளவோ பொறுமையாயிருந்து வந்த இளையாள் அடித்த பிள்ளையை அதட்டினாள். அப்போதுங்கூட அடிக்காமல் அதட்டத்தான் செய்தாள்.

ஆனால் அதுவே எரிமலை மாதிரி வெடிக்கத் தயாராயிருந்த மூத்தாளைக் கிளறிவிட்டு நெருப்பைக் கக்க வைக்கப் போதுமானதாயிருந்தது. "குலம் கோத்ரம் இல்லாம, முறைப்படி கல்யாணம் பண்ணிக்காம என் புருஷனைக் கையில போட்டுண்ட" – சின்ன பாஷையில் அவளை ஒரு சொல் சொல்லி – "அப்படிப்பட்டவளுக்கு சாஸ்த்ரப்படி, ஸம்ப்ரதாயப்படி, சட்டப்படி இந்த வீட்டுக்கு வார்ஸா இருக்கிற பிள்ளையை ஏச வாயேது?" என்று ஆரம்பித்து ஒரு பாட்டம் தீர்த்து விட்டாள்.

அவமானத்தில் அப்படியே மட்கி மண்ணாகிவிட்ட மாதிரி உட்கார்ந்த இளையாள் அப்புறம் மீனாக்ஷி – ஸுந்தரேச்வரர் ஆலயத்துக்கு ஓடினாள். பொற்றாமரைக் குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸ்வாமி ஸந்நிதிக்குப் போய்க் கதறினாள். "அப்பா! உன்னையும், உன் ஸ்தல வ்ருக்ஷத்தையும், உன் அபிஷேகக் கிணற்றையும் – உனக்கு நைவேத்யம் பண்ணும் மடைப்பள்ளியையும் என்றும் வைத்துக் கொள்ளலாம் – ஸாக்ஷி சொல்லியே என் முறைப் பிள்ளையான அத்தான் என்னைக் கைப்பிடித்தார். இதை இன்றைக்கு ஒருத்தி ஸந்தேஹப்பட்டு வாய்விட்டுச் சொல்கிறாளென்றால், சொல்லாமலே ஸந்தேஹப் படுகிறவர்கள் பல பேர் இருப்பார்கள். எல்லார் ஸந்தேஹத்தையும் நீதான் தீர்த்து வைக்கணும், இல்லாவிட்டால் உன் ஸந்நிதியிலேயே உயிரை விட்டு விடுவேன்" என்று கதறினாள்.
"உன் மூத்தாளையும் ஊராரையும் இங்கு அழைத்து வருக!" என்று ஸ்வாமி அசரீரியாகச் சொன்னார்.

அப்படியே அழைத்துக் கொண்டு வந்தாள்.

ஸுந்தரேச்வர ஸ்வாமி, ஸோமஸுந்தரக் கடவுள் என்றும் சொக்கநாதப் பெருமான் என்றும் தமிழ் நூல்களில் அன்போடு சொல்லப்படுபவர், தமது அறுபத்து நாலாவது லீலையாக, தாமே நேரில் ஒன்றும் செய்யாமல் ஸினிமா 'ட்ரிக்-ஷாட்' காட்சி மாதிரித் திருப்புறம்புயத்து ஸாக்ஷிகளை மட்டும் மதுரையில் தன் ஸந்நிதிக்கே வருவித்துக் காட்டினார்!

ஸந்நிதியின் ஈசான்ய திசையில் திருப்புறம்புய சிவலிங்கம், வன்னி, கிணறு – மடைப்பள்ளி சேர்த்துக் கொள்ளலாம் – எல்லாம் தோன்றின. ஒரு முஹூர்த்த காலம் அப்படித் தோன்றிவிட்டு யதா ஸ்தானம் போய்ச் சேர்ந்தன.

ஊரே அதிசயப்பட்டு ஆஹாகாரம் பண்ணி, இளையாளுடைய பக்தி மஹிமையை ஸ்தோத்ரம் செய்தது.

மூத்தாளும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

கோபம் தணியாத புருஷன், அவளைத் தள்ளி வைக்க நினைத்தான்.

அப்போது இளையாள் அவனிடம், "அப்படிப் பண்ணாதீங்க! யாருக்கும் தோணக் கூடிய ஸந்தேஹந்தான் அக்காவுக்கும் தோணிச்சு. அவங்க அதை மறைக்காம சொன்னதாலதான் இந்தச் சின்னவளோட கற்பு, பக்திங்களை ஸ்வாமியே ரூபிச்சுக்காட்டி, உலகம் தெரியப் பண்ணியிருக்காரு" என்று கேட்டுக் கொண்டாள்.

புருஷனும் மனஸை மாற்றிக் கொண்டான்.

கதை மங்களமாக முடிந்தது.

*முடிவுரை* : *திருவொற்றியூர்*

நான்தான் கதைக்கு மங்களம் பாடுவேனா என்று இருக்கிறது! விக்நேச்வர்ரை வேண்டிக் கொண்ட்து போக, போதும் போதும் என்கிற அளவுக்கு அவர் கிளறி விட்டுக் கொண்டிருக்கிறார்! வன்னி மரத்தைச் சொன்னவுடன் திருவொற்றியூர் மகிழ மரம், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கதையில் சங்கிலி நாச்சியாருக்காக ஸ்வாமி அந்த மரத்துக்குள்ளே ஸாக்ஷியாக ஸாந்நித்யம் அடைந்தது எல்லாம் ஞாபகம் வருகிறது. நிறுத்திக் கொள்கிறேன். பெரிய புராணம் மூலம், வசனம் எல்லாம் புஸ்தகம் இருக்கிறது. நீங்களுந்தான் கொஞ்சம் தேடி, கீடிக் கண்டுபிடித்துப் படித்துப் பாருங்களேன்! எல்லாவற்றையும் நானே சொல்லி விட்டால்?

*தெய்வ சாக்ஷி* பாகம் இத்துடன் முடிகிறது.இன்று முதல்
*கங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும்* என்கிற பகுதி ஆரம்பம்.

*கங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும்*

*முன்னுரை*

ஸ்ரீ மஹா பெரியவர்கள் ஸ்ரீகாளஹஸ்தியில் 1966ம் ஆண்டு எழுந்தருளியிருந்த போது, தீபாவளிக்கு அண்மையில் அவர்களைத் தரிசிக்கச் சென்ற அடியார்களில் ஒருவர், "தீபாவளிக்கும் கங்கா ஸ்நானத்துக்கும் என்ன தொடர்பு?" என்று விளக்கி வைக்குமாறு பெரியவர்களை வேண்டிக் கொண்டார்.

பெரியவர்கள் புன்னகை பூத்து, "ஏன், தீபாவளிக்கும் கங்கைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதென்று நினைக்கிறாயா? தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை. கங்கையோ பரமேச்வர ஸம்பந்தமுள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. 'யமுனா தீர விஹாரி' என்றே அவரைச் சொல்கிறோம். அதனால் தீபாவளியில் கங்கா ஸ்நானம் என்று ஏன் விசேஷம் கொடுத்திருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதாக்கும்?" என்று கேட்டார்.

அந்த அடியார் அப்படித்தான் எண்ணியிருப்பார் போலும். பேசாமல் இருந்தார்.

"அது இருக்கட்டும்; தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கிறாயோ?" என்று ஓர் அபூர்வ விஷயத்தை வினாவாக விடுத்தார் ஸ்ரீ ஜகத்குரு.

"இல்லை. பெரியவாள்தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்" என்று அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.

கூடியிருந்தவர்களில் வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா என்று பெரியவர்கள் அலுக்காமல் ஒவ்வொருவராக்க் கேட்டார். எவருக்கும் தெரியவில்லை.

பண்டிதராகத் தோன்றிய ஒருவர், "ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை" என்றார். அவர் சொன்ன மாதிரியிலிருந்து, அதனால் இவ்விஷயங்களை ஏற்பதற்கில்லை என்பது போலிருந்தது.

"பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கின்றன. ராமாயண, பாரத, பாகவதாதிகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும் வருகின்றன. கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும் இவை பெரும்பாலும் மூல ராமாயண, பாரத, பாகவதாதிகளுக்கு complimentaryயாகவே (இட்டு நிரப்பி முழுமை தருவனவாகவே) இருக்கின்றன. ஆகையால், மூலக்ரந்தத்துக்கு contradictoryயாக (முரணாக) இல்லாதவரை இப்படிப்பட்ட additional (கூடுதலான) ஸமாசாரங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்று கூறிய பெரியவர்கள், "நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோ இல்லையோ?" என்று தெரியாதவர் போலப் பெரியவாள் பண்டிதரைக் கேட்டார். 

"வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங்களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்லை"  என்று கூறிய பண்டிதர் "நரகாஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று பூமாதேவி ஒப்புக்கொடுத்ததாகவும் இருக்கிறது" என்றார்.

"வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianshipலேயே விட்ட மாதிரி" என மொழிந்த ஜகத்குரு, "அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப்பட்டிருக்கிறாயோல்லியோ?" என்று கேட்டார்.

"கேட்டிருக்கிறேன்" என்றார் அவர்.

"எனக்கென்னவோ அவனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பதுதான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவான் ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும், அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு அபிப்ராயம்" என்றார்.

கண்ணன் காவேரி ஸ்நானம் செய்த கதையைத் தெரிந்து கொள்வதில் தங்கள் ஆர்வத்தைச் சில பக்தர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

"அவன் (முதலில் விண்ணப்பித்த அடியார்) 'கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு' என்று கேட்டான். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொல்கிறேனென்றால், "ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது" என்று நினைக்க மாட்டானா? அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்" என்று குறும்பாகக் கூறிய குருநாதர், மேலும் குறும்பாக "இவர் (பண்டிதர்) "பாகவதத்திலே வந்தால்தான் ஒப்புக் கொள்வேன்" என்று சொன்னாலும் நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்தான் சொல்லப் போகிறேன். காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது. அதிலொன்றில்** துலா காவேரி மஹிமையைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்களையும் கொடுத்திருக்கிறார்" என அர்த்த புஷ்டியுடன் மொழிந்து, நிமிர்ந்து அமர்ந்து, கதை கூற ஆயத்தமானார்.

** பிரம்ம வைவர்த்த புராணத்தில்

ஓர் அம்மாள் "நரகாஸுர வதக்கதையைக்கூடப் பெரியவாள் வாயாலே கேட்கணும்" என்று விஞ்ஞாபித்துக் கொண்டாள்.

"எல்லாக் கதையும்தான்! ஏதோ இப்போது எனக்கு நினைவு வருகிற வரைக்கும் சொல்கிறேன்" என்று ஸர்வக்ஞர் கடல் மடையாகத் தொடங்கினார். பண்டிதரும் ஓரிரு இடங்களில் எடுத்துக் கொடுக்க, அது மேலும் பொங்கிப் பெருகச் செய்தார்.

கங்கையும் காவேரியுமாக இருந்த அந்தப் பிரவாஹத்தை இங்கே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
பாகம் முடிவு.

*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
**********************************

*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses* 

Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.

*Deiva Sãkshi* – *Divine Witness*
( A new section currently goingon)


*Sãkshi Natheshwar*
(Yesterday's few texts of this chapter Repeated again today)

Suddenly when her husband landed back with a second wife as his Mãmã's daughter, that is, Mother's brother's daughter; the first wife was extremely annoyed with apparent detestation!  But anyhow controlling herself she welcomed them.  Without open acrimony and fight, there was a 'cold war' situation.  A few years went by and the second wife also became a mother. 

66.          One day there was a fight between the first wife's son and the second wife's son.  The elder of two was a little too rough, for which the step mother ticked him off, for being unkind.  This was the spark that lit up a huge fire-work in that, the first wife poured out all her suppressed venom saying, "Nobody knows as to what is your Kulam or Gothram and as to how you ever got married with my husband!  But somehow you have managed to trap my husband like any cheap woman.  I am tolerating all this.  But how dare you talk to my son, who is the heir to all this wealth as per tradition and law?"  The second wife felt so insulted that she was wondering as to why the earth is not caving in and swallowing her!  She ran to Meenãkshi Sundareswarar Kovil.  Taking a dip in the pond of golden lotus known as, 'por-tãmaraik-kuLam' – 'பொற்றாமறைக்குளம்' she went inside the temple and cried her hearts out!  "My father, with you, your Sthala Vruksham the Vanni tree, your water well which provides water for your Abhishekam, and your MadaippaLLi where all your Prasãdam are cooked; as witness only my rightful relation Aththãn married me, isn't it?  Today another woman has doubted my character and fidelity!  If she is openly talking like this, there may be many who have similar doubts.  You have to clarify the situation or I shall die here in your Sannidy itself", she declared.  Swami spoke as an Asareeri "Come here again with your husband's other wife and anybody else you care to invite from the towns people".  So, she did come back with a whole lot of people!

67.          Sundareswara Swami, referred as 'Somasundara KadavuL' and Sokkanãtha Perumãn – 'சோமசுந்தரக் கடவுள் மற்றும் சொக்கநாதப் பெருமான்' in Tamil books with love, as his 64th ViLayãdal, recreated the scene of their marriage repeatedly, like a trick shot in the movies says PeriyavãL.  (KTSV adds: – I  would like to say that it must have been like a replay in U-tube or I-pad, Google 3 D photography from 360º angles available these days or even in your smart cell-phones these days, for the viewing pleasure of all the assembled, in his temple itself!)  Every one of them could see the environs of the Thiruppurambiyam temple, the Kovil Water Well, the MadaippaLLi, inner Sannidãnam with the Siva Lingam, and 'Vanni' Tree as the Sthala Vruksham, repeatedly ending in the Hero telling the Heroine that with all these as the Sãkshi, I take you as my second wife!  The whole city was flabbergasted at the truth of the girls love for her Aththãn and her devotion.  The first wife also asked her pardon.  The husband it was who wanted to divorce the first wife for being too cruel with the younger girl.  But our heroine said, "Please do not even think of any divorce or anything like that.  Her reaction to my presence was natural and her doubt about my veracity was very much on the cards.  It is only because she doubted the fact of our marriage that it could be made public with God's Blessings, for the whole world to witness!  Please do not be unkind to her!" So the husband did and 'All is well that ends well!'

*Epilogue*; *Thiruvortriyur*

68.            Will I ever sing the Mangalam to the narration and bring it to an end, I wonder!  Stranded half way in the narrative I thought of Vigneshwara.  As though he is annoyed as to why I did not start with a prayer to him first, he is repeatedly agitating my memory cells on many other connected and not so very connected events.  Once I talked about the Vanni tree, I am reminded of the Thiruvortriyur Magizha Maram which occurs in the story of Sundara Murthy SwamigaL, where for the sake of Sangili Nãchiyar, Swami got himself installed in that tree, that is known as Ãvirbhãvam.  Enough is enough.  Let me stop here.  There is Periya PurãNam in the original form with narrative and explanations in books nowadays.  Why don't you also do some searching and researching for yourself?  What is the fun in my telling you everything with no effort on your part to know?    

Chapters of Deiva Sãkshi – Divine Witness section coming to end with this), A new section *Ganga Snãnam and Cauvery Snãnam* starting from today.

*Ganga Snãnam and Cauvery Snãnam*

*Preamble*

1.          Maha PeriyavãL had visited Sri KãLahasti in 1966 sometime close to DeepãvaLi.  As usual after the Pooja, there was the Satsang, that is, talk by PeriyavãL.  One gentleman asked Maha PeriyavãL to please explain as to what is the connection between Ganga Snãnam and DeepãvaLi.  (As per age old tradition, all over India on the morning of DeepãvaLi, people wherever they are take a bath in whatever water in their house from the well or pond, to which they add small or big vessel full of the water from the River Ganges, which they might have brought home during their visit to the Ganges River at Prayag or some such place.)  PeriyavãL smilingly answered with a counter question, "Why, Do you think that there can be no connection between DeepãvaLi festivities and the Ganges River?  DeepãvaLi is a festival that has come about to celebrate Sri Krishna killing Naraka Asura, whereas Ganga is related to Siva Perumãn.  It is Yamuna which is related to Krishna.  He grew up on its banks and many of the incidents of his life are related to that River as we sing his praise saying, 'yamunã teera vihãri' – 'यमुना तीर विहारी'.  So evidently you are wondering as to why bathing in the waters of Ganga, known as 'Ganga Snãnam' has been given so much importance, is that so?"

2.          May be that is how, that gentleman looked at it.  Anyhow, he kept quiet.  PeriyavãL continued, "Let that be aside.  Are you aware that the causal man for the very celebration of DeepãvaLi did have Cauvery Snãnam that day?"  Thus PeriyavãL provided a new insight and a rare tit-bit of information in the form of a question.  "No.  I am not aware of this.  It is PeriyavãL who should kindly explain this for our enlightenment" said that gentleman.  PeriyavãL posed this question to all those people assembled there, individually one by one, without let.  One gentleman who looked like a Pundit said, "In Srimat Bhagawatam where 'Naraka Asura Vadam' is described, there is no mention of DeepãvaLi or Ganges or Cauvery."  From his tone it was clear that so, none of these things can be accepted at all.

3.          "Though unmentioned in the Bhagawatam, such information is available in other PurãNãs.  What is not mentioned in Ramayana, Bharatha and Bhagawatam as matters left unsaid by Vãlmeeki, Vyãsa and Suka Brhmam; nuggets of such information are available aplenty, stashed as treasures in various other PurãNãs, Upa-PurãNãs and Sthala PurãNãs.  The trend and flow of the stories, special characteristics of some of the important personages, lessons learnt and morals of the stories; such information from these secondary sources play the important complimentary role of filling in the gaps in the main text of the source document, thereby making them wholesome.  Such additional information should also be accepted".  Having said so PeriyavãL put up a question to that Pundit, as though he did not know or as though clarifying a doubt, "Immediately after Bhagawan had vanquished Naraka Asura, he is said to have been prayed to by Bhudevi as given in Bhagawatam, isn't it?"

4.          That Pundit replied, "Yes it is said so over there.  Indira's ceremonial umbrella and Indira's mother Atiti's ear studs were brought be Bhudevi and surrendered them to Bhagawan.  There is a Stotram that she is said to have uttered then.  But this is a general Stotra and not as asking for DeepãvaLi to be celebrated in the memory of her son Naraka Asura.  Of course she requested Bhagawan that he should take care of Baghadutta the son of Naraka Asura and her grandson."  PeriyavãL said, "Very similarly as it happened when Vãli was killed, his son was left under the guardianship of Sri Rama / Sugrieva.  That is alright but haven't you also heard of another version as 'pãta bhedam' – 'पाट भेदं', that Naraka Asura himself requested that his death may be celebrated all over the world as a special Pandikai?"  That gentleman agreed. 


5.          PeriyavãL continued, "For me somehow, the fact of the mother requesting her own son's death to be celebrated seems more noteworthy.  When dying by the hands of God himself, at the moment of his becoming inalienably one with God, it is quite normal for one to have the right sense and making such a request that people may be enabled to learn from his mistakes, is very much on the cards.  But it is extremely rare and more touching for a Mother to make such a request, without any heart burn or regret even at the extreme loss of her own son!  As the saying goes, 'Bhudevi is an ideal for tolerance', is proved here.  It is this mother's readiness for Thyaga that, throughout this country more than any other festival, this DeepãvaLi Pandikai has more relevance, importance and popularity."  Some of the assembled devotees including the first one who asked this question again expressed their keenness to know as to how Sri Krishna had his Cauvery Snãnam.    


6.          "Yes, if I talk about the connexion between the DeepãvaLi festival and Cauvery Snãnam, will not that man who asked first as to what is its connexion to Ganga Snãnam think that Swami does not know the answer to my query?  So I will tell you in detail about both Ganga Snãnam as well as Cauvery Snãnam", said PeriyavãL in all his mischievousness.  Then pointing out the one who looked like a Pundit he said, "Even if this man here says that he will accept only what is given in Bhagawatam, I am going to tell you all this with many other stories and quotes as a total mix only. Cauvery Mahãtmiyam (meaning details of its greatness), are given in Skãndam, Ãgneya PurãNam and Brhma Vaivarta PurãNam.  It is in Brhma Vaivarta PurãNam, while detailing the greatness of Tulã Snãnam in Cauvery this DeepãvaLi story is there.  The same Vyãsa ÃchãryãL who gave Bhagawatam as Upadesa to Suka is also the author of all these PurãNãs."  Saying so, PeriyavãL sat up more straight to continue with his narration.  One lady further requested, "Even this story of the Naraka Asura Vadam, I wish to hear from PeriyavãL".  "Yes, yes I will tell you as much as I remember", said the omniscient PeriyavãL like the ocean flowing during the high tide or like the flow of the river down the mountain slopes.  That flow of Ganga and Cauvery is what we are giving you here! 
End of chapter.

*Maha Periyava thiruvadigal Saranam*
***************************************

No comments:

Post a Comment