____________________________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*
*தெய்வத்தின் குரல்*
(1588). 12.10.2020
*ஸௌந்தர்ய லஹரி* - பகுதி - 177
________________________
*கர்ப்பூர ஆரத்தி* - பகுதி - 2
________________________
*ஸ்ரீ மஹா பெரியவா*
6 / 7. பக்கம் 1306
***************************************************
*தெய்வத்தின் குரல*் - *ஆறாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*ஸெளந்தர்ய லஹரி*
*அனைத்துப் பலன் அருளும் அன்னை வழிபாடு*
(நேற்று தொடங்கிய இந்த பாகத்தின் கடைசி உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)
'ஆகிவிடுகிறான்' என்றால் அவனாகவே அப்படி ஆகிவிடுவானா என்ன? அவள்தான் ஆக்குகிறாள்! உபாஸனா பலனாக இப்படி ஆகிறான் என்றால் உபாஸ்ய தெய்வம் அப்படி ஆக்குகிறது என்றே அர்த்தம். அத்வைதத்திலிருந்து த்வைதமாக இவனை எவள் இவல்யூஷனில் வெளியிலே விட்டாளோ அவளேதான் இன்வல்யூஷனில் இவனை உள்ளே இழுத்துக்கொண்டும் அத்வைதமாக்க முடியும். அவளே கதி என்று உபாஸிக்கிறவனை, பஜிக்கிற பஜன்வானை அப்படிப் பண்ணுகிறாள் என்கிறார்.
ஆனாலும் அத்வைத ஆசார்யாள் இங்கேயும் தம்முடைய ஸமய ஸமரஸத்தில் 'பசு' 'பாசம்' என்று பிற்காலத்தில் சைவ ஸித்தாந்தத்தில் பெரிசாக டெவலப் ஆன தத்வங்களின் பெயரையே குறிப்பிட்டிருக்கிறார். சக்தி மஹிமையை ஓஹோ என்று சிவனுக்கு மேலே சொல்லிக்கொண்டே போனவர் கடைசியில் அவளை சிவனுக்கு அடங்கிய பத்னியாகவே கொண்டுவந்ததற்கேற்க, சாக்த தத்வங்களை நிறையச் சொல்லிக்கொண்டு வந்தவர் முடிக்கும்போது சைவ ஸமயத் தத்வங்களில் இரண்டைச் சொல்லியிருக்கிறார்.
ஒன்று தோன்றுகிறது. மஹா சக்தியான பராசக்தியை ஏன் அவளுடைய ஸ்தோத்ரத்தின் முடிவில் சிவனுடைய தர்ம பத்னி என்றே வைத்துக் கொஞ்சம் அடக்கிச் சொல்லணும்? ஒரு காரணம் சொன்னேன், லோகத்திற்கான ஸ்த்ரீ தர்மத்தைக் காட்டித்தான் முடிக்கணும் என்பதால், என்று. இன்னொன்று என்ன தோன்றுகிறது என்றால் " ஆசார்யாள் விநய ஸ்வரூபம், விநய ஸ்வரூபம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிவந்திருக்கிறேனல்லவா? அதனாலே அவருக்கு இஷ்ட தெய்வமான அம்பிகையையும் முடிவாக விநய மூர்த்தியாகவே காட்டவேண்டும் என்று தோன்றியிருக்கலாம்! இன்னொரு தினுஸில் சொன்னால்: அம்பாளேதானே அவராகி, அவரைப் பாடப் பண்ணினதும்? அவளுக்கு முடிவிலே தன்னைப் பதியான பரமேச்வரனுக்கு ஆத்மார்ப்பணம் பண்ணி விநயத்தோடு அடங்கியிருக்கிற ஸதியாககக் காட்டினால்தான் த்ருப்தியாயிருந்திருக்கும்! அதனால் இப்படிப் பாடச் செய்திருப்பாள்!
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)
*************************
*கர்ப்பூர ஆரத்தி*
(நேற்றைய இந்த பாகத்தின் ஆரம்ப உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)
*பரம மங்களமான ஸ்தோத்ரத்தின் பூர்த்தி ஸ்தானத்திற்கு வந்துவிட்டோம்*.
லஹரி-ப்ரவாஹம் என்றால் அது ஒரு ஸமுத்ரத்தில் போய் ஸங்கமித்துப் பூர்த்தியாகத்தானே வேண்டும்? அப்படி இந்த வாக் லஹரியானது சப்த ப்ரஹ்ம ரூபிணியான ஸமுத்ரத்தில் ஸங்கமிப்பதாகப் பூர்த்தி பண்ணியிருக்கிறார். 'ஜல நிதி' என்று ஸமுத்ரத்தைச் சொல்வது தெரிந்திருக்கலாம். 'ஸலிலம்' என்றாலும் ஜலந்தான். "ஸலில நிதி" என்றே ஆசார்யாளும் நூறாவது ச்லோகத்தில் சொல்லி, சதகமாக முடித்திருக்கிறார்.
ப்ரதீப–ஜ்வாலாபிர்–திவஸகர–நீராஜந–விதி:
ஸுதாஸூதேச்–சந்த்ரோபல–ஜல–லவை–ரர்க்ய ரசநா |
ஸ்வகீயை–ரம்போபி: ஸலிலநிதி–ஸெளஹித்ய–கரணம்
த்வதீயாபிர்–வாக்பிஸ்–தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் ||
[(வாசாம் ஜனனி) வாக்குக்குப் பிறப்பிடமான தாயே! (திவஸகர) பகலைப் பிறப்பிப்பவனான ஸூர்யனுக்கு (ப்ரதீப-ஜ்வாலாபி: ) விளக்கின் ஒளியால் (நீராஜந விதி: ) தீபாராதனை உபசாரம் செய்வது போலவும், (ஸுதா ஸூதே: ) அமுதைப் பிறப்பிக்கும் சந்திரனுக்கு (சந்த்ரோபல) சந்திரகாந்தக் கல்லின் (ஜல லவை: ) நீர்த்துளிகளால் (அர்க்ய ரசநா) அர்க்ய உபசாரம் செய்வது போலவும், (ஸலில நிதி) கடலுக்கு (ஸ்வகீயை: ) அதனுடையதேயான (அம்போபி: ) நீரால் (ஸெளஹித்யகரணம்) தர்ப்பண உபசாரம் செய்வது போலவும் (த்வதீயாபி: ) உன்னுடையதேயான (வாக்பி: ) வாக்குகளாலேயே ஆன (இயம்) இந்த (தவ) உனது (ஸ்துதி) துதி [உள்ளது].]
(இனி இன்றைய தொடர்ச்சி)
"மற்றக் கவிகளுக்கு வித்யாஸமாக ஒன்றைச் செய்து காட்டுவதில் ஆசார்யாள் நிபுணராச்சே! மற்றவர்கள் முடிவாகச் சொல்லும் பலச்ருதியில் அவர் என்ன விநோதம் பண்ணியிருப்பார்? மற்ற ஸ்தோத்ரகர்த்தாக்கள் ஸ்தோத்ர தேவதைக்கு அடிமையிலும் அடிமையாயிருக்கிற பக்தர்கள் தானென்றால் இவரோ அந்த தேவதையும், அவளும் ஆச்ரயித்திருக்கிற ஈச்வரனும் ஒன்று சேர்ந்த அவதாரமாச்சே! மற்றவர்களே தங்களுடைய ஸ்தோத்ரங்களுக்குப் பெரிசாகப் பலன்கள் சொல்லும்போது, இவர் இன்னும் எத்தனை உசத்தியாகச் சொல்லியிருப்பார்?" என்று நினைத்து நாம் கடைசி ச்லோகத்தைப் பார்த்தால் -–
மற்ற எல்லாக் கவிகளை, ஸ்தோத்ர கர்த்தாக்களையும் விட ஒரே எளிமையாக, தாம் ஒன்றுமேயில்லை என்று ஆசார்யாள் தம்மைத் தெரிவித்துக்கொள்கிறார்! "ஏதோ நானும் ஸ்தோத்ரம் என்று ஒண்ணைப் பண்ணினால் இதுக்குப் போய்ப் பலனாவது, ச்ருதியாவது? அதெல்லாம் ஒண்ணும் சொல்ல எனக்கு லாயக்கில்லை. அவளை உபாஸிக்கிற பஜனவானுக்கு அவள் தருகிற பலன்களைச் சொன்னேனல்லவா? அது போறும். அதோட நிறுத்திக்கறேன். கடைசியா இப்ப என்ன பண்ணப் போறேன்னா லோகத்திலே ஒசத்தியோ, தாழ்த்தியோ எது எங்கே யாராலே நடந்தாலும் அடியாதாரத்திலே அதெல்லாமும் அவ கொடுக்கற சக்தியிலே, அவளுடைய ஸங்கல்பத்துலே நடக்கறதுதான். எல்லாமே ஒசத்தியா இருந்தா அவளோட லீலா வைசித்ரியத்துக்கு [விளையாடலின் விதவித ருசிக்கு]ப் போறல்லே-ங்கறதுக்காகத் தாழ்த்தியாயும் அநேகம் தூண்டிவிட்டுப் பண்ண வெச்சு, அதனாலேயே ஒசந்ததுகளை இன்னம் எடுப்பாத் தூக்கி வெச்சுக் காட்டறா. அப்படி இது ஏதோ காமா சோமான்னு அவ தூண்டி வெச்சு வரப்பண்ணின ஸ்தோத்ரம். தரம் எப்படியிருந்தாலும் ஸகலத்துக்கும் பிறப்பிடம் அவள் தாங்கிறதுனாலே இதுக்கும் அவ தாய். 'வாக்குக்கெல்லாம் அவ பிறப்பிடம்; இது வாக்காலான ஒரு ஸமாசாரம்'-னா இதுக்கும் அவ தாய், அவளுக்கு இது கொழந்தைதானே? இந்தக் கொழந்தையை அவ காலிலேயே போட்டு ஸமர்ப்பணம் பண்ணித்தான் முடிக்கப் போறேன்" என்கிற ரீதியிலே நினைத்து நூறாம் ச்லோகத்தைச் செய்திருக்கிறார். முன்னே "ஜபோ ஜல்ப:" ச்லோகத்திலே [ச்லோ-27] அம்பாளுக்கு ஆத்ம ஸமர்ப்பணம் செய்தவர் இங்கே முடிவாக ஸ்தோத்ரத்தையும் ஸமர்ப்பணம் பண்ணியிருக்கிறார்.
இது அம்பாளுக்கு ஸமர்ப்பிக்க யோக்யதை வாய்ந்தது என்ற அளவுக்குங்கூட அவருக்கு அஹம்பாவ எண்ணம் இல்லை. இதைப்போய் ஒரு பெரிய விஷயமாக அந்த மஹா பராசக்திக்கு ஸமர்ப்பணம் பண்ணுவது அசட்டுத்தனம் என்றே நினைத்திருக்கிறார். ஆனாலும் ஏற்கெனவே அவர் லோகத்தில் இப்படிப்பட்ட மூன்று அசட்டுத்தனங்களைப் பார்த்திருந்த தைர்யத்தில்தான் இப்படிப் பண்ணுகிறார். அந்த மூன்று precedent [முன்னோடிகள்] என்ன?
முதலில் : "ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜன விதி:" – 'கர்ப்பூர தீபம் ஏற்றி ஸூர்யனுக்கு நீராஜனம் என்று காட்டும் உபசாரம்'. 'திவஸம்' என்றால் பகல். பகல் பொழுதை உண்டாக்குவதால் ஸூர்யன் 'திவஸகரன்'. 'திவாகரன்' என்றும் சொல்வது.
ஸங்க்ராந்தி பூஜை ஆசார்யாள் நிறையப் பார்த்திருக்கிறார். அவரே பண்ணியும் இருப்பார். அதிலே ஒரு கோலத்திலே ஸூர்ய பிம்பம் எழுதி அதற்கே பூஜை பண்ணினாலும் கர்ப்பூராரத்தி மட்டும் ஆகாசத்திலே ப்ரத்யக்ஷமாகத் தெரிகிற ஸூர்யனுக்கும் காட்டுவது வழக்கம்.
மற்ற மூர்த்திகளை, அதுவும் இருட்டாக கர்ப்ப க்ருஹத்திலிருக்கிற மூர்த்திகளை கர்ப்பூராரத்தி வெளிச்சம் போட்டுக் காட்டும். ஆனால் ஸூர்யனை? ஸ்வயஞ்-ஜ்யோதிஸாக ப்ரகாசத்தோடு இருக்கிற அதை இந்த இத்தனூண்டு கர்ப்பூர வில்லை வெளிச்சம் போட்டுக் காட்டணுமா என்ன? அதை இது ப்ரகாசிப்பிப்பதில்லை என்பது மாத்திரமில்லை; அந்த ஸூர்யனின் ப்ரகாசத்தில் இதற்கு ஸ்வயமாக உள்ள ப்ரகாசமும் மங்கிப்போய் அழுது வடிகிறது! "வாக்சக்தியின் பூர்ண ஜ்யோதிஸான அம்பாள் முன்னே கர்ப்பூர வில்லை அளவேயுள்ள நம்முடைய ஸ்தோத்ர வாக்கை ஸமர்ப்பிப்பதில் அவளை ஒன்றும் ஸ்தோத்ரம் ப்ரகாசமாக விளக்கிவிடவில்லை; ஸ்வபாவமாக இந்த வாக்குக்கு உள்ள விளக்க சக்திகூடக் கூசிக் குறுகி மங்கிப் போய்விட்டது!" என்று ஆசார்யாள் நினைக்கிறார். அப்படியிருந்தும் சிஷ்டர்களே முதற்கொண்டு ஸங்க்ராந்தி பூஜையில் ஸூர்ய பகவானுக்குக் கர்ப்பூரம் காட்டுவதைப் பார்த்து, தஹித்தெடுக்கிற ஸூர்யனே அதை ஏற்றுக் கொள்ளும்போது, குளிர்ந்த மனஸு படைத்த அம்பாளும் கருணையோடு இதை ஏற்றுக்கொள்வாள் என்பதால் ஸ்தோத்ர ஸமர்ப்பணம் செய்கிறார்!
எப்போதும் உஷ்ணமான ஸூர்யனைச் சொன்னால் உடனே சீதள சந்த்ரனைச் சொல்வது ஆசார்யாள் வழக்கம். அப்படியொரு குளிர்ந்த நெஞ்சு! இங்கேயும் இரண்டாவது precedent சந்த்ரனை வைத்துச் சொல்கிறார். யாரோ பெரியவர் அம்பாளுக்குப் பெளர்ணமி பூஜை பண்ணுவதை அவர் பார்த்தார். அப்போது பரிவார பூஜையிலே அம்பாளின் வாஸ ஸ்தானமாக பாவிக்க வேண்டிய பூர்ணிமை சந்த்ரனுக்கும் அந்தப் பெரியவர் பூஜை பண்ணினார். ஒரு பூஜை என்றால் அதில் தீர்த்தத்தைக் கொண்டு மூன்று உபசாரங்கள் உண்டு. முதலில் 'பாத்யம்' என்று பாதத்தை அலம்புவது; அப்புறம் 'அர்க்யம்' என்று ஹஸ்தத்தில் தீர்த்தம் விடுவது.; மூன்றாவதாக 'ஆசமநீயம்' என்று முகத்திலே கொடுப்பது. 'அர்க்யம்' என்றால் 'மதிப்பு மிக்கது' என்று அர்த்தம். அதனால் அந்த உபசாரத்திற்கு விசேஷம் அதிகம். அந்தப் பெரியவர் அர்க்யத்திற்கு என்ன பண்ணினாரென்றால், அவர் பக்கத்திலே ஒரு சந்திரகாந்தக் கல் இருந்தது.
சந்த்ரகாந்தம், ஸூர்யகாந்தம் என்று இரண்டு கல்லு பழைய புஸ்தகங்களில் சொல்லியிருக்கிறது. அந்த நாளில் இருந்து இப்போது இல்லாமல் போய்விட்டவை என்று வைத்துக்கொள்ளலாம். ஸூர்யகாந்தம் ஸூர்யரச்மிகளைக் காந்தம் மாதிரி ஆகர்ஷித்து இழுத்து வைத்துக்கொண்டு நெருப்பாகக் கக்கும். லென்ஸில் ஸன்லைட்டை கான்ஸெண்ட்ரேட் பண்ணினால் பொறி வரவில்லையா? அதையே இன்னும் தீவிரமாகப் பண்ணுவது ஸூர்யகாந்தம். சந்த்ரகாந்தம் இதற்கு நேர்மாறு. சந்த்ரிகையைத் தனக்குள்ளே ஆகர்ஷித்து ஜில்லென்று ஜலமாக வடிக்கும்.
அப்படி ஒரு சந்த்ரகாந்தக் கல் அந்தப் பெளர்ணமி சந்த்ர கிரணங்களை உள்ளே வாங்கிக்கொண்டு ஜலம் வடிப்பதைப் பெரியவர் பார்த்தார். உடனே அந்த ஜலத்தையே எடுத்து சந்த்ரனுக்கு "அர்க்யம் ஸமர்பயாமி" என்று கொடுத்துவிட்டார்: "ஸுதாஸூதேச்–சந்த்ரோபல ஜலலவை: அர்க்ய ரசநா" என்று இதைத்தான் ஆசார்யாள் சொல்கிறார். 'சந்த்ர உபலம்' ஸந்தியில் 'சந்த்ரோபலம்' ஆகிறது. 'உபலம்' என்றால் கல். சந்த்ரகாந்தத்தைத்தான் அப்படிச் சொல்கிறார். அம்ருதத்தை உண்டாக்குவதால் சந்த்ரனுக்கு 'ஸுதாஸூதி' என்று பேர்.
(இந்த பகுதியின் மேல் உரைகள் மேலும் நாளை தொடரும்)
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
*********************************************
*"Deivathin Kural*-Part-6*
*Maha Periyava's Discourses on Soundarya Lahari*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.
*Part : SOUNDARYA LAHARI*
*அனைத்தும் பலன் அருளும் அன்னை வழிபாடு*
*Obeisance to AmbãL that Grants All Benefits*
(This chapter's yesterday's last paragraphs)
If we say that he becomes, does it mean that he becomes so on his own? No, she causes him to become one with herself as a result of his devotion. Then one who pushed him in to duality from Adwaitam in to evolution, pulls him back unto oneness in involution as a prerogative of hers! She does that to the one who adores her as the only resort. Still here too, this ÃchãryãL of Adwaitam is using the two terms 'Pasu and Pãsam' which were much enlarged in Saiva Siddhãntam in later days, in his equanimity towards other's points of views. He who had placed Shakti far above Siva in his poems all along by expanding on Sãkta line of philosophy in this Soundarya Lahari, true to depicting her as a woman much subservient to her husband, has made use of two typical terms of value in Saiva Siddhãntam.
One thing occurs to me as to why should he limit that unlimited power of Parãshakti as a woman, as being obedient to her husband. One reason I told you earlier was the need to make it according to the way it should ideally happen in the world. Another idea that occurs to me is that, as I have been repeatedly emphasizing the fact that ÃchãryãL is the very personification of 'Vinaya' – that is modesty and humbleness it is natural that he would wish to portray her also in a similar mould. Another way of looking at it is that, she is the one who has caused him to sing her praise. She would have been satisfied only by a depiction of her as the very demure, modest and subservient wife of her husband, in the rightness of the ideal. So, she would have induced ÃchãryãL to depict her as a model of Vinaya thus!
(This chapter ends here)
*************************
*கற்பூர ஆரத்தி*
*Burning Camphor as 'Ãrati*
(This chapter's yesterday's beginning texts once again today)
*We have come to the end of a most auspicious stotra – the Soundarya Lahari*.
A flowing river has to end in the ocean and then only it can be considered as wholesomely beneficial, isn't it? This flow of the sound of words must finish in the 'Shabda Brhmam'. That is what the poet has done. The Bible says, 'In the beginning there was the word and word was with God and the word was God'! So this flow of words, of Soundarya Lahari, The Flow of Beauty, about the Ultimate must end in God. The ocean is called 'Jala Nidhi', in which 'Jala' means water and 'Nidhi' means a fund or repository. 'Salila' also means water and hence 'Salila Nidhi' means an ocean. ÃchãryãL has finished his 100th sloka of the flow of beautiful words, by offering obeisance to the ocean – 'Salila Nidhi' by its own water / its own words that is, the words of God, as a 'Sadakam' meaning a 'collection of hundred poems'!
The 100th sloka of Soundarya Lahari is as follows:
प्रदीप-ज्वालाभिर्-दिवसकर-नीराजन-विधि:
pradipa jwãlãbhir divasakara neerãjana vidhi:
सुधासूतेस्चन्द्रोपलजललवैरर्घ्य रचना |
sudhãsoothe: chandropala jalalavai: arghya rachana
स्वकीयैरम्भोभि: सलिलनिधि सौहित्यकरणं
svakeeyai: ambhibhi: salilanidhi souhitya karaNam
त्वदीयाभिर्वाग्भिस्तव जननि वाचां स्तुतिरियम् ||
Tvadeeybhi: vãkbhistava janni vãchãm Stuti: iyam ||
The word to word meaning of the above sloka is as follows: -
वाचां जननि = Mother who is the spring of all speech! Like showing light to दिवसकर = the Sun who creates the day, नीराजन-विधि: = waving lighted camphor; सुधासूते: = for the one who produces Amrita, the Chandra, चन्द्रोपलजललवै; = by the drops of water that oozes from the Chandra Kanta stone (when the moon light falls on it) अर्घ्य रचना = offering Arghyam; for सलिलनिधि = the repository of water, the Ocean, स्वकीयैरम्भोभि: = by its own waters, सौहित्यकरणं offering hospitality; त्वदीयाभिर्वाग्भिस्तव = by your own words, I am doing स्तुतिरियम् = these prayers to you!
(Continuing from here today)
After all, our ÃchãryãL was famous as a past master in doing things uniquely different to other poets isn't it? What would he have done differently in the writing of Phala Sruti, it would be worth pondering. If others were more slavish than slaves in devotion, he is an Avatara of AmbãL and her target of devotion Siva, together! When others would list a whole lot of gains at the end of their creations, it is worth its while to think of how he could have better bettered them all, when looking at the last sloka! He has mastered them all in his extreme humility, reducing himself to a perfect zero, as we have seen already!
"I just wrote some poems and for that, what Phala and what Sruti am I going to list out? I have already explained as to what benefits she showers on her devotees, haven't I? That is enough and let me stop there. Everywhere in the world whosoever does whatsoever, whether it is great or otherwise, as the basic underlining of it all is the fact that, it is all by her power! In the play of her variety, what is lower or lesser is to show off the other in comparison as higher or greater. This is all her doing, including this set of 100 slokas. She is the source, the spring, the point of origin! She is the mother of all animate and inanimate things of the world! So are words her children. So this Soundarya Lahari is like a garland of her words, her child. So I am going to surrender this at her feet." That must have been his thought process towards the end! As he had already said, let my normal speaking be prayers to you in your praise, let my walking be circumambulation around you and all that I do with my hands be showing mudras, whatever I eat may be offering of Neivedyam to you and my lying down to sleep be tantamount to doing Namaskãra to you and thus had surrendered his self at her feet in the 'Japo jalpa:' sloka (No 27). He is now offering his slokas as a token of love and respect simply and humbly!
He would not have even that much pride to think of offering his poems as Ãtma SamarpaNam! He must have thought of such an act as an expression of temerity only! But luckily there were three such acts which had become traditions, in this world as precedents, which were though well intended were not very sensible. One such act is, lighting up a bit of camphor on a plate and waving it front of the Sun – known as the 'divasakara'. The Sun is known as 'Diwakar' or 'Divasakara' as he makes the world bright with his light. He makes the night in to day known as 'Divas' in Sanskrit. ÃchãryãL must have attended and participated in many a 'Sankranti' festival in celebration of the Sun's return from the South (the Southern Solstice – start of UttarãyaNam). People will draw a representative figure of the Sun on the ground and do Pooja there at the end of which they show 'Karpoora Ãrati' to it as well as the Sun overhead! Inside a dark sanctum sanctorum of a temple say, an Ãrati by camphor will light up the idol, it is alright. But to do so in the open day-light seems childish isn't it? Not only that we cannot light-up the Sun but also in the Sunlight the light of the camphor will look pathetically inefficient, isn't it! Similarly, in front of the very power of words, that is AmbãL, to show off one's own power of expression, instead of enlightening will feel ashamed by itself if it can! But looking at devotees showing the light of the burning camphor to the brilliant Sun, he takes heart that to do so is alright! When the scorching Sun is accepting it, the cool hearted AmbãL will take it sportively, he feels and surrenders his poems to her.
In the Pooja, rituals of 64 steps are required to be done, wherein you take care of the deity as you would extend hospitality to a visitor to your home, which I have explained in one of my earlier talks. In them there are three Upachãra-s done with water known as 'pãdyam', that is water given to wash the legs, then 'arghyam' that is water for the hands and then 'ãchamaneeyam', that is water for wetting the mouth, in which 'arghyam' is considered very honourable. Whenever ÃchãryãL talks about the hot Sun, he will at once bring in the cool Moon in to the discussion to compensate. Here he talks about the precedent in customs and tradition using Moon as the example. There was this gentleman who observed a ceremonial pooja being done to AmbãL on a full Moon night. He noticed in it, the Moon as the abode of AmbãL being offered the 'arghyam'. At his home the next day he was doing pooja. In it, as part of the procedure when it was the turn of offering 'arghyam' to the Moon, he noticed the moon light falling on a statue made of 'Chandrakanta' stone which was oozing droplets of water. He collected the drops in the 'udriNi', a type of spoon and offered the same as 'arghyam' to the Moon and that became a tradition.
There are two types of stones mentioned in the old books known as Chandrakanta and Suryakanta, which are claimed to be rare gems by some jewellers. Suryakanta is a stone that attracts sunlight and sends out sparks, whereas the Chandrakanta stone draws on moonlight and oozes out with water drops. In Margoa in Goa there is this hill top temple for Chandreshwar / Chandranath where the Shiv Ling is made of Chandrakanta stone. When the moonlight falls on the stone idol it oozes droplets of water. This gentleman saw such a stone and that is what he offered saying 'arghyam samarpayãmi'. That is what our ÃchãryãL is talking about when he says, 'sudhã sootai: chandropala jalalavai: arghya rachanã' – 'सुधा सूतै: चन्द्रोपल जललवै: अर्घ्य रचना'. Chandra upalam becomes chandropalam in which the word upala means a stone. The moon is 'sudhã sooti', the producer of 'Sudha', which is another word for Amrita.
(Continuing with further texts of this chapter tomorrow also)
*Maha Periyava Thiruvadigal Charanam*
*************************
No comments:
Post a Comment