Friday, June 18, 2021

Advaita, visishtadvaiata & dvaita

A beautiful  explanation of our religion
இரண்டற்ற ஒருமை - அத்வைதம்
சிறப்புடை ஒருமை - விசிஷ்டாத்வைதம்
இருவேறு இருமை- துவைதம்

எடுத்துக் காட்டு:-

 இலை கிளைகளுடன் கூடியது - மரம்
மரத்தின் அங்கங்கள் யாவும் மரமே, வேறுவேறு பொருள்களின் இணைப்பு அல்ல மரம், ஒரே வேரின் பரிமாணங்கள்.- இது அத்வைதம்

இலை, கிளை, மரத்தின் அங்கங்களானாலும் தனித்தன்மை கொண்டவை. சிறப்புத்தன்மை கொண்டு ஒன்றானவை. ஆயின் வேர் ஒன்றே- இது விசிஷ்டாத்வைதம்

இலை, கிளை, மரம் வேறு வேறு ஆயினும் வேர் ஒன்றே. - இது துவைதம். 

ஜீவாத்மா, பரமாத்மா ஒன்றே. இறுதியில் முக்தி, இரண்டறக் கலத்தல்- இது அத்வைதம்

ஜீவாத்மா, பரமாத்மா ஒன்றேயாயினும் தனிக் குணங்களால் வேறுபாடுகள் கொண்டவை. சரணாகதி பக்தியால் இறுதியில் மோக்ஷம் - இது விசிஷ்டாத்வைதம்

ஜீவாத்மா, பரமாத்மா வேறானவை. 
ஜீவாத்மா பக்தி புரிந்து, இறுதியில் கர்ம வினைகள் நீங்கி வீடுபேறு. - இது துவைதம். 

வேதம் அநாதியானது.
வேதத்தின் அந்தம் வேதாந்தம். 
வேதாந்தத்தின் விளக்கங்கள்
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்றும் . 

மரநாற்காலி ஒன்றை எடுத்துக்காட்டாக கொள்வோம். 
அத்வைதம் கூறுவது:-
நாற்காலி>மரம்>மரத்தின் அணுக்கள்>அணுக்களின்நுண்கரு>
நுண்கருவின் சக்தி>சக்தியே பிரம்மம்.
எல்லாம் பிரம்மம், நாற்காலியின் தோற்றம் மாயை. 

விசிஷ்டாத்வைதம் கூறுவது:-
நாற்காலி>மரம்> மரத்தின் இயல்பு நிலை வேறு>அதனால் ஆன நாற்காலியின் இயல்பு நிலை வேறு>ஒரே சக்தியின் சிறப்பான மாறுபாடு> சக்தியே பிரம்மம்

துவைதம் கூறுவது:-
நாற்காலி தோற்றம், பயன்பாடு, பண்புகள் வேறு> மரம், மரத்தின் தோற்றம், மரத்தின் பண்புகள் வேறு> வேர் ஆகிய சக்தியினின்றும் வளர்ந்த மரமும் அதன் கைவினைப்பொருளும் வேறு வறானவை> சக்தியே பிரம்மம். 

சுருக்கமாக
 ஞான மார்க்கம் அத்வைதம்
சரணாகதி பக்தி மார்க்கம் விசிஷ்டாத்வைதம்
பலன் நோக்காத கர்ம மார்க்கம் துவைதம்.  

No comments:

Post a Comment