Friday, May 28, 2021

Glory of naama - HH Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்* 

                     *நாம மஹிமை*
இன்னொரு சுலோகத்தில் ஸ்ரீ சங்கரர்,
 நாராயண கருணாமய சரணம் கரவாணீ தாவகெள சரணெள I
 இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸதா வஸது II
என்று கூறினார். "ஓ நாராயணா, கருணை பொருந்தியவனே! நீயே எனக்கு எப்போதும் அடைக்கலம், எனது நா எப்போதும் இந்த ஆறு வார்த்தைகள் உச்சரித்துக் கொண்டிருக்கட்டும்".
அந்த ஆறு பதங்கள்: நாராயண கருணாமய சரணம்
    கரவாணி தாவகெள சரணெள
இன்னொரு சுவாரஸ்யமான சுலோகம், காட்டில் வேடர்கள் பின்வரும் சுலோகத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார்களாம்.
 வனே சராமோ வஸுசாஹராமோ நதீஸ்தராமோ ந பயம் ஸ்மராம: I
 இதீரயந்தோ வீபினே கிராதா முக்திம் கதா ராமபதானுஷங்காத் II
இதன் பொருள் என்னவென்று பார்ப்போம்.
 வனே சராம: : காட்டில் சுற்றுவோம்
 வஸுசாஹராம: : பணம் கொண்டுவருவோம்
 நதீஸ்தராம: : நதிகள் தாண்டுவோம்
 ந பயம் ஸ்மராம: : பயம் ஒன்றும் அறியோம்
இந்த சுலோகத்தில் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "ராம:" என்ற சொல்லை நாம் பார்க்கலாம். இவ்வாறு இச்சுலோகத்தைச் சொல்லும் போது "ராம:" என்பதை நான்கு முறை சொன்னதாலேயே மோக்ஷபதம் அடைந்தார்கள் வேடர்கள் என்று சொல்லப்படுகிறது. பகவானின் நாமத்திற்கு இருக்கக்கூடிய மஹிமையை விளக்கவே இச்சுலோகத்தைப் பற்றி கூறினேன். நாம் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் நடந்து பகவத் கிருபைக்குப் பாத்திரராக வேண்டும்

No comments:

Post a Comment