Monday, January 18, 2021

Donation - Daanam - HH.Sri Bharati Teertha Swamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்* 

தானம் கொடுப்பது சிலாக்யமானது. ஆனால் அதை ஆத்மப்ரசாரத்துக்காக செய்யக்கூடாது. धर्मः क्षरति कीर्तनात् என்று சாஸ்திரம் கூறுகிறது. தானம் கொடுப்பதை பறைசாற்றினால் தானத்தின் புண்யத்தை இழந்து விடுகிறோம் .

 அதேபோல், अतिथि देवो भव, நம் அதிதிகளை அன்புடன் வரவேற்க வேண்டும். மேலும்  अभ्यागतः स्वयं विष्णुः, ஒரு பெரிய மனிதன் நம் வீட்டுக்கு அழைப்பு இல்லாமலே வந்தால், அதை நாம் பெரிய அதிர்ஷ்டமாக கருத வேண்டும். இவ்வாறு, நல்லதை செய்து விட்டு அதற்கான பெருமையை ஸ்வீகரிக்காமல், நாம் அடக்கத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

மேலும் நமக்கு யாரேனும் எப்பொழுதாவது உதவி செய்திருந்தால், அதை நாம் ஒருபொழுதும் மறக்கக்கூடாது. நமக்கு மற்றவர்கள் செய்த நன்மைகளை மறந்துவிடுவது பெரிய பாபம். कृतघ्ने नास्ति निष्कृतिः, அந்த பாவத்துக்கு பிராயச்சித்தம். கிடையாது.

பகவத் கிருபைதான் நமக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கிறது. அதை பகவத் சேவைக்கும் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்கும் உபயோகப்படுத்துவது அதி உசிதம்.  மாறாக கர்வத்தை வளர்த்து நம் ஆஸ்திகளை துஷ்பிரயோகம் செய்வது முட்டாள்தனம். பணக்காரனாக இருந்தாலும் ஒருவன் கர்வத்தை தவிர்த்து நல் முறையில் நடந்து கொள்ள வேண்டும். 

ஒரு பொழுதும் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யக்கூடாது. மற்றவர்களைப் பற்றி மதிப்புக்குறைவான பேச்சுக்களை பேசி அவர்களை மனம் நோகச் செய்யக் கூடாது. நாம் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் நல்லதாகவே பேசவேண்டும், ஒருபொழுதும் கெடுதலாக பேசக்கூடாது. 

நல்ல வாழ்க்கையை நடத்துவதில் தீவிரமாக உள்ள ஒருவன் நமக்கு பெரியோர்கள் எடுத்துக் காட்டியிருக்கும் நல்ல வழிகளை பின்பற்றி நடந்து கொள்வது மிகவும் நல்லது

No comments:

Post a Comment