Courtesy: Smt. Dr. Saroja Ramanujam
அத்தியாயம் 10
கபந்தன் திவ்ய உருவம் அடைந்து செல்லுமுன் ராமனிடம் சபரியைப் பற்றிக் கூறி அங்கு செல்லுமாறு வேண்ட ராமனும் சபரியின் ஆஸ்ரமத்தை அடைந்தான. அவர்களைக் கண்ட சபரி ஆனந்தம் மேலிட்டு கண்ணீர் பெருக தேனினும் இனிய பழங்களை அளித்து பூஜித்தாள். அவள் ராமனிடம் தான் அந்த ஆஸ்ரமத்தில் இருந்த மஹான்களாகிய ரிஷிகளுக்கு சேவை செய்து வந்ததாகவும் அவர்கள் இந்த உலகத்தை விட்டுச்செல்கையில் அவளிடம் அங்கேயே தங்கி ராமனாக வந்துள்ள பரப்ப்ரம்மத்தை உபாசிக்கும்படியும் ராமன் அங்கு வருவான் என்றும் அப்போது அவள் தன் சரீரத்தை யோகத்தால் விட்டு மோக்ஷம் அடையலாம் என்றும் கூறியதாகத் தெரிவித்தாள். அவ்ரகளாலும் காணக்கிடைக்காத ராமனின் தரிசனம் அறிவற்ற நீச குலத்தவளான தனக்கு கிடைத்ததை எண்ணி சரிவர துதிக்ககூட சக்தியற்ற தனக்கு அருளுமாறு வேண்டினாள்.
அப்போது ராமன் அருளிச்செய்த பக்தியின் தத்துவம் பின்வருமாறு.
"என்னிடம் பக்தி செய்வதற்கு ஸ்த்ரீ புருஷ பேதமோ ஜாதி வர்ணாஸ்ரம பேதமோ காரணமாகாது. உண்மையான பக்தியே முக்கிய காரணமாகும். பக்தியில்லை என்றால் யாகம் தானம் தபஸ் இவைகளால் நான் அறியப்படுவதில்லை." இவ்வாறு கூறிய ராமன் பக்தியின் சாதனங்களை விவரித்தார்.
1. ஸதாம் ஸங்கதி:- சத்சங்கம்
2.மத்கதாலாப:- பகவானின் சரிதத்தை கீர்த்தனை செய்வது அல்லது கூறுவது.
3.மத்குணஈரணம்-பகவத்குணங்களை பரஸ்பரம் கூறுவது.
4.வ்யாக்யாத்ருத்வம் மத்வசஸாம் –என்னுடைய வார்த்தைகளை (கீதை உபநிஷத் முதலியன)
5.ஆசார்ய உபாஸனம் –குருவை தெய்வமாக நினைத்து வழிபடுவது சேவை செய்வது.
6.புண்ய சீலத்வம்-யமம் நியமம் இவைகளை அனுசரித்து பூஜிப்பது.
7.மம மந்த்ரோபாஸகத்வம்-என்னுடைய மந்திரத்தை உபாசிப்பது..
8.மத்பக்தேஷு அதிகபூஜா ஸர்வபூதேஷு மன்மதி: பாஹ்யார்த்தேஷு விராகித்வம் சமாதிஸஹிதம்-என்னுடைய் பக்தர்களை பூஜிப்பது, எல்லா உயிர்களையும் பகவத்ஸ்வரூபமாகக் காண்பது,வெளியுலகப் பொருள்களில் ஆசையற்று இருப்பது, சமம் தமம் முதலான குணங்களை உடையவராக இருப்பது.
9. எப்போதும் தத்வ விசாரம் செய்வது.
இதில் முதன்மையான சத்சங்கம் ஏற்பட்டால் மற்றவை தானே சித்திக்கும். பக்தியே முக்திக்கு சாதனம். உன்னிடம் பக்தி உள்ளதால் நானே வந்தேன். உனக்கு முக்தி சித்திக்கும் ." என்றார்.
பின்னர் சபரிஇடம் ராமன் சீதையைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்க சபரி ரானிடம் எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதவர்போல் கேட்பதாகக் கூறி சீதையை ராவணன் தூக்கிச்சென்றிருக்கிறான் என்றும் பக்கத்தில் ரிச்யமூக பர்வதத்தில் தன சகோதரன் வாலிக்கு பயந்து ஒளிந்துள்ள சுக்ரீவன சந்திக்கும்படி கூறி தன சரீரத்தை ராமன் முன்னிலயில் அக்னிப்ரவேசம் செய்து தன முன் ஒரு முஹூர்த்தம் நின்று தரிசனம் தருமாறு வேண்டி முக்தியடைந்தாள்.
பார்வதிக்கு இந்த வ்ருத்தாந்தத்தை விவரித்த பரமசிவன், இவ்வாறு ஒன்றுமறியா சபரியே பக்தி ஒன்றினாலேயே முக்தி அடைந்தாள் என்றால் மற்றவரைப்பற்றி கூறவும் வேண்டுமோ என்கிறார்.
ஆரண்ய காண்டம் முற்றிற்று.
No comments:
Post a Comment