*"பகவத் ஆராதனையும் ஸ்வதர்மமும்":*
*சிருங்கேரி சங்கராச்சார்யார் ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் வாக்கு :*
-------------------------------
*பொதுவாக, பகவானின் விக்ரஹங்களுக்குப் பூஜை செய்வதையோ, அவனுடைய அவதாரங்களில் அவன் செய்த அற்புதங்களை நினைவு கூர்வதையோ மட்டும் மக்கள் பகவானின் ஆராதனை எனக் கருதுகிறார்கள்.*
ப்ருஹந்நாரதீய (உப) புராணம் வாக்கு :
(3---80.)
*ஆனால், விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்வதும் பகவானின் ஆராதனைதான்.*
*"எவனொருவன் ஆசையை விட்டு, வேதத்தில் விதிக்கப்பட்ட தன்னுடைய ஆச்ரமத்திற்கு உகந்த கர்மாக்களை பகவானின் திருப்திக்காகச் செய்கிறானோ, அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்".*
-------------------------------
*தனக்கு சாஸ்திரத்தின் மூலம் விதிக்கப்பட்ட கர்மாக்களை*
*"பகவானுக்கு அர்ப்பணம்"*
*என்ற மனப்பாங்கில் செய்வது,*
*"பகவானின் பணியாளனாக இருப்பது"-----*
*என்ற வித பக்தியில் அடங்குகிறது.*
-------------------------------
Highlight---1 :
*எனவே, பகவானின் நாமஸ்மரணம் போன்ற வேறுவிதமான வகையில் பகவானைப் பூஜிக்கிறோம் என்பதால், நமக்குக் கர்மாக்கள் தேவை இல்லை என்று எண்ணி, நாம் நமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களைப் புறக்கணித்தால் அது மிகவும் தவறு.*
*ஆச்ரம தர்மத்திற்கு ஏற்றவாறு உள்ள கர்மாக்களை பகவானே நமக்கு விதித்துள்ளதால், அவற்றைச் செய்யாமல் இருப்பது, அவனுடைய ஆணையை மீறுவதாகும்.*
*அதனால், பகவான் நமக்கு தண்டனை அளிப்பது நிச்சயம்.*
-------------------------------
Highlight---2 :
*மோக்ஷத்தைத் தரும் ஞானம், பகவானின் அருள் இல்லாமல் கிடைக்காது.*
-------------------------------
ஆதாரம் :
*பக்தி---*
*ஞானம்---*
*முக்தி*
*சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் அருளிய கட்டுரைகள்.*
*பக்கம்----56, 57, & 61.*
*ஶ்ரீவித்யாதீர்த்த ஃபவுண்டேஷன்,*
*சென்னை.*
-------------------------------
No comments:
Post a Comment