தோடகாஷ்டகம்
கடைசி ஸ்லோகம். '
விதிதா ந மயா விஷதைக கலா' எனக்கு ஒரு படிப்பும் தெளிவா தெரியாது
'ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரு'. என்கிட்ட ஒரு ரூபா கூட இல்லை, என் கிட்ட ஒரு விதமான செல்வமும் இல்லை.
"த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்" ஹே குரோ! உங்களோட கூட பிறந்ததான, இயல்பான கருணையை ஏன் மேல காண்பியுங்கோ.
'பவ சங்கர தேசிகமே சரணம்'
சங்கர தேசிகர் -னா சங்கர ஆச்சார்யாள். ஆசார்யாளே, உங்களுடைய பாதங்களில் நான் சரணாகதி பண்றேன்" அப்படீன்னு வந்து பாதங்கள்-ல விழறார்.
இந்த தோடகாஷ்டகத்தை மஹா பெரியவா கிட்ட யாரவது சொன்னா, பெரியவா அசையாம சிலை போல நிப்பா.
அந்த 8 ஸ்லோகங்களையும் முழுக்க சொல்லி நமஸ்காரம் பண்ற வரைக்கும், சின்ன குழந்தையையாக இருந்தாலும் சரி, பண்டிதராக இருந்தாலும் சரி,
இந்த தோடகாஷ்டகத்தை சொன்னா பெரியவாளை நம் முன்னே நிறுத்திடலாம்.
எப்படி இராமாயணத்தை படிச்சா, அங்க ஆஞ்சநேய ஸ்வாமி கேட்டுண்டு இருக்கற மாதிரி,
எங்கே இந்த தோடகாஷ்டகத்தை நாம சொன்னாலும் அங்க மஹா பெரியவா இருக்கான்னு அர்த்தம்
மஹா பெரியவா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் செய்து அனுகிரஹம் பெறுவோம்.
No comments:
Post a Comment