அத்யாத்ம ராமாயணம் - அயோத்யா காண்டம் அத்தியாயம் 2
தசரதர் வசிஷ்டரிடம் ராமனுக்கு ம்பட்டபிஷேகம் செய்ய உத்தேசித்திருப்பதைக் கூறினார். பரதனும் சத்ருக்னனும் கேகய நாட்டிற்கு சென்றிருந்தாலும் தான் வயோதிகம் அடைந்ததாக உணர்வதால் அடுத்த நாளே வசிஷ்டரின் அனுமதியுடன் பட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் அதை ராமனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். வசிஷ்டரும் ராமனைக் காணச் சென்றார்.
அவரைக் கண்ட ராமன் கூப்பிய கரத்துடன் வரவேற்று பாதபூஜை செய்யும் போது அவர் கூறியது என்னவென்றால், தனக்கு ராமனும் சீதையும் மஹாவிஷ்ணுவும் லக்ஷ்மீதெவியும் எனத்தெரியும் என்றும், ராவண வதத்திற்காகவே எடுத்த அவதாரம் என்பதை யாருக்கும் தெரிவிக்காமல் அவருடைய குருவைப்போலவே பணியாற்றுவதாகவும் கூறினார்.
மேலும் உலகநாயகனும், வாக்கு, மனம் இவைகளுக்கு எட்டாதவனும் ஆன ப்ரம்மா முன் கூறியபடி யோக மாயையுடன் கூடிய சுத்த ஸத்வ உருவை வந்திருக்கிறார் என்றும், தான் அவருடைய குலகுரு என்ற பாத்திரத்தை அவருடைய சமீபத்தில் இருக்கவே எடுத்துள்ளதாகவும், தனக்கு குருதக்ஷிணை என்று ஒன்றை அளிக்க விரும்பினால் இந்த உலகை மயக்கும் அவருடைய யோக மாயை தன்புத்தியை மயக்காதிருக்க வேண்டும் என்ற வரத்தை வேண்டினார்.
பிறகு வசிஷ்டர் ராமனிடம் மறுநாள் நடைபெறவிருக்கும் பட்டாபிஷேகத்தைப் பற்றி தெரிவித்து அதற்கான விரதம் ,முதலியவைகளை மேற்கொள்ளுமாறு கூறினார்.
இதற்கிடையில் தேவர்கள் ஸரஸ்வதியிடம் சென்று பிரம்மாவின் கட்டளைப்படி மந்தரையின் வாக்கிலும் கைகேயியின் மனதிலும் புகுந்து பட்டபிஷேகத்திற்குத் தடை உண்டு பண்ணி ராமன் ராவணவதத்திற்காக தண்டகாரண்யம் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்துமாறு கூறினர்.
ஸரஸ்வதியும் அவ்வாறே செய்ய மந்தரை தற்செயலாக மாளிகையின் மேல் தளத்திற்குச் சென்று அங்கிருந்து பட்டபிஷேக ஏற்பாடுகளை அறிந்தாள். பிரகு கைகேயியிடம் சென்ரு அவள் மனதைக் கலைத்தாள்.
பிறகு அவளிடம் அரசர் வாக்களித்த இரு வரங்களைக் கேட்டு அதன் மூலம் ராமன் பதினான்கு வருடம் காடு செல்லவும் பரதன் முடிசூட்டிக் கொள்ளவும் வழி வகுக்குமாறு கூற, ஏற்கெனவே தேவர்கள் சதியால் மனமயக்கம் கொண்ட கைகேயி நகைகளைக் களைந்து .பட்டாடைகளைத் துறந்து கோபக்ருஹத்திற்குச் சென்று மந்தரையிடம் அரசர் தன் கோரிக்கைக்கு சம்மதிக்கும் வரை அது போலவே இருக்கப் போவதாக க் கூறினாள் . மந்தரையும் அவள் திட்டம் நிறைவேற வாழ்த்துக் கூறினாள்.
இந்த அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகம் பின்வருமாறு.
தீரோ அத்யந்த தயான்விதோ அபி ஸகுணாசாரான்விதோ வாஅதவா
நீதிக்ஞோ விதிவாத தேசிகபர: வித்யாவிவேகோ அதவா
துஷ்டானாம் அதிபாப பாவித தியாம் ஸங்கம் ஸதா சேத் பஜேத்
தத்புத்த்யா பரிபாவிதோ வ்ரஜதி தத் ஸாம்யம் க்ரமேண ஸ்புடம்
அறிவாளியானாலும், கருணை உள்ளம் படைத்தவனானாலும், குணவான் ஆனாலும், ஒருவன் எப்போதும் கெட்டவர்களுடனே சகவாசம் கொண்டானாகில் நாளடைவில் அவர்களைப் போலவே ஆகிவிடுகிறான் எனபதற்கு இது ஒரு உதாரணம்.
No comments:
Post a Comment