கீதாம்ருதம்- அத்தியாயம் 2 தொடர்ச்சி
31. ஸ்வத்ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதும் அர்ஹஸி
தர்ம்யாத் ஹி யுத்தாத் ஸ்ரேய: க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
ஸ்வத்ர்மமபி -உன்னுடைய ஸ்வதர்மத்தை,அவேக்ஷ்ய – எண்ணினாலும், ந விகம்பிதும் அர்ஹஸி -அதிலிருந்து வழுவக் கூடாது. க்ஷத்ரியஸ்ய- ஒரு க்ஷ்த்ரியனுக்கு , தர்ம்யாத் ஹி யுத்தாத் -தர்மத்தைக் காக்கும் யுத்தத்தைக் காட்டிலும், ஸ்ரேய:- மேலான தர்மம் , ந வித்யதே-இல்லை.
க்ஷத என்றால் தீங்கு . க்ஷதாத் த்ராயதி இதி க்ஷத்ரிய: தீங்கிலிருந்து காப்பாற்றுபவனே க்ஷத்ரியன் எனப்படுவான். தன்னலமான காரணத்தினால் இல்லாது லோகக்ஷேமத்திற்காக செய்யப்படும் யுத்தமே ஒரு க்ஷத்ரியனுக்கு தலையாய கடமையாகும்.
32.யத்ருச்சயா ச உபபன்னம் ஸ்வர்கத்வாரம் அபாவ்ருதம்
ஸுகின: க்ஷத்ரியா: பார்த்த லபந்தே யுத்தம் ஈத்ருசம்
பார்த்த- குந்தியின் மகனே,யத்ருச்சயா ச உபபன்னம் -தானாகவே நேர்ந்திருப்பதும், ஸ்வர்கத்வாரம் –ஸ்வர்கவாயிலை,அபாவ்ருதம-திறந்து வைப்பதுபோன்ற, யுத்தம் ஈத்ருசம் -இத்தகைய யுத்தத்தை, ஸுகின: க்ஷத்ரியா: - பாக்கியமுடைய க்ஷ்த்ரியர்கள், லபந்தே-அடைகிறார்கள்
.இங்கு கண்ணன் கூறுவது என்னவென்றால் இந்த யுத்தம் பாண்டவர்களின் முயற்சிக்கு எதிராக ஏற்பட்டது. சமாதானம் செய்ய விரும்பினாலும் துரியோதனன் விரும்பவில்லை. அத்னால் அவர்களாக விரும்பி வராமல் தானாக வந்தது என்கிறார்.
இது திறந்து வைக்கப்பட்ட ஸ்வர்க வாசல் என்று கூறுவதன் பொருள், இருந்தாலும் இறந்தாலும் ஸ்வர்கமே லபிக்கும் என்பது. இறந்தால் வீர ஸ்வர்கம். வென்றால் தர்மத்தைக் காக்கும் பணியினால் பின்னர் ஸ்வர்கம் கிடைக்கும்.
இங்கு குந்தியின் மகனே என்று அழைத்ததன் நோக்கம் பக்வான் ஹஸ்தினாபுரம் சென்று திரும்பியபோது, குந்தி சொல்லி அனுப்பிய ஒரு செய்தியை நினைவூட்டுவதாகும்.
குந்தி கூறியது,
ஏதத் தனஞ்சயோ வாச்ய: நித்யோக்த்யுக்தோ வ்ருகோதர:
யதர்த்தம் க்ஷத்ரியா ஸூதே தஸ்ய காலோ அயம் ஆகத:
"எந்த செயலை எதிர்பார்த்து ஒரு க்ஷத்ரியத் தாய் மகனைப் பெற்றெடுக்கிறாளோ அந்த சமயம் வந்து விட்டது என்று அர்ஜுனனிடமும், எப்பொதும் துடித்துக் கொண்டிருக்கும் பீமனிடமும் சொல்ல வேண்டும்."
இதனால் மாத்ருவாக்ய பரிபாலனம் என்ற தர்மமும் வலியுறுத்தப் படுகிறது.
.
No comments:
Post a Comment