*தெய்வத்தின் குரல*் - *ஆறாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*ஸெளந்தர்ய லஹரி*
*அழகுநடை அடியிணையில் ஆத்ம ஸமர்ப்பணம்*
(நேற்று தொடங்கிய இந்த பாகத்தின் ஆரம்ப உரைகள் மீண்டும் ஒருமுறை)
சரணங்கள் நடப்பதற்காக ஏற்பட்டவை. 'அன்ன நடை' என்று காவ்ய நாயகிகளின் நடையழகைச் சொல்வது. ஆசார்யாளோ இதை மாற்றிச் சொல்லி ஒரு ச்லோகம் [91] பண்ணியிருக்கிறார். அன்னங்கள்தான் அம்பாளின் நடையழகைத் தாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவளோடேயே ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தனவாம்! அவற்றிடம் கருணை கொண்ட அவளுடைய சரணங்கள் நடந்து காட்டுகிற 'டெமான்ஸ்ட்ரேஷ'னால் நடையழகை 'டீச்' பண்ணியதோடு நிற்காமல் வார்த்தையாலும் 'தியரி'யை 'டீச்' பண்ணினவாம்! எப்படியென்றால் சரணங்களில் மணிச் சிலம்பு அணிந்து கொண்டிருக்கிறாள். அவள் நடக்கும்போது அவை 'ஜல் ஜல்' என்று சப்திப்பதாக நமக்குத் தோன்றுகிறது. வாஸ்தவத்தில் அந்த 'ஜல் ஜல்' தான் அந்தச் சரணங்கள் 'தியரி' பாடம் சொல்லிக்கொடுக்கும் வார்த்தைகளாம். முன்னே [ச்லோ-60] சொன்னார், காதணிகளின் ஜண ஜண சப்தத்தால் அவள் ஸரஸ்வதியின் கானத்திற்குப் பாராட்டு வார்த்தை சொன்னாள் என்று. இங்கே அந்த ஸரஸ்வதியின் வாஹனமான ஹம்ஸத்திற்கு காலணியின் ஜல் ஜல் சப்தத்தால் நடையழகுப் பாடம்.
சிலம்புக்கே 'ஹம்ஸகம்' என்று பேர் உண்டு. மூகர் அதை வைத்து ச்லேஷை பண்ணியிருக்கிறார்1. எதனாலோ ஆசார்யாள் அப்படிப் பண்ணக் காணோம். மூகருக்கு என்று ரிஸர்வ் பண்ணி வைத்துவிட்டார் போலிருக்கிறது! 'ஹம்ஸ' என்பது ஸந்நியாஸிகளையும் குறிக்கும். 'பரம ஹம்ஸர்' என்று சொல்கிறோமல்லவா? 'இதை வைத்தும் மூகரே ச்லேஷை பண்ணட்டும்'2 என்று ஆசார்யாள் பெருந்தன்மையாய் விட்டுக் கொடுத்திருக்கிறார்!
அம்பாளுடைய கேசாதி பாத வர்ணனையில் கடைசியாக வரும் ச்லோகத்தில், அவளுடைய சரணத்தில் தம்முடைய பஞ்சேந்த்ரியங்களும் மனஸும் அப்படியே முழுக வேண்டும் என்று ஆசார்யாள் ப்ரார்த்திக்கிறார். இதைப்பற்றி முன்னேயே சொன்னேன்3. வழக்கிலே அதிகமுள்ள பாடத்தில் இந்த ச்லோகம் அன்னநடை கற்றுக் கொடுக்கிற ச்லோகத்திற்கு முந்தியதாக இருக்கிறது. ஆனால் இதைப் பிந்தியும் அதை முந்தியும் கொண்டு வருகிற பாடபேதமும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்வரூப வர்ணனையை முடிக்கும்போது இப்படி "தவ.. சரணே நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரண சரண: ஷட்சரணதாம்". `உன் திருவடித் தாமரையில் என் ஐம்புலன்களையும் மனஸையும் ஆறு கால்களாகக் கொண்ட உயிர் வண்டு அப்படியே புதைந்திருக்கட்டும்" என்று சரணாகதி, ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
இந்த வண்டு-தாமரை ஐடியாவை 'ஸுப்ரஹ்மண்ய புஜங்க'த்திலும், கொஞ்சம் வேறே தினுஸாக 'ஷட்பதீ ஸ்தோத்ர''த்திலும் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்4.
சரணங்களைப் பற்றிய ச்லோகங்களில் இதைக் கடைசியாக வைத்துக்கொள்ளும் அபூர்வமான பாடத்தில், இப்போது ரொம்பவும் வழக்கத்தில் இருக்கிற பாடப்படி இந்த ச்லோகம் எங்கே வருகிறதோ அந்த இடத்தில் "கதா காலே மாத:" என்ற ச்லோகத்தைச் சொல்கிறார்கள்5. அதில்தான் ஆசார்யாள் தம்மை வித்யார்த்தியாகச் சொல்லிக்கொண்டு தமக்கு வித்யா ஸித்தி ஏற்படுவதற்காக அம்பாளுடைய சரண தீர்த்தத்தைப் பானம் பண்ணும் நாள் என்றைக்கு வருமோ என்று கேட்பது. சரணத்தைப் பற்றி அநேக ச்லோகங்கள் வருவதற்கு நடுவிலேயே இதுவும் வருவது பொருத்தமாகவே தெரிகிறது. அதுவுந் தவிர, தற்போது பெருவாரி வழக்கிலுள்ள பாடத்தில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, அம்பாள் மூன்று பேரையும் பிரஸ்தாவித்து வரும் மூன்று ச்லோகங்கள் சேர்ந்தாற்போல் வராமல் அவற்றில் இரண்டு வந்த விட்டு இந்த "கதா காலே" break பண்ணுகிறது. அதற்கப்புறம் மறுபடி மூன்று பேரையும் சொல்கிற மூன்றாம் ச்லோகம் வருகிறது. நான் சொல்கிற இன்னொரு பாடத்தில் அந்த மூன்று ச்லோகமும் break இல்லாமல் தொடர்ச்சியாய் வருகின்றன.
பத்ததியை மாற்றி ஒன்றும் பண்ணிவிடும்படி நான் சொல்லவில்லை. எந்த க்ரமத்தில் பாராயணம் பண்ணினாலும் ஸரிதான்.
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)
(இன்று இங்கிருந்து மேலும் புதிய பாகங்கள்)
*தாமரையும் ஒப்பாகாது*
(இன்றைய புதிய பாகம்)
திருவடியைத் தாமரை என்றாலும் வாஸ்தவத்தில் அதற்கு ஒப்பேயில்லை. திருவடி திருவடிதான்! இன்னொன்றோடு சேர்த்து அதற்கு உசத்தி உண்டு பண்ணுவதற்கே இல்லை. தாமரையைவிட அம்பாள் திருவடி எத்தனை தினுஸில் உசந்தது என்று பிரித்துக் காட்டியும் ஒரு ச்லோகம் கொஞ்சம் முன்னாடி [ச்லோ-87] ஆசார்யாள் பண்ணியிருக்கிறார்.
என்னென்ன விதத்தில் உசத்தி? தாமரை பனியிலே கருகிப் போய்விடுவது: 'ஹிமாநீ ஹந்தவ்யம்". அம்பாள் திருவடியோ? "ஹிமகிரி நிவாஸைக சதுரெள": பனி மலையிலேயே வஸிக்கிற ஸாமர்த்யம் பெற்றது! பிறந்தகந்தான் ஹிமயமலை, புக்ககம் வேறே எங்கேயோ போனாள் என்றில்லாமல், இரண்டுமே ஹிமயமலைதான்! அதில் வாடாமல் வதங்காமல் ஸஞ்சரிப்பது அவள் திருவடி. அப்புறம் இரண்டாவதாக – தாமரை ராவேளையில் கூம்பிப் போய்விடுவது: "நிசாயாம் நித்ராணம்" தாமரை கூம்புவது கண் மூடிக்கொண்டு நித்ரை பண்ணுவது மாதிரி இருப்பதால் 'நித்ராணம்' என்றார். அம்பாள் சரணம் ராப்பூராவுங்கூட எங்கே எந்த பக்தர்களுக்கு அநுக்ரஹ காலம் வந்தாலும் அங்கே ஓடுவது; "நிசி சரம பாகே ச விசதெள": விடிய விடியவும் விழிப்போடு, மலர்ச்சியோடு இருப்பது. மூன்றாவதாக –- தாமரை "வரம் லக்ஷ்மீ பாத்ரம்", அதாவது தன்னிலே லக்ஷ்மி வந்து இருப்பதற்கு ஆசைப்படுகிறது; தனக்குள்ளே லக்ஷ்மியை வைத்துக்கொள்வதே பெருமையென்று நினைக்கிறது. திருவடி என்ன பண்ணுகிறது? "ச்ரியாம் அதி–ஸ்ருஜந்தெள ஸமயிநாம்": ஸமயம் என்பதான அம்பாள் வழிபாட்டைப் பின்பற்றும் எல்லாருக்குமே ஒவ்வொருவருக்குமே, அவளுடைய திருவடி லக்ஷ்மியை உண்டாக்கிக் கொடுத்து விடுகிறது! ஸகல ஸெளபாக்யங்களையும் கொடுக்கிறது என்று அர்த்தம். திருவடி திருவையே தருகிறது! தாமரை அவளை தனக்குள்ளே பிடித்து வைத்துக் கொண்டால், இது அவளை வாரிக் கொடுக்கிறது! ஆனபடியால், "ஸரோஜம் த்வத்பாதெள ஜநநி ஜயத: சித்ரம் இஹ கிம்?" : 'அம்மா! தாமரையை உன் திருவடி ஜயிக்கிறது! இதிலே ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?" உன் திருவடி திருவடிதான்!
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)
*செம்மையின் பெருமை*
(இன்றைய மற்றொரு புதிய பாகம்)
எல்லா அவயவத்தையும் – ஸெளந்தர்ய ஸமுத்ரத்தின் அத்தனை அலையையும் – அருள் வாக்கிலே வர்ணித்தாயிற்று. அப்புறம் [ச்லோ-92] அந்தப் பூர்ண ஸ்வரூபம் எழுந்தருளி இருக்கும் ஆஸனத்தை வர்ணிக்கிறார். அந்த ச்லோகத்திலேயே அத்தனை அவயவங்களும் சேர்ந்து ஒளி வீசுகிற அம்பாளுடைய அருண காந்தியைப் பற்றியும் சொல்கிறார். ஸஹஸ்ரநாமத்தில் உத்யத்–பாநு ஸஹஸ்ராபா [ஆயிரம் உதய ஸூர்யர்களின் காந்தி படைத்தவள்] என்று முதலில் சொல்லி அப்புறம் கேசாதி பாத வர்ணனை என்றால் ஆசார்யாள், 'ஒரு வித்யாஸம் இருக்கட்டுமே' என்று அவயவ வர்ணனையை முதலில் முடித்துவிட்டு அப்புறம் அவளுடைய தேஹ காந்திக்கு வந்திருக்கிறார்.
ஆஸனத்தைப் பற்றி முன்னேயே சொல்லிவிட்டேன் –- பஞ்ச க்ருத்ய மூர்த்திகளில் நாலு பேரைக் கால்களாகவும், ஐந்தாமவரை மேற் பலகையாகவும் கொண்ட அதிசயமான ஆஸனம் என்று*!
அதன் மேல் ராஜராஜேச்வரியாக வீற்றுக் கொண்டிருக்கும் அம்பாளுடைய அருணச் சாயையின் ப்ரபாவத்தைச் சொல்கிறார். அந்த ப்ரகாசம் வீசி வெள்ளை சிவனும் செக்கச் செவேலென்று காமேச்வரனாகிறான்; லோக ஸ்ருஷ்டியை உண்டு பண்ணும் தாய் தந்தையர்களாக இந்தக் காமேச்வர-காமேச்வரி தம்பதி இருக்க வேண்டுமாதலால் அவன் ச்ருங்கார நாயகனாக ஆகிறான்; ச்ருங்கார ரஸத்தின் நிறம் சிவப்பேயாகையால் அம்பாள் கண்ணுக்கு அவன் அந்த ரஸ விக்ரஹமாகவே தெரிகிறான் –- என்று கவித்வம், தத்வம், 'லைட் தியரி' எல்லாவற்றையும் பிசைந்து சொல்லி இருக்கிறார்.
அம்பாளுடைய சக்தி வீச்சிலே அந்தப் பரம யோகி, பரம ஞானி ச்ருங்காரமூர்த்தியாகிறான் என்றால் இதையே திருப்பி வைத்து மஹா காமாதுரனையும் அவள் யோகியாய், ஞானியாய் பண்ணக் கூடியவள் என்று புரிந்து கொள்ளணும்; நம் காமாதிகள் தீர அந்தக் காமாக்ஷியிடமே தஞ்சம் புகவேண்டும். ஸ்தோத்ரம் இவல்யூஷ்னைச் சொல்லும்போதே அதன் மறுபாதியான இன்வல்யூஷனில் நாம் மனஸை வைத்து, வெளியில் வந்தது உள்ளே போய் அடங்குவதற்கும் அவளே சரண் என்று ப்ரார்த்திக்க வேண்டும். உதய ஸூர்யனின் சிவப்பு மாதிரியேதானே அஸ்தமன ஸூர்யனும் இருக்கிறது? அதனால் உதய ச்ருங்காரத்தைச் சொல்வதிலேயே நாம் அஸ்தமன ஸமாதி நிலையை ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
சிவப்பு நிறம் சக்தியை, கார்ய வீர்யத்தைக் காட்டுவது. வெளுப்பு, எல்லாம் அடங்கிப் போன சாந்தி. உடம்பிலே கூடப் புஷ்டி ஏறினால் சிவப்பாகிறது. புஷ்டி குறைந்தால் pale-ஆக வெளுக்கிறது. கார ஸாரமாக ஆர்க்யூ பண்ணி நாம் ஒருத்தரை ஜயித்தால், "செம்மையாக குடுத்தேன்", "வெளுவெளுன்னு வெளுத்துக் கட்டினேன்" என்று இரண்டு விதமாகச் சொல்கிறோம். செம்மையாகக் கொடுத்ததாகச் சொல்லும் போது நாம் எப்படி சக்தியோடு தாக்கினோம் என்பதைத் தெரிவிக்கிறோம். வெளுத்துக் கட்டியதைச் சொல்லும்போதோ எதிராளியை எப்படி சக்தியிழந்து அடங்கப் பண்ணினோமென்பதைத் தெரிவிக்கிறோம். அம்பாளோ வெள்ளை சிவனையே சிவப்பாக ஆக்கிக் கார்ய ப்ரபஞ்சத்தை அவனோடு சேர்ந்து நடத்துகிறாள்!
ச்ருங்காரச் சிவப்பு இருக்கட்டும். கருணையின் சிவப்பே நமக்கு வேண்டியது. இந்த ச்ருங்காரம் உண்டானதே இதனால் ஸ்ருஷ்டியாகிற லோகத்திடம் பிற்பாடு கருணை காட்டவேண்டும் என்பதற்காகத்தான். அத்விதீய ப்ரஹ்மத்திற்கு அன்பு காட்டணுமென்ற எண்ணமே முதலில் வந்தது. அன்பு காட்ட ஆள் வேணுமே என்பதற்காகவே லோகத்தை ஸ்ருஷ்டி செய்ய நினைத்தது. தாய் தந்தையராக இருந்து அந்த ஸ்ருஷ்டியைப் பண்ணி விளையாடுவோம் என்றே ச்ருங்கார மூர்த்தியை உண்டாக்கிற்று. ஒரே அன்புதான் – சாந்த வெள்ளையிலிருந்து சிவப்பாக முதலில் பிரிவது அதுதான். சிவ-சக்திகளான ஸதி-பதி என்னும்போது அந்த அன்புக்கு ச்ருங்காரம் என்று பெயர்; ஸ்ருஷ்டியிடத்தில் காட்டும் போது அதுவே கருணை எனப்படுகிறது. நமக்கு வேண்டியது அந்தக் கருணைதான்.
மதுரமான மாம்பழத்திலிருந்து பரம கசப்பான பாகல் வரையில் நன்றாகப் பழுக்கிறபோது, கனிகிற போது அவள் சிவப்பாக்கி விடுகிறாள். நமக்கும் அவளுடைய கருணைச் செம்மை அப்படி மனஸைப் பழுக்க வைத்து, கனிய வைத்து மனச் செம்மை தரவேண்டும்.
ச்ருங்காரச் சிவப்பிலிருந்து காருண்யச் சிவப்புக்கு நானே ஏதோ மேதாவித்தனத்தால் நீட்டி விட்டேன் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம்! அடுத்த ச்லோகத்திலேயே ஆசார்யாளே சொல்லியிருப்பதைத்தான் சொன்னேன். ரொம்ப அழகாகச் சொல்லணியோடு பாடியிருக்கிறார்: "ஜயதி கருணா காசித் அருணா; ஜகத்–த்ராதும் சம்போர்–ஜயதி கருணா காசிதருணா": "ஜகத்" –- லோகத்தை; "த்ராதும்" –- ரக்ஷிப்பதற்காகவே; "சம்போ:" –- அசையாத சிவனின்; "கருணா" -– கருணையானது; "காசித்" –- வர்ணனாதீதமான; "அருணா" -– அருணச் சிவப்பு அம்பாளாகி; "ஜயதி" – வெற்றியோடு விளங்குகிறது; லோகாநுக்ரஹத்திற்காகவே சாந்த வெள்ளை சிவம் கருணைச் சக்தியான அருணா என்ற அம்பாளாகி வெற்றியோடு திக்விஜயம் செய்து கொண்டிருக்கிறது.
இங்கே சிவ-சக்தி அத்வைதம் வந்துவிடுகிறது.
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
*********************************************
*"Deivathin Kural*-Part-6*
*Maha Periyava's Discourses on Soundarya Lahari*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.
*Part : SOUNDARYA LAHARI*
*அழகுநடை அடியிணையில் ஆத்ம ஸமர்ப்பணம்*
*Self-Surrender in AmbãL's Feet*
(This chapter started yesterday,the beginning texts once again)
'These feet are made for walking' became a famous pop-song. In classic literature the walk of Kãvya Nayaki are said to be 'anna nadai' or the 'walk of the Swan'. Of course 'Baby elephant walk' was another famous pop-song! But in a sloka (No 91) our ÃchãryãL has changed and upped the ante by saying that the Swans are hovering around AmbãL to learn a few tricks of the trade of walking. So her feet have become the teacher. Other than giving a practical demonstration of what they are teaching, they are also giving lecture on the theory part of it. How is that done? You see, AmbãL is wearing 'Silambu' an ornament of gold inside which there are metal beads. When she walks they make tinkling sounds. Their 'jal, jal' tinkling sounds are the theory aspect of the teaching. In an earlier sloka (No 60), by the 'jaNa, JaNa' sounds of the ear-danglies, AmbãL was expressing her appreciation of singing by Saraswathi. Here she is giving theory class with demonstration to the official carriers of Saraswathi, the Swans, as to how to walk beautifully!
This 'Silambu' itself has a name as 'Hamsakam' about which 'Mooka' the poet has done 'Slesha Alankãra' (Mooka Panchasatee, Pãdãravinda Sadakam, sloka No 27). For some reason our ÃchãryãL has not done so, may be leaving it for Mooka to do so, possibly. The word 'Hamsa' indicates recondite Sadhus who are Sanyãsi, like Ramakrishna Parama Hamsa. In the last of the 'Kesadi Pãda' descriptive slokas, ÃchãryãL has said that his five Indriyas and mind should merge in the feet of AmbãL, about which I had told you earlier. There are some differences between, which sloka comes in which order between these end slokas. In the more popular version, while finishing the Swaroopa VarNana this idea of merging of the mind and five Indriyas in her feet, just prior to the Swans being taught their strides, seems in the rightness of things, when he says, 'tava charaNe nimajjan majjiva: karaNa CharaNa: shad charaNatãm' – 'तव चरणे निमज्जन मज्जिव: करण षट्चरणताम्' – meaning 'in your lotus-feet may my five senses and mind be imbedded like the six-legged bees in the lotus flower' – as Ãtma SaraNãgati! This idea of 'bees merged in lotus' has also been used slightly differently in the 'Shatpadi' stotra and 'SubrahmaNya Bhujangam' stotra by ÃchãryãL.
In the rare cases where they have this sloka as the last of the descriptions of AmbãL's CharaNa, after this sloka, they follow it up with 'Kadã kale Mãta:' – 'कदा काले मात:' sloka in which the poet is wondering as to when will he ever get the opportunity to drink AmbãL's CharaNa Teertam! Moreover, among the three slokas one after the other in which the poet has described AmbãL with Lakshmi and Saraswathi, this 'Kadã kale Mãta:' sloka comes in-between and breaks the connectivity. So it seems that it is in the right order to chant the ' Kadã kale Mãta:' sloka immediately after one about the mind and senses merging in the lotus of AmbãL's lotus-feet. Anyhow I am not very particular about the order of chanting of the slokas, as long as you are one with the ÃchãryãL's mind-set in composing these songs says PeriyavãL!
(This chapter ends here)
(Continuing with next chapters from here)
*தாமரையும் ஒப்பாது*
*Even a Lotus Cannot Match*
(A new chapter)
If we say that the feet are like the lotus flower, that comparison will not be very appropriate either. Actually there is no need for comparing of AmbãL's feet with anything in the world, so as to give some enhanced value for those feet at all! In fact ÃchãryãL has written this sloka No 87, in which he has clearly brought out as to how those feet of AmbãL aka in Tamil as 'திருவடி' are far superior to the lotus flower in more ways than one! Let us make a quick comparison. The lotus flower starts wilting in snow-bound areas and not seen much in mountains, whereas AmbãL's feet thrive in such environment being the daughter of the King of Himalayas and the wife of Kailãsa Pati! The Lotus is wilting in cold areas - 'himãni hantavyam' – 'हिमानी हन्तव्यं', while AmbãL's feet are efficient in mountainous abodes – 'himagiri nivãsaika chaturou' – 'हिमगिरि निवासैक चतुरौ'! No wilting or waning for her feet in those environs whatsoever as it is her home-ground. Then this lotus flower closes its petals in the night time as though it is sleeping – 'nishãyam nidrãNãm'- 'निशायां निद्राणां', whereas the feet of AmbãL are ever ready to run to the devotee's help whether it is day or night or morning or evening – 'nishi charama bhãghe cha vishadou' – 'निशि चरम भागे च विशदौ'. Then while the lotus considers it an honour to host Lakshmi, Lakshmi herself values her stay in AmbãL's feet as they make available 'Lakshmi' / 'Sri' / 'Thiru' to her devotees instantly! If the lotus keeps Lakshmi within its confines – 'varam lakshmi pãtram' – 'वरं लक्ष्मी पात्रं', these feet make Lakshmi meaning Wealth and Well-being plentifully to all the devotees – 'shriyam ati-shrujantou samayinãm' – 'श्रियं अति-श्रुजन्तौ समयिनां'! So all said and done, your feet are hands-down winners over the lotus flowers, there is nothing surprising in this, since after all your feet are beyond compare – 'sarojam tvat pãdou Janani jayata: chitram iha kim?' – 'सरोजं त्वत पादौ जननि जायत: चित्रं इह किं?'!
(This chapter ends here)
*செம்மையின் பெருமை*
*The worth of Redness*
(A new chapter)
All body-parts – all the waves of the ocean of beauty – have been described in divine words. Then in sloka No 92, there is description of the 'Asana' on which this form is seated, describing the combined effect of the effulgence of all the body parts. In Lalitha Sahasranãma there is this name – 'udyad bhãNu sahasrãbhã' – 'उद्यद् भानु सहस्राभा', meaning the net-effect of redness of a thousand early morning raising Suns, which is followed by the 'keshãdi pãda varNana', there in Lalitha Sahasranãma. While here in Soundarya Lahari, as a difference, after description of all the body-parts, he has come to the total colour effect of AmbãL's personage!
I have already spoken to you about the Asana that has four of the Pancha Kritya Murthys as the four legs and the fifth one Sadasiva as the top-board. (Please refer to Paragraph 214 onwards in Deivathin Kural # 104 (Vol # 6) Dated 26 Dec 2012, for details.) On top of it is AmbãL seated as Raja Rajeswari, who by her dominating red colouration is causing the colourless / white crystal like Sadasiva to get super-imposed by the redness of AmbãL so much that he becomes Kãmeswara of the hue of Kãvya Nãyaka appealing to AmbãL as very desirable! Since they both have to become Kãmeswara and Kãmeswari – the Father and Mother of all would be world; the poet has made a mix of poetry, colour theory and principles of genesis. If by one glance of hers if that recondite Yogi can turn passionately erotic; we should understand that by an opposite stroke she is capable of removing the paralysing effect of all sensuality, passion and lust! While the stotra is talking about evolution, we should understand that we should be giving our minds to the other side of the coin that is, towards involution. Like the redness of the morning Sun, so is the AruNa of the setting Sun in the evening too. So while the attractiveness of the rising Sun with its décor is capturing our imagination, let us give our minds to the preferability of Samadhi.
The red colour indicates activity and dynamism. The whiteness is indicative of peace and Shanti. In this human body also when there are greater healthy inputs there is reddish hue. When we defeat the opponent we say that we roundly defeated him red and blue or that we caused him to pick up the white flag! AmbãL is causing the whiteness of Siva to become red, so as to organize, manage and run the Kãrya Prapancham along with her. Let the redness of Sringãra be aside, what we need is the redness of kindness and compassion. The very logic of creation of Sringãra Rasa is due to the first urge in the undivided oneness of Brhmam to show love or demonstrate love. But to whom is this love to be shown to or directed towards? So there had to be an object, towards whom that love can be directed. Hence the decision to play the game of Love and play the game of Daddy-Mummy for the whole of creation! So from the wholeness and oneness of white, the first colour that separates is this Red and then the other colours of Red à Orange à Yellow à Greenà Blue à Indigo à Violet à Ultra-Violet and it goes on! As Siva and Shakti as husband and wife; it is conjugal love and as towards children and various forms of living beings and animate and inanimate life; it is kindness, compassion, 'Grace', 'करुणा', 'அருள்', 'वात्सल्यं', 'அன்பு' and 'Redness of maturity and ripeness'!
Please do not think that I am just creating some world of mine own here and that I have jumped or made a paradigm shift from the different hues of the red indicating the various related aspects of the whole range of Love and Passion to the red hues of kindness and compassion!. From the sweetest of the Mango fruit to the bitterest of the bitter gourd; with ripeness and maturity come redness and some sweetness too! The science teacher and the instructor in survival techniques will tell us that redness is both a danger signal as well as 'not to be ignored' sign so that our own minds may also be ripened and matured! That is what our ÃchãryãL has said in the next sloka, 'jayati karuNa kachid AruNa jagat-tratum sambhor-jayati KaruNa kachid aruNa' – 'जयति करुणा अरुणा; जगत त्रातुं-संभोर-जयति करुणा काचिदरुणा'. 'संभो:' – the non-moving inert Siva's, 'करुणा' – compassion and love; 'जगत त्रातुं' – for protecting the world काचिदरुणा – becoming an indescribable redness (as AmbãL), is जयति – is victorious! It is Siva's kindness that is AmbãL, "Whose hair is twisted (while nothing else is twisted!), her smile is so easy and natural; whose mind is soft like the Sireesha flower; whose breast area is hard like a rock; whose mid-riff is slim; filled and wholesome in the chest and back and that is red all over, Siva's indescribable beauty of kindness is successfully victorious so as to save and protect the worlds! That is the message of sloka No 93, which also is a message of the oneness of Siva and Shakti – 'Shiva- shaktaikya roopiNi' – 'शिवशक्त्एैक्य रूपिणी', bringing in the Siva – Shakti Adwaitam!
(This chapter ends here)
*Maha Periyava Thiruvadigal Charanam*
No comments:
Post a Comment