Tuesday, May 25, 2021

Adhyatma Ramayanam Baala kandam adhyaya 1

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

அத்யாத்ம ராமாயணம்

பாலகாண்டம் – அத்தியாயம் 1 (தொடர்ச்சி)

ராவண வதத்திற்குப் பின் ராமர் அயோத்தி வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகு ஸீதையுடன் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் சூழ சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது ஹனுமார் கடமையை எல்லாம் செய்து முடித்தவராக, ஒரு அபிலாஷையும் இன்றி, ஞானம் பெற விரும்பியவராக அவர் முன் கூப்பிய கையுடன் நிற்கக் கண்டார். 
அப்போது சீதை ஹனுமனிடம் கூறியதைப் பின்பற்றி ராமர் அவரிடம் கூறியதே ஸ்ரீராமஹ்ருதயம் எனப்படும். 
ராமர் சீதையைப் பார்த்துக் கூறினார். "இந்த ஹனுமான் குற்றமற்றவர். நம்மிடம் உண்மையான பக்தி உள்ளவர். இவர் ஞானோபதேசத்திற்குப் பாத்திரம் ஆனவர். ஆகையால் இவருக்கு ராமாவதாரத் தத்துவத்தை கூறுவாயாக."

உடனே சீதை பேச ஆரம்பித்தாள். 
"ராமனே ஒன்றேயான, பேதமில்லாத இந்த்ரியங்களுக்கும் மனதிற்கும் புலப்படாத , சத் சித் ஆனந்த ஸ்வரூபமாகிய பரப்ரம்மமே என்று அறிவாயாக. அவர் சர்வவ்யாபி.

"நான் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவைகளுக்குக் காரணமான மூலப்ரக்ருதி என்று அறிவாய். பரப்ரம்மமாகிய அவர் முன்னிலையில் நான் இந்த உலகை சிருஷ்டிக்கிறேன். அறியாதவர்கள் இது எல்லாம் அவர் செய்ததாக என்னுகிர்ரர்கள். அவருக்கு செய்கை என்பது இல்லை. "

பிறகு சீதை ராமர் பிறந்தது விச்வாமித்திரருடன் சென்று அவளை மணந்தது முதல் ராவண வதம் வரை சுருக்கமாகக் கூறி இது எல்லாமே அவர் செய்கை அன்று. மூலப்ரக்ருதியான் தன் செயலே அவர் மீது அறியாமையினால் சுமத்தப்படுகிறது என்று கூறி , ராமர் நடப்பதில்லை, உட்கார்வதில்லை, துக்கப்படுவதில்லை, எதுவும் அவர் செய்கை இல்லை. ஏனென்றால் அவர் பரமாத்மா ஆனந்த மயமானவர், அவருக்குட்பட்ட மாயையின் செயலே எல்லாம் என்று கூறினாள்.

இதன் விளக்கம் பின்வருமாறு.

சீதை பகவானின் மாயாசக்தி ஆவாள். மாயாசக்தியினால்தான் உலகம் ஸ்ருஷ்டிக்கப்படுகிறது. இந்த மாயைதான் மூலப்ரக்ருதி. 
கீதையில் பகவான் 'ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புன: புன: ' "என் சக்தியான இந்த மாயை என்னும் பிரகிருதியை ஏற்றுக்கொண்டு படைக்கிறேன் " 
"மயாத்யக்ஷேன ப்ரக்ருதி: சூயதே ஸசராசரம்" என் கண் காணிப்பில் பிரக்ருதியானது இந்த சராசரத்தை பிறப்பிக்கிறது.
(ப.கீ . 9. 8-9)
'ந மே பார்த்த அஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷுலோகேஷு கஸ்சன ' " பார்த்தா மூன்றுலகங்களிலும் நான் செய்யவேண்டியது ஒன்றும் இல்லை." ( ப. கீ. 3.22)
இதுதான் சீதை கூறியதின் சாராம்சம்.,

அடுத்து ராமர் கூறியதே ஸ்ரீ ராம ஹ்ருதயம்

  

No comments:

Post a Comment