மட்டப்பல்லியில் மலர்ந்த மறைபொருள் ( தொடர்ச்சி ) 125
முக்கூர் லஷ்மி நரசிம்மாசார்யார்
" மங்களாஷ்டகம் மலர்ந்த மட்டப்பல்லி "
எனவே ஹே கந்தர்வர்களே பரம மங்களமான இந்த மங்களாஷ்டகத்தை டன் இதை நான் முடித்துக் கொள்கிறேன். நீங்களும் எல்லாவற்றையும் பரம ச்ரத்தையுடன் கேட்டீர்கள். " மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள் " என்று இதற்கு மகுடம் சூட்டுகிறேன் உங்களுக்கு என்னால் சொல்லப்பட்ட இந்த மட்டப்பல்லி லஷ்மி ந்ருஸிம்ஹனின் வைபவத்தை யார் யார் சொல்கிறார்களோ, கேட்கிறார்களோ, அன்புடன் படிக்கின்றனர் அவர்களுக்கு மாலோலனான மட்டப்பல்லி நாதனின் அநுக்ரஹித்தார் ஸர்வ மங்களங்கள் டன் வைத்தல் வாழ்வாங்கு வாழ்ந்து மகிழ்வர் ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மியுடன் எம்பெருமான் அவர்களது மனமென்னும் கோயிலில் நித்யவாசம் பண்ணுவான்.
ஸ்ரீக்ருஷ்ணவேணி நதிக்கரையில் வாழ் மட்டப்பல்லி நாதன் வானதியில்மகிழப் போகிறான். வற்றாதஜீவநதி க்ருஷ்ணவேணி. வற்றாமல்விஷயங்களை அள்ளித்தரும் இது நதி வானதி. களங்கம் இரு நதிகளில் மூழ்கித் திளைக்கின்றானு ஸ்ரீராஜ்யலக்ஷ்மி நாதன். வற்றாத செல்வத்தை வாரி வழங்கட்டும் வானதிக்கு எம்பெருமான் என நாம் வாழ்த்தும் என்றார் நாரதர்.
கந்தர்வர்கள் நாரதரை தண்டனிட்டு வணங்கினர். நீங்கள் செய்ய இப்பேருபகாரத்திற்கு கைமாறு மாறனும் காணகில்லான். தங்களைப் பற்றிப் புகழ்வதும், புத்தியில் கொள்வதும், பொங்கும் புகழ் சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் நாங்கள் பெற்றதற்கு என்று பணிவன்புடன் தெரிவித்தனர்.
நாரதரும் நான் தேவலோகம் செல்கிறேன். நீங்களும் என்னுடன் வருகிறீர்களா. ? இல்லை பாரத தேசத்திலும் மற்றைய க்ஷேத்திரங்களை கண்டுகளிக்க ஆசைப்படுகிறார்கள் என வினவினார்.
இதைக் கேட்ட இரு கந்தர்வர்களும் " என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றின்றி காணாதே" என்றபடி மட்டப்பல்லி நாதனை ஸேவித்த கண்கள் மற்றொன்றைக் பார்க்க மறுக்கின்றது. ஆகவே அடியோங்கள் இணக்கம் ஒரு மண்டலம் தங்கி க்ருஷ்ணவேணி ஸ்நானம் செய்து எம்பெருமானை ப்ரதக்ஷிணம் செய்து சேவிக்க எண்ணியுள்ளோம்" என்றனர்.
நாரதரும் இதைக் கேட்டு பரமானந்தம் அடைந்து அவர்களுக்கு ஆசி கூறி, " நரஹரி ரூபா நாராயணா, நவ மோஹன ரங்கா நாராயணா" என பாடிக் கொண்டே அந்தரிக்ஷத்தில் சென்று மறைந்தார். கந்தர்வர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க க்ருஷ்ணவேணியின் நீராடி எம்பெருமானை தினமும் கண்களால் ஸேவித்து ப்ரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தனர்.
சில நாட்கள் கழிந்தது..
( தொடரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment