Courtesy:Smt.Padma Gopal
பகுதி −6..)
இப்படி, பூஜைகள் செய்யும் போது, ஏற்படும் குறைகளை எப்படி நிவர்த்தி செய்து கொள்வது?..
நம் நிலையை உணர்ந்து, மிகவும் கருணையுடன், அதற்கான வழியையும் நமது பெரியோர்களே காட்டித் தந்துள்ளார்கள்..
நாம் செய்கின்ற அபசாரங்களை எல்லாம் வரிசைப்படுத்தி, அந்தக் குறைகளை எல்லாம் பொருட்படுத்தாது, இந்தப் பூஜையை, நீயே பரிபூர்ணமானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட, ஒரு இரண்டு வரி ஸ்லோகத்தில், அதை அருளியுள்ளனர்..
அந்த ஸ்லோகம் இதுதான்...
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஜனார்த்தன
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே..
இதற்கென்ன பொருள்?
மந்த்ர ஹீனம் − மந்திரத்தில் குறைபாடு
க்ரியா ஹீனம் − செய்கின்ற க்ரியைகளில் குறைபாடு
பக்தி ஹீனம் − ச்ரத்தையோடு செய்ய வேண்டிய பக்தியில் குறைபாடு
(ஆகிய இவற்றுடன்)
தே − உனக்கு
மயா − என்னால்
யத் பூஜிதம் −இந்த விதமாகச் செய்யப்பட்ட பூஜையை
(பொருட்படுத்தாமல்)
தேவ − ஹே இறைவா!
பரிபூர்ணம் − பரிபூரணமாகதாக
ததஸ்து − ஆக்கிக்(ஏற்றுக்) கொள்வாயாக..
இவ்வளவுதான்..
பூஜையின் முடிவில், இதையேனும் ஆத்மார்த்தமாகச் சொல்லிக் கொண்டால், நமது நிலையை உணர்ந்து, இறைவன் நமது குறைகளை மன்னித்து, நமக்கு நிச்சயம் அனுக்ரஹிப்பான்.
ஆனால் ஒன்று..
தெரிந்து அசிரத்தையோடு க்ரியைகளைச் செய்துவிட்டு "மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்" என்கிற எண்ணம் நிச்சயம் நமக்கு இருக்கக்கூடாது.
தவறி செய்யும்போது, ப்ராயச்சித்தமாக இதைச் சொல்லிக் கொள்ளலாம்..
இப்பொழுது, ஒரு சந்தேகம் நமக்கு இங்கு வரும்..
"ஜனார்த்தனா" என்ற சொல் விஷ்ணுவைதானே குறிக்கிறது!..
நான் செய்யப் போவது சிவ பூஜை ஆயிற்றே..
கணேச பூஜை ஆயிற்றே..
இதற்கு என்ன செய்வது என்று தோன்றலாம்..
அந்த "ஜனார்தனா" என்ற இடத்தில் "க்ருபாகரா" என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
"க்ருபாகரா" என்றால் "கருணை வடிவானவனே" என்று பொருள்.
இது எந்தத் தெய்வத்திற்கும் பொருந்துகின்ற சொல்தானே?
அதுபோல, லக்ஷ்மி பூஜை, தேவி பூஜை இவையெல்லாம் செய்யும்போது,
"க்ருபாகரா" என்று ஆண்பால் இல்லாமல்,
"க்ருபாகரி" என்று முதல் வரியிலும்,
அடுத்த வரியில் வருகின்ற "தேவ" என்னுமிடத்தில், "தேவி" என்றும் மாற்றிவிடலாம்..
இப்பொழுது எந்தப் பூஜையானாலும், நம்மை #அறியாமல் செய்கின்ற எந்தத் தவற்றுக்கும் நாம் அஞ்ச வேண்டியதில்லை..
அதுதான், "க்ருபாகரா", "க்ருபாகரி" என்று சொல்லி அவர்கள் நெஞ்சில் இடம் பிடித்து விட்டோமே!..
இனியுமா நம்மை விட்டுவிடுவார்கள்?..
No comments:
Post a Comment