Wednesday, August 11, 2021

Chandrasekaramrutham - Periyavaa



* சாஸ்திரத்திலே நிறைய ஸயன்ஸ் இருக்கிறது வாஸ்தவம். அதனாலேயே அது முழுக்க ஸயன்ஸுக்கு உடன்பட்டாகிவிட வேண்டும் என்று ஆகாது.

* முன்னே கேலி செய்த விஷயங்களில் பல இப்போது விஞ்ஞான ரீதியில் அர்த்தமுள்ளவை என்று தெரிவதாலேயே, இப்போது நாம் கேலி செய்கிறவையும் அர்த்தமுள்ளவையாகப் பிற்பாடு தெரிய வரலாம் என்று அறிகிற அடக்கம் நமக்கு வரவேண்டும்.

* நமக்குத் தெரிந்த "த்ருஷ்ட"த்தோடு, தெரியாத, தெரிய முடியாத "அத்ருஷ்ட"மும் இருக்கிறது; அதிலே தான் நம் நிறைவு இருக்கிறது; இந்த "அத்ருஷ்ட"த்தைச் சொல்லும் சாஸ்திரங்களை அனுசரித்து நடந்து தான் நம் பூர்விகர்கள் பக்தியிலும், ஞானத்திலும் நிறைந்து லோகமெல்லாம் புகழும்படியாக இருந்தார்கள்; அதை விட்டதிலிருந்து தான் நாம் விஞ்ஞானத்திலும், பொருளாதாரத்திலும் எத்தனையோ முன்னேறியும் கூடக் கொஞ்சமும் நிறைவே இல்லாமல் திரிந்துகொண்டு, லோகமும் நம்மை மட்டம் தட்டும்படியாக ஆகிக்கொண்டு வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

* சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற எல்லாமே நிஜம் என்ற நம்பிக்கை பெறவேண்டும். நமக்குத் தெரிகிற ஸயன்ஸ், வைத்திய சாஸ்திரம் முதலானவற்றுக்காகத்தான் "ஆசாரம்" என்றால் சாஸ்திர விதிகளை இவற்றின்படி மாற்றிக்கொண்டால் என்ன என்ற எண்ணம் வரும்.

* சாணி போட்டு மெழுகுவது என்பது அது antiseptic என்பதற்காக மட்டும் தான் என்று வைத்துக் கொண்டுவிட்டால், அப்புறம் நம் பூஜை மாடத்தையோ அல்லது யாகசாலையையோ ஏன் சாணிக்குப் பதில் phenol அல்லது carbolic acid போட்டு அலம்பக்கூடாது என்று கேட்கத் தோன்றும்.

* மணையில் உட்கார்ந்து கொண்டுதான் வைதிக கர்மா பண்ணனும் என்பது மந்திரத்தின் electricity நம்மை விட்டுப் போகப்படாது என்பதற்காக மட்டுமே என்று வைத்துக்கொண்டால் அப்😭புறம் மணைக்குப் பதில் ரப்பர் குஷனில் உட்கார்ந்து கொள்ளலாம், பவித்ரத்துக்கு பதில் gloves போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் logical லாக ஒப்புக்கொள்ள வேண்டிவரும்.

No comments:

Post a Comment