Monday, March 15, 2021

File & Pile ..

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன???

குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை

படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது

மூட நம்பிக்கை !!!

ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?

மதிப்பெண்ணும்……

மதிக்காத பெண்ணும்!!!

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!!!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!!!

ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர் !!

என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்

கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்

எலிப் பொறியில் மவுஸ் உள்ளே இருக்கும்………

டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன???

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!!!

****

சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்????

சிவகாசில காச கரியாக்குவாங்க …..

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க !!!

FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம் ???

FILE ல உட்கார்ந்து பார்க்கணும் …..

PILE க்கு பார்த்து உட்காரணும்

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்????

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

No comments:

Post a Comment