Wednesday, May 26, 2021

Adyatma Ramayanam Balakanda part 2 in tamil

Courtesy:Smt,Dr.Saroja Ramanujam

அத்யாத்மராமாயணம்-பாலகாண்டம்

வால்மீகி ராமாயணம் ராமனை ஒரு உத்த்ம புருஷனாக சித்தரித்தாலும் அவனது தெய்வீகத்தன்மையை அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் அத்யாத்ம ராமாயணம் ராமனை ஒரு அவதார புருஷனாகவே முழுவதும் காட்டுவதல்லாமல் அவதார காரியத்தையும் தன் உண்மை ஸ்வரூபத்தையும் ராமனே அங்கங்கு உண்ர்த்துவதும் ராவணன் முதல் அனைவரும் அதை உண்ர்ந்திருப்பதும் காண்கிறோம்

. ராமனின் பிறப்பு க்ருஷ்ணாவதாரத்தில் போல் தெய்வ உருவாகவே வர்ணிக்கப்படுகிறது.வசிஷ்டர், விஸ்வமித்திரர் , அஹல்யை முதலியோர் ராமனை பரப்ரம்மமாகவே காண்கிறார்கள். இதை மற்ற காண்டங்களிலும் மற்ற பாத்திரங்கள் மூலம் காண்கிறோம்.

மொத்தத்தில் நாராயணனும் ஸ்ரீதேவியும் மனித உருவில் ராமனும் சீதையுமாக நடிபப்தையெ இங்கு காண்கிறோம். மேலும் சிறந்த வேதாந்த உண்மைகளும் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஆகவே இதை இன்னொரு ராமயணம் என்று மட்டும் எண்ணாமல் இதன் சிறப்பை அறிந்து படிக்க வேண்டும்.
அடுத்து ராமாவதார வர்ணனையைப் பார்ப்போம். அதில் வால்மீகி ராமாயணத்திலோ கம்ப ராமாயணத்திலோ இல்லாத ( கம்பர் ஒன்றிரண்டு இடங்கள் தவிர வால்மீகியையே பின்பற்றி இருப்பதால் ) சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் காணலாம். துலசி ஒரளவு சித்தரித்திருப்பதைக் காணும்போது அவருக்கு இந்த ராமாயணம் தெரிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

  

அத்யாத்ம ராமாயணம்

பாலகாண்டம் – அத்தியாயம் 1 (தொடர்ச்சி)

ஸ்ரீராமஹ்ருதயம்

ஆகாசஸ்ய யதா பே த: த்ரிவிதோ த்ருச்யதே மஹான் 
ஜலாசயே மஹாகாச: ததவச்சின்ன ஏவஹி 
ப்ரதிபிம்பாக்யம் அபரம் த்ருஸ்யதே த்ரிவிதம் நப:

ஆகாசம், எங்கும் பரந்த மஹாகாசம், ஜலபாத்திரங்களிலும் , நீர்நிலைகளிலும் உள்ள ஆகாசம் , , அவைகளில் ப்ரதிபலிக்கும் ஆகாசம் என மூன்றுவகைப்பட்டது. இவை எல்லாம் ஒன்றே.

புத்த்யவச்சின்ன சைதன்யம் ஏகம் பூர்ணம் அதாபரம்
ஆபாஸஸ்து அபரம் பிம்பபூதம் ஏவம் த்ரிவிதா சிதி:

அதைப்போலவே பரமாத்மா .என்பது எங்கும் உள்ள ஆகாசம் போன்றது .ஒவ்வொரு உயிரிலும் உள்ள ஆத்மா நீர் நிலைகளில் உள்ள ஆகாசம் போன்றது. நம் உடல் , மனம் இவைகளோடு சம்பந்தப்பட்டது ஜீவாத்மா. இது ப்ரதிபலிக்கும் ஆகாசத்தைப் போன்றது . ஏனென்றால் இது உண்மையல்ல , வெளித்தோற்றமே.

ஸாபாஸபுத்தே: கர்த்ருத்வம் அவிச்சின்னே அவிகாரிணி
ஸாக்ஷிணி ஆரோப்யதே ப்ராந்த்யா ஜீவத்வம் ச ததா அபுதை:

சாக்ஷிபூதமான , முழுமையான , செயலற்ற ஆத்மா செயலாற்றுவதாக அறியாமையின் மயக்கத்தினால் நம்புவதால் ஜீவாத்மா உருவாகிறது.

ஆபாஸஸ்து ம்ருஷா புத்தி: அவித்யாகார்யம் உச்யதே
அவிச்சின்னம் து தத் ப்ரஹ்ம விச்சேதஸ்து விகல்பத:

ஜீவாத்மா எனப்படுவது அறியாமையால் ஏற்படும் புத்தியே. இது எங்கும் நிறைந்த பூரணமான பரமாத்மா புத்தியில் ப்ரதிபலிப்பதனால் ஏற்படும் மாயத்தோற்றமே.

அவிச்சின்னஸ்ய பூர்ணஸ்ய ஏகத்வம் ப்ரதிபாத்யதே 
தத்வமஸ்யாதி வாக்யை: ச ஸாபாஸஸ்யாஹமஸ்ததா

இவ்விதம் புத்தியில் ப்ரதிபலிக்கும் சைதன்யம் நான் எனப்படுவது . அதுவே பூரணமான ப்ரம்ம சைதன்யத்துடன் ஒன்றும்போது ஏற்படும் ஞானமே, தத்வமஸி போன்ற மஹாவாக்கியங்களால் அறியப்படுவதாகும்.

ஐக்யஞானம் யதோத்பன்னம் மஹாவாக்யேன சாத்மனோ;
ததாவித்யா ஸ்வகார்யை: ச நச்யத்யேவ ந சம்சய:

இவ்விதமான நானே ப்ரம்மம் என்ற ஞானம் வந்தபோது அஞ்ஞானம் தன் செயல்பாடுகளுடன் அழிந்துவிடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை .

ஏதத் விக்ஞாய மத்பக்த: மத்பாவாய உபபத்யதே
மத்பக்திவிமுகானாம் ஹி சாஸ்த்ர கர்தேஷு முஹ்யதாம் 
ந ஞானம் ந ச மோக்ஷ: ஸ்யாத் தெஷாம் ஜன்மசதைரபி

இதை அறிந்த எனது பக்தன் என்னை வந்தடைகிறான். என்னிடம் பக்தி இல்லாது சாஸ்திர ஞானம் என்ற பள்ளத்தில் புகுந்தவர்க்கு ஞானமோ முக்தியோ நூற் ஜன்மம் எடுத்தாலும் கிடைக்காது.

இதம் ரஹஸ்யம் ஹ்ருதயம் மமாத்மன: 
மயைவ ஸாக்ஷாத் கதிதம் தவானக

மத்பக்திவிஹீனாய சடாய ந த்வயா 
தாதவ்யம் ஐந்த்ராதபி ராஜதோ அதிகம்

இந்த ரஹஸ்யமான என் ஹ்ருதயம் என்பது என்னாலேயே குற்றமற்ற உனக்குக் கூறப்பட்டது. ஸ்வர்கம் அடைவதற்கும் மேலான இதை பக்தி இல்லாதவர் , தீய நெறி செல்பவர் இவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது.

மஹாதேவன் இவ்வாறு ஸ்ரீராமஹ்ருதயத்தை தேவிக்குக் கூறி மேலும் கூறியதாவது,
இதை பக்தியுடன் எப்போதும் படிப்பவர் மோக்ஷம் அடைவார். எந்தவிதமான கொடிய பாபமும் இதனால் அழிந்துவிடும். இந்த வாழ்க்கையிலேயே யோகிகளுக்கும் எட்டாத நிலையை அடைவர் என்றார்.

  

No comments:

Post a Comment