*"காத்தவராயன் தந்த மழை"*.
குடியானவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காத்தவாராயன் கோயிலுக்கு சென்ற சம்பவம்.- காற்று இல்லாமல் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை.
"காத்தவராயன் - காற்று வராத ராயன் கோயில் இது. இங்குள்ள சுவாமி, காற்று வராமல் தடுத்து, மழை பொழியச் செய்திருக்கிறார்"---- பெரியவா.
அணுக்கத் தொண்டர்களாய நாங்கள், காட்டுப்பாதை வழியாக ஸ்ரீசைலம் போகும் வழியில் போய் கொண்டிருந்தோம். ஸ்ரீ பெரியவாளும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
எங்களை எல்லாம் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லச் சொன்னார்கள்.
பாராயணத்தில் கவலை பாய்வது என்பார்கள். (அதாவது முடிவில்லாமல் நடுவிலேயே, திரும்பத் திரும்பச்சொல்லிக் கொண்டு வந்தோம்) ஊரும் வந்தபாடில்லை.
ஸ்ரீ பெரியவாள், "விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லவில்லை. லக்ஷார்ச்சனையே நடக்கிறது" என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். கடைசியில் ஊரும் வந்தது. சஹஸ்ர நாமமும் ஒருவழியாக முடிந்து விட்டது. அந்த ஊரில் பெருமாள் கோயிலில்தான் நாங்கள் தங்கினோம்.
அந்த ஊரின் குடியானவர்கள், அங்கேயுள்ள காத்தவராயன் கோயிலுக்குப் பெரியவாள், வர வேண்டுமென்று பிரார்த்தித்தார்கள். மிகவும் அசதியாக இருந்தாலும், அவர்களுடைய பிரார்த்தனையை ஏற்று, அந்தக்கோயிலுக்கும் ஸ்ரீ பெரியவாள் சென்றார்கள்.
அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததும், நல்ல மழை. சுமார் ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்து விட்டது. அந்த ஊர் ஜனங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.
ஊர் ஜனங்கள் சொன்னார்கள்; "மழை வந்தால், உடனே காற்றும் வந்து மழையைக் கலைத்து விடும். பெரியவாள், வந்ததால் காற்று வரவில்லை" என்றார்கள்.
ஸ்ரீ பெரியவாள் சொன்னார்கள்;
"காத்தவராயன் - காற்று வராத ராயன் கோயில் இது. இங்குள்ள சுவாமி, காற்று வராமல் தடுத்து, மழை பொழியச் செய்திருக்கிறார்"--- என்றார்கள்.
No comments:
Post a Comment