அகல கில்லேன் இறையும் என்
றலர்மேல் மங்கை யுறை மார்பா
நிகரில் புகழாய் உலகமூன்
றுடையாய், என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கண்ங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன் றில்லா அடியேனுள்
அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
திருவாய்மொழி 3335
எக்கணமும் உன்னை விட்டுப் பிரியாத பிராட்டியை நின் திருமார்பில் கொண்டவனே.
நிகரற்ற புகழ் உடையவனே.
மூன்று உலகுக்கும் அதிபதியே
என்னை ஆள்பவனே
நிகரற்ற அமரர்களும், நித்ய சூரிகளும் விரும்பும் திருவேங்கட மலையில் எழுந்தருளியிருப்பவனே
வேறொன்றும் புகல் இல்லாக அடியேன் உன் திருவடியின் கீழ் வந்திருந்து புகுந்தேன்.
இப்பாடலில் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திருவேங்கடமுடையானின் திருவடிகளில் சரண் புகுகிறார் ஆழ்வார்.
இத் திருப் பாசுரம் துவயப் பொருளைக் கூறுகிறது.
ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
அலர் மேல் மங்கை என்பதால் ஸ்ரீ என்ற சொல்லின் பொருளும்
அகலகில்லேன் என்றதால் மத் என்ற சொல்லின் பொருளும்
உறை மார்பா என்றதால் நித்ய யோகமும்
நிகரில் புகழுடையாய், உலகம் மூன்றுடையாய் மற்றும் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தான் என்றதால் நாராயண என்ற சொல்லின் பொருளும்
உன்னடிக் கீழ் என்றதால் சரணெள என்ற பொருளும்
அமர்ர்ந்து புகுந்தேனே என்றதால் சரணம் ப்ரபத்யே என்ற பொருளும் காணப் படுகின்றன.
திருப்பதி , திருமலை – திருவேங்கடம் ஆதிவராஹ க்ஷேத்ரம்

No comments:
Post a Comment