சைனிக் பள்ளியின் தனித்துவம் மிக்க இளையோர்கள் இப்பொழுது வருகைத் தர இருக்கிறார்கள்... முதலில் வருபவர்... பெங்களூரு முருகானந்தம் என்னும் 'ஆனந்த்'... தற்சமயம் USA ...
பெங்களூரின் குளிர்க் காற்று TRAIN ஐ விட்டு இறங்கும் போதே உறைக்க ஆரம்பித்து, உடல் நடுங்கியது... எங்களை வரவேற்க சைனிக் பள்ளி junior 'ஆனந்த்' வந்திருந்தார். அவரை OBA meet இல் பார்த்திருக்கிறேன்... பேசியிருக்கிறேன்... ஆனால் ONE TO ONE என்ற முறையில் இப்பொழுதுதான் சந்திக்கிறேன். 'பெங்களூரு குளிர் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை; அதனால் தான் shawl கொண்டு வந்தேன்; அக்கா ... போர்த்திக் கொள்ளுங்கள்' என்றார். மயிலுக்குப் போர்வை தந்த பேகன் வள்ளலைப் போல் சைனிக் பள்ளியின் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.
இளைய வயதுடைய அவர் பெரியவர்களைப் போல் மிகவும் பக்குவம் பெற்றவராகவும், பண்பாடு உடையவராகவும், பொறுப்புடனும் நடந்துக் கொண்டார். சைனிக் பள்ளி மாணவர்களில், அவர் வீட்டிற்குத் தான் நாங்கள் அதிகமுறை சென்றிருப்போம். அவர் சீனியர்களிடம் காட்டும் பணிவு, பெற்றோர்களுக்கான கடமை, நட்பு பேணுதல் ஆகியவை… பேரானந்தத்தைக் கொடுப்பதாக இருந்தது. 'அக்கா' என்று அழைக்கும் போது அதில் உரிமையிருக்கும்; சில வேளைகளில் அதில் கண்டிப்பும் இருக்கும்; அது எதுவாகிலும் சரி... அதில் அன்பு இழையோடிருக்கும் என்பதே உண்மை.
முதன் முதலாக அவருடைய திருமணத்திற்கு முன், அவருடைய சொந்த ஊருக்குச் சென்றபோது அவர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு, விருந்தோம்பல் செய்தது மெய்சிலிர்க்க வைத்தது. அவரது பெற்றோர்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பு, நம்பிக்கை, உயர்ந்த எண்ணம், 'இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ?' என்ற குறளின் பொருளை நினைவூட்டுவதாக இருந்தது. அந்தளவிற்கு அவர் பெற்றோர்களுக்கு செய்த கைமாறானது சிறந்திருந்தது.
ஒருமுறை எங்கள் மகன் bangalore centre இல் ஒரு interview attend செய்ய வேண்டி வந்தது. அதன் பொருட்டு ஆனந்த் வீட்டில் சென்று தங்கினோம். அவர் மனைவி அமைதி, சிரித்தமுகம்... என்னை எந்த உதவியும் செய்ய விடாமல் உபசாரம் செய்தார். எங்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். மெத்தை மீது மெத்தை போட்டு தூங்கச் சொன்னார். 'ஐயோ... இரண்டு மெத்தை எதற்கு?' ... என்றவுடன், 'அக்கா...சுகமாகத் தூங்குங்கள்' என்றார். உண்மையிலே சுகமான தூக்கம் தான்... மறக்க முடியாதது... ஒருமுறை அவர் தன் குட்டிக் குழந்தையை baby basket carrier போட்டு சைனிக் பள்ளி எடுத்து வந்தது நினைவிற்கு வந்தது. இப்போது அந்தக் குழந்தைதான் chair இல் அமர்ந்துக் கொண்டு சற்றும் சிரிப்பை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தது. நேரம் போகப் போக, அவளுடன் பேசப் பேச... புன்னகை அரும்பி, பின்... வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
அவளின் சுருண்ட கூந்தலும், உருண்ட அகன்ற விழிகளும் கொஞ்சிக் கொண்டே இருக்கத் தோன்றியது. பொம்மைகளின் நடுவே அவளும் ஒரு உயிரோட்டம் பெற்ற பொம்மையாகக் காட்சியளித்தாள்.
அப்புறம் நாங்கள் அவளை டான்ஸ் ஆடச் சொல்லி ரசித்தோம். ஆங்கிலப் பாடல்களை பாடிக் கொண்டே உடலை மென்மையாக அசைத்து ஆடினாள். நான் ஒரு பாட்டு பாடுகிறேன்; நீ ஆடுகிறாயா?.. என்று கேட்டவுடன், 'சரி' என்றாள். நான் ஆரம்பித்தேன், 'அப்படி போடு போடு'... என்ற பாடல் பாட, non stop ஆக, ரசித்து ரசித்து, குதித்து குதித்து ஆடினாள். பயங்கர கைத்தட்டல்... என்னதான் பெங்களூரின் வளர்ப்பாக இருந்தாலும், அந்த ஆங்கிலமும், கன்னடமும், ஹிந்தியும் கூட நம் மண்ணின் மணத்தின் முன் காணாமல் போனது என்னை ஆச்சரியப்படுத்தியது. அடுத்து ஒரு தடவை சைனிக் பள்ளியில் அவளைப் பார்த்த பொழுது நன்கு வளர்ந்திருந்தாள். நான் அவளைப் பார்த்த அந்த நிமிடம் அவளும் என்னைப் பார்த்தள். 'aunty ... நல்லாயிருக்கீங்களா?' என்றாள். 'ஏய்... அடையாளம் தெரியுதா?' என்றேன். 'தெரியுது'... என்று தலை அசைத்தாள். 'ஏய்...என்ன... தமிழ் எல்லாம் பேசறே'... என்றேன். 'தமிழ் பேசுவேன்; எனக்கு பிடிக்கும்;' என்றாள். அந்த நிமிடங்கள்... அவளின் பேச்சு, பாவனை, சிரிப்பு ஆனந்த் அவர்களின் அடையாளத்தை ஒப்பிட வைத்தது.
அடுத்து ஒருமுறை, எங்கள் மகன் ஒரு exam எழுதும் பொருட்டு மீண்டும் bangalore செல்ல நேர்ந்தது. 'இப்பொழுது தானே ஆனந்த் வீட்டில் சென்று தங்கினோம்; frequent ஆக அங்கே போய் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று online இல் bangalore lodge ஒன்றில் room book செய்தோம். முதல்நாள் night நானும், என் மகனும் அங்குச் சென்று தங்குவதாகவும், என் கணவர் மறுநாள் காலை எங்களுடன் வந்து சேர்த்துக் கொள்வதாகவும் திட்டம். நாங்கள் bangalore lodge சென்றடைந்த போது இரவு 7.30 மணி. அங்குச் சென்று பார்த்தால், online இல் பார்த்த room க்கும் நேரில் காண்பித்த room க்கும் சம்மந்தமே இல்லை. something wrong என்று நினைத்த மாத்திரத்தில் நாங்கள் அங்கு கால் கூட பதிக்கவில்லை. lodge காரர்களோ இது பிடிக்கவில்லை என்றால் அந்த ரூம் பாருங்க; இந்த ரூம் பாருங்க... என்று torture செய்தனர்
.
நான் உடனே என் மகனிடம், ஆனந்துக்கு call செய்து அவர்கள் வீட்டிற்கு எப்படி வருவது என்று கேள்' என்றேன். call செய்த சில நிமிடங்களில் அவரே காரில் வந்து சேர்ந்தார். 'அக்கா... நீங்கள் முதலில் காரில் வந்து உட்காருங்க; இங்கு நிற்காதீர்கள்' என்று அவரே கார் கதவை திறந்து விட்டார். பிறகு அங்கிருப்பவர்களிடம் கன்னடத்தில் பேசி, advance வாங்கிக் கொண்டு என் மகனுடன் காருக்கு வந்தார். வீட்டிற்கு வந்தவுடன், 'உங்களை யார் அங்குப் போகச் சொன்னது?.. அது என்ன மாதிரி இடம் என்று உங்களுக்குத் தெரியுமா?... நான் இருக்கும் போது நீங்க ஏன் அங்குப் போனீங்க?'... என் மகனிடம், 'நீ சொல்ல மாட்டாயா' என்றார். 'MAN வரட்டும் பேசிக்கொள்கிறேன்' என்றார்.
'நான் பெங்களூரில் இருக்கும் வரையிலும் நீங்கள் வேறு எங்கேயும் சென்று தங்கக்கூடாது; இங்கு தான் வர வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் சாவி கொடுத்து விட்டுச் செல்கிறோம்; வந்து தங்கிக்கோங்க... என்றார். அந்த கண்டிப்பு, பதைபதைப்பு, அன்பான கோபம், அக்கறை, உரிமை... இப்படி என்னவென்று சொல்வது... ஆனந்த்... இவையெல்லாம் உங்களை என்றும் காக்கும்...
அதன் பிறகு பெங்களூரின் சிவதரிசனம், புகழ்ப் பெற்ற கோயில், பெரிய மால் போன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பூரிக்க வைத்தார். சைனிக் பள்ளி ஏற்படுத்தித் தந்திருக்கும் இதுபோன்ற நட்பு உறவுகள் அதன் தனித்துவத்தை மேலும் போற்றுவதாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்து, சுறுசுறுப்பு என்றால் அவர்தான்... முயற்சி என்றால் அவர்தான்... ஒன்று கொடுத்தால் பத்து கொடுக்கலாம்; ஆனால் ஒன்றையும் எதிர்பார்க்காமல் பத்து தருவார் என்றால்... அது அவர்தான்... இயற்கையை ரசிக்கும் அழகு; அதன் வெளிப்பாடாக 'WOW ' என்று கூச்சலிடும் அந்த அழகு... அது அவர்தான்... INNOVATION மற்றும் ADVENTURE என்றால் அவர்தான்... அப்படிப்பட்ட அவர், காட்சிக்கு எளியோன் தான்; ஆனால் உயர்ந்தோனாக விளங்கும் நெடுமால்... அவர் வேறு யாருமல்ல... பெங்களூரு பாலாஜி அவர்கள் தான்... அந்த JUNIOR ஐ சைனிக் பள்ளியில் சந்தித்த பொழுது அவர் அதிகமாக பேசவில்லை; ஆனால் அன்பாகப் பேசினார்... அடக்கமாகக் கலாய்த்தார்.
எதையாவது கேளுங்க அக்கா... உங்களுக்கு வாங்கித் தருகிறேன்' என்பார். நான் 'சாக்லேட்ஸ்' என்றவுடன் ஒரு 20 வகைகளில் வாங்கி வந்து தருவார். பள்ளிக்கு வந்திருந்த பெண்களும், குழந்தைகளும் மகிழ்ந்து சாப்பிட்டோம். அடுத்தமுறை வந்த பொழுது பெங்களூரிலிருந்தே நிறைய variety of chocolates வாங்கி வந்திருந்தார். என்னிடம் கொடுத்தார். அந்தமுறை நான் ஏதேதோ நிகழ்வின் காரணமாக அதை எல்லோருக்கும் கொடுக்க மறந்து விட்டேன். வீட்டில் போய் தான் பார்த்தேன். அவ்வளவு chocolates… நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்?... அதை என் கல்லூரி மாணவ, மாணவிகள் 100 பேர்களுக்குக் கொடுத்தேன். அவர்களிடம் பாலாஜியைப் பற்றிக் கூறினேன். அவருடைய அந்த ஈகைப் பண்பு என்னைப் போலவே எல்லோரையும் கவர்ந்தது. வாழ்த்தி மகிழ்ந்தனர்.
அடுத்து அவர் ஒரு வித்தியாசமான jolly trip ஏற்பாடு செய்து விட்டு, அதற்கு எங்களையும் வரச் சொல்லி, அழைத்துச் சென்றார். அந்த trip க்கான concept மிகவும் நன்றாக இருந்தது. அந்த trip ல் கலந்து கொண்டவர்கள் அனைவரும் juniors தான். நாங்கள் மட்டுமே seniors. அவர் seniors ஐ respect செய்தது இன்றும் என் நினைவில் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. பாலாஜி... உங்களுக்கு புண்ணியங்கள் சேரட்டும்...
இன்றைய பரபரப்பான சூழலில் இருந்து விடுபட்டு, செயற்கையைத் தவிர்த்து, இயற்கையோடு ஒன்றி, மக்கள் தொடர்பின்றி, ஒரு குறிப்பிட்ட நாட்கள் தங்கி, நம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணி, புத்துணர்ச்சி பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த trip தான் அது.
அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் பெங்களூரு கூர்க் பகுதியின் ஆற்றங்கரையோரம். மணல் சார்ந்த, சுற்றிலும் மலைசார்ந்த, காட்டுப் பகுதி அது. 3 நாட்கள் ஆள் அரவமின்றி, செல்போன் இன்றி, மின்சாரம் இன்றி, டிவி இன்றி, வாகனங்கள் இன்றி, மக்கள் தொடர்பு ஏதும் இன்றி... பகலில் மிதமான சூரிய ஒளியில், திரண்ட மேகத்துடன் கூடிய வான வெளியில், மழைத் தூறலில்... இரவில் கூடாரங்களில், கயிற்று கட்டில்களில், நிலா வெளிச்சத்தில், ஆற்று நீரின் சலசலப்பில், மரங்களின் ஊடே நுழையும் காற்றின் ஓசையில், பறவைகளின் சப்தத்தில், விலங்குகளின் மத்தியில்... என்று அந்த இடம் அசத்தியது.
'அந்த 3 நாட்கள்' பாலாஜியின் இயக்கத்தில் என்றும் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சிறந்த அனுபவப் படமாகும். நன்றி. பாலாஜி... நன்றி...வந்திருந்த அனைவரும் நன்கு enjoy செய்தனர். பகல் நேரத்தில், நீச்சல், மலையேற்றம், மணலில் படுத்தல், உடற்பயிற்சி, இயற்கையை ஆராதித்தில், உண்டு; உறங்குதல்... என்று கழிந்து… உடலுக்கும், மனதிற்கும், இன்பம் ஊட்டப் பட்டது. இரவு நேரத்தில் அறிவுக்கு விருந்தளிக்கப்பட்டது மிகவும் சிறப்பு. அறிவு சார்ந்த விசயங்கள், general topic களில் கருத்து பரிமாற்றங்கள், views, விளக்கங்கள் என்று... chance சே இல்லை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்திருந்தனர். அந்த அனுபவம், சைனிக் பள்ளியின் மற்றுமொரு தனித்தன்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது.
அங்கிருந்து நாங்கள் புறப்பட்டு காட்டுப் பகுதியை கடக்க நேர்ந்த போது, ஒரு 10/12 யானைகள் கூட்டமாக வந்தன. மிகப்பெரிய, மயிர்கள் செறிந்த, தந்தங்களைக் கொண்ட, முரட்டுத்தனமானக் காட்டு யானைகள். பார்க்க பயமாகவும் இருந்தது. ஆள் அரவம் கேட்டவுடன், சில யானைகள் அப்படியே நின்றன. சில யானைகள் நடந்தும் சென்றன. நாங்கள் சென்ற வண்டி நிறுத்தப்பட்டு, வண்டியின் சன்னல்கள் அடைக்கப்பட்டு, சப்தமின்றி இருந்தோம். வயதில் முதிர்ந்த இரண்டு யானைகள் எங்கள் பாதையிலேயே நின்றன. அது அங்கும், இங்கும் பார்த்தவாறு வேறு நின்றன. வண்டியை start செய்து கிளப்பினால், அது, அந்தச் சப்தத்தைக் கேட்டு, தாக்குதலை மேற்கொண்டு விட்டால் என்ன செய்வது... என்று அமைதியாக இருந்தோம். சிறிது நேரத்தில் யானைகள் கடந்துச் சென்றன.
அதன்பிறகு வண்டியை மெதுவாக start செய்து, சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறே கிளம்பினோம். கிளம்பிய சில நொடிகளில் மீண்டும் இரண்டு வண்டியை நோக்கி ஓடிவர, டிரைவர் பயந்து போய் வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்த juniors வண்டியை நிறுத்தாதீங்க... என்று டிரைவரை ஊக்கப்படுத்தி, அவ்விடத்தைக் கடந்தோம். thrilling experience அது...
அடுத்து ஒருமுறை mysore அருகில் துபாரே என்ற இடத்தில் தங்கி, யானைகள் முகாம் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அந்த இடமும் ஆறு,காடு, மலை போன்ற சுற்றுப்புறத்தைக் கொண்டிருந்தது. தங்குமிடம், மரம் மற்றும் மூங்கில்களால் கட்டப்பட்ட வீடுகளாகி, நவீனத் தன்மையுடனும், இயற்கை அழகுடனும் காட்சியளித்தது; தூய்மையுடன் விளங்கியது. குழந்தைகளுக்கான வீர விளையாட்டுகள், boating, elephant உடன் விளையாடல், அதற்கு குளிப்பாட்டல், elephant riding, யானைகளைக் கட்டிக்கொண்டு போட்டோ எடுத்தல், காட்டிற்குள் நடந்துச் சென்று இயற்கையை ரசித்தல் போன்ற அம்சங்களைக் கொண்டு சிறந்த பொழுது போக்கிற்கு இடமளித்தது.
யானைகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடமாக அது விளங்கியதால், முன்னர் சந்தித்த யானைகளுக்கு மாறானதாக, சாதுவாக, நெருங்கித் தொட்டுப் பழகும் அளவிற்கு யானைகள் பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. இரவில் குழுவினர்களுடன் கலந்துரையாடல், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், திறமை வெளிப்பாடுகள், camp fire என்று மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது. பாலாஜியின் செயல் வண்ணத்தில் அனைத்து ஏற்பாடுகளும் வித்தியாசமாக, மனங் கவர்ந்ததாக இருந்தது. சைனிக் பள்ளியின் தனித்துவத்திற்கு இவர் ஒரு அடையாளம்.
அடுத்து, இடம் பெறுபவர் மேஜர் இராமச்சந்திரன் அவர்கள். நாங்கள் பெங்களூரு trip இன் பொருட்டு சென்ற பொழுது அவர்கள் வீட்டில்தான் breakfast சாப்பிட்டோம். அவர்கள் வீட்டில் அவர் குழந்தையிலிருந்து எல்லாமுமே அழகுதான். அவர்களின் துணைவி well disciplined and orderly woman. வீட்டு நிர்வாகத்தை அவர் சிறப்பாக மேற்கொண்டிருந்தது, வீட்டினை பார்த்த மாத்திரத்தில் தெரிய வந்தது. மேஜர் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால்... மனிதநேயம் மிக்கவர்; அன்பானவர்; அக்கா என்று அழைக்கும் போதே அதில் கனிவு இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் திட்டமிட்டு அதை வீணாக்காமல் செலவழிப்பார். அவரது உடற்பயிற்சி முறைகள், ஆரோக்கியத்திற்கான உணவு நெறிகள் ஆகியவை வியப்பூட்டும் வண்ணம் இருக்கும். உடலை நன் முறையில் பேணி, இளமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்.
'கலாய்த்தல்' என்பது அவரிடம் குறிப்பிடும்படியாக இல்லை. ஏனெனில் மற்றவர்களின் மனது புண்படக் கூடாது என்பதில் அக்கறைக் கொண்டிருப்பவர். அவர் கொடுக்கும் advise மற்றும் tips மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.அவருக்கு ஒரு குழந்தையிருந்தும் மேலும் ஒரு குழந்தையை adopt செய்து கொண்டது அவரின் முற்போக்குச் சிந்தனை மற்றும் அவரது பரந்த நோக்கினைக் காட்டுவதாய் உள்ளது.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவரது அறிவின் பரப்பு வியப்பூட்டுகிறது. எவ்வளவு சிந்தனைகள்... வெவ்வேறு கோணங்கள்... புதிய புதிய செய்திகள்... கணிப்புகள்... புரிய வைத்தல்... என்று அறிவுப் பசியினைத் தீர்க்கும் களமாக அவர் விளங்கினார் எனில் அது மிகையாகாது. நேர்த்தியான வாழ்க்கை வாழும் அவரது தனித்துவம் சைனிக் பள்ளியின் கொடை என்பதை மறுக்கவியலாது.
நான் சந்தித்த சைனிக் பள்ளி seniors மற்றும் juniors அத்துணைப்பேரும் இது போன்ற தனித்துவங்கள் நிரம்பப் பெற்றவர்கள் தாம். ஏன்... நான் சந்திக்காத மற்றவர்களும் இப்படித்தான் இருக்கமுடியும்; இருக்க வேண்டும்... ஏனெனில் 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது இயற்கை அல்லவா? ... சைனிக் பள்ளி மாணவர்களை அவதார புருஷர்கள் என்று கூறவில்லை; எனினும் அவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது; குறிப்பிட்ட சூழ்நிலையில் தரப்படும் உளவியல் கல்வி என்றும் பொய்க்காது. அதனால் நீங்கள் வித்தியாசமானவர்கள்; வேறுபட்டவர்கள்; இணை இல்லாதவர்கள்; அடையாளம் கொண்டவர்கள்; நீங்கள் சைனிக் பள்ளியின் தனித்துவம் மிக்கவர்கள்... இப்படி… சொல்லிக் கொண்டே போகலாம்... நீங்கள் மட்டுமல்ல; எதிர் காலத்தில் வெளிவரும் சைனிக் பள்ளி மாணவர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்; கால மாறுதல்கள் எதுவும் அவர்களைப் புரட்டி போட்டு விடக் கூடாது. இதை... இதைத்தான் நாங்கள் சைனிக் பள்ளியின் தனித்துவமாகக் கருதுகிறோம்… எதிர்பாக்கிறோம்...
(தனித்துவங்கள் மேலும் தொடரும்)...
No comments:
Post a Comment