6h ·
(பிணைக்க வா....)
வெறும்கயி றென்னையும் கட்டிடுமோ?
வீண்முயற்சியும் வேண்டுவதோ?
அருந்தவத் தாரும் அறியவில்லை−
அதுபோலுனக்கும் புரியவில்லை!
கரும்பே கனியே எனும்பேச்சால்
கண்ணன்வசமும் ஆவேனோ?
அரும்பும் ஆசையின் விழிநீரே
அடியேனுவப்பேன் தெரியாதோ?
என்னைக் கட்டவு மறியாமல்
ஏனோயாவரும் அலைகின்றார்!
தன்னைக் கொண்டுக் கட்டாமல்,
தாம்புக்கயிறும் தேடுகின்றார்!
அன்னை அல்லவா, என்கின்றாய்!
அகப்படுவெனக் கென்கின்றாய்!
பின்னை, எனக்கெது மார்கம்இங்கே?
பிணைத்துக்கொள்கிறேன், உன்கயிறெங்கே?..

No comments:
Post a Comment