*வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் ஏன் ரத்னாங்கி மற்றும் ஏன் பரமபதவாசல் நிகழ்வு ?????*
முதலில் இந்த ரத்னாங்கியைப் வழங்கியது யார் என்று அறிந்து கொள்வோம், வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனுக்கு சாற்றப்பெறும் ரத்னாங்கி 1700 ஆம் வருடம் வழங்கப்பெற்ற அறிய ஆபரணம் 1900ங்களில் மறுபடியும் செப்பனிடப்பட்டது, பாகவதர்களால் அறிவோம் அறிய விடயத்தை.
அரங்கம் என்பதற்கு ஏற்றார்போல் திருவரங்கத்தில் இந்த இராப்பத்து பத்து நாட்களும் அரங்கன் ஒரு நாடகத்தினை தினம் நடிக்கின்றான், புறப்பாடு முதலே அந்த நாடகத்தைக் காண்போம். அரங்கன் மூலஸ்தானத்திலிருந்து கிளம்பும்பொழுது சாதரா போர்வை அணிந்து (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக) இரு கரங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் எழுந்தருளுவார், பின்னர் மேலப்படியில் மரியாதையாகி உத்தமநம்பி அவர்களுக்கு பரிவட்டம் வழங்கப்பெற்று இந்த நாடகத்தை நடத்திவைக்க பணிப்பார் ஸ்தானீகர்.
அதன்பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு மரியாதைகள் வழங்கிய பின்பு நாழிகேட்டான் வாயிலை அடைவார். அது என்ன நாழி? கேட்டான்? அந்த கதவுகளின் அருகில் வந்தவுடன் சரியான நேரம்தான் என்று கேட்கப்படும் நாழி பண்டைய காலங்களில் நாழி என்னாச்சு னு நம்மிடையே கேட்கும் வழக்கமும் இருந்தது. நேரத்தை நாழி என்று குறிப்பிடுவோம். நாழிக்கு 24 நிமிடம் என்பது இன்னும் சரியான ஒன்று. அங்கு நாழிகேட்கப்படுவதின் ரகஸ்யம் அரங்கன் புறப்பாடாகிய பொழுதே சாற்றியிருந்த போர்வைக்கு அர்த்தம். தான் ஒரு ஜீவாத்மாவைப்போல் இரு கரங்களை குறிப்பிடுவதனைப் போற்றி இரு கரங்கள் தெரிய புறப்பட்டது. அந்த ஜீவாத்மா தான் கிளம்ப வேண்டிய நேரத்தினை அறிந்து புறப்படுகின்றது.
ஒரு ஆத்மாவின் ஜீவதசைக்கு பின்பு 2 வகையினை பாதைகளில் பயணிக்கும் ஒன்று முக்திக்கு செல்லக்கூடிய பாதை இன்னொன்று எம தர்மலோகமாம் எமபட்டினம் செல்லும் பாதை, முக்திக்கு செல்லும் பாதையினை #அர்ச்சராதி மார்க்கம் என்று கூறுவர். இன்னொன்றை துமாதி மார்க்கம் என்பார்கள். இப்பொழுது அரங்கன் அர்ச்சிராதி மார்க்கத்தினை தான் காட்டப்போகின்றான். நாழி கேட்டானை அடைந்த பிறகு அரங்கன் துறை பிரகாரம் என்னும் பிரகாரம் கடப்பான். அந்த பிரகாரம் மட்டும் சற்றே மாறுபட்டது. நடுவினில் முழுதும் தொடர்ச்சியான மண்டபம். இரு மருங்கும் வெற்றிடம் ஏன் இப்படி என்றால் அந்த மண்டபத்திற்கு வெளிச்சம் என்றிட என்பீர்கள். ஆம் அர்ச்சிராதி மார்க்கத்தினை அடையும் ஜீவன் முதலில் விதியுத் அதாவது மின்னல் உலகம் பின்பு சூரியலோகம் சந்திரா லோகம் என ஒளிபொருந்திய லோகங்களை கடந்தே செல்லும். அதற்குத்தான் இந்த மண்டபம் வரிசையாக கட்டப்பட்டுள்ளது.
பின்பு விரஜா மண்டபம் அடைவார். அரங்கன் அங்கு வேத பாராயண கோஷ்டி முதலியன நடைபெறும் ஏன் அங்கு? இந்த ஜீவன் விரஜை என்னும் பேரெழில் ஆற்றை அடையும் அதுவே வைகுண்டத்தின் கரை அந்த ஆற்றை அடைந்த பிறகு அங்கு வேத கோஷங்கள் முழக்க தேவ மங்கையர்கள் நம்மை நீராடிடுவார்கள். நமக்கு மரியாதையைச் செய்வார்கள். இதுவரை அந்த ஜீவனுக்கு சூக்ஷும சரீரமா இருக்கும்.
கடைசியாக விரஜையில் அந்த ஜீவன் முழுகி எழுந்த உடன் அந்த ஜீவன் நான்கு காரமும் கஸ்தூரி திருமண் காப்போடு துலங்கும். அந்த மேனியினை வார்த்தையால் வர்ணிக்க ஒண்ணா ஒளிபொருந்திய மேனி வைகுண்ட ஏகாதசி நீங்கலாக மற்றைய நாட்களில் வைகுண்டவாசல் அருகில் வந்தவுடன் அரங்கனின் பேர்வை களையப்பெற்று கஸ்தூரி திருமண் காப்பு சாற்றப் பெற்று நான்கு காரத்துடன் அவர் உயர்த்தி காண்பிக்கப்படுவார். பின் அந்தமில் பேரின்ப நாடாம் வைகுண்டம் அடைவார். அதனால்தான் அந்த பேரெழில் ஒளி பொருந்திய மேனியினை காட்ட அரங்கனுக்கு #ரத்னஅங்கி சாற்றப் பெறுகின்றது. விவரிக்க ஒண்ணா காந்தியினைக் கூறவே உலகில் கிடைக்கும் இயற்கையான ஒளி பொருந்திய கற்களால் ஆன அங்கி.
வைகுண்டம் தாமம் 1000 கால்களையுடைய மண்டபத்தின் நடுவே திருமாமணி மண்டபத்தில் இறைவர் எழுந்தருளி இருப்பார். அந்த இறைவனோடு என்றும் ஆனந்த பரவசத்தில் இந்த ஆத்மா திளைப்பதை தான் அரங்கன் பரமபத வாசல் கடந்து ஆயிரங்கால் மண்டபமான லீலாவிபூதி அதாவது இந்த அவன் தற்காலிகமாக ஏற்பட்டுதியிருக்கும் இந்த வைகுண்டத்தினை அடைகிறார். இப்படி இந்த ஜீவனின் வழியைதானே நடித்து அதன் தன்மையினை அணிந்து காட்டுகின்றார். இந்த ஒரு அறிய நாடகம் அறிந்து நாம் இந்த சர்வ முக்கோடி வைகுண்ட ஏகாதசி திருநாளை அனுபவிப்போம்.
No comments:
Post a Comment