Thursday, October 8, 2020

When to start a pitru karma? - musiri deekshitar

*02/09/2020* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் முறையை ஒரு வருடத்தில் நாம் செய்யக்கூடிய கர்மாக்களை விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

*முதலில் இந்த ஷண்ணவதி தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் யார் /எந்தக் காலத்தில் எந்த நேரத்தில்/ என்று பார்த்தோம். அடுத்ததாக இதை எங்கு செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.*

*அதாவது தகப்பனார் காலமான உடன் பன்னிரண்டாவது நாள் காரியம் முடிந்து சபிண்டிகரணம் செய்து முடித்தபின், அதற்கு மறுநாளிலிருந்து நமக்கு மிதுன் கர்மாவிற்கு அதிகாரம் வருகிறது.*

*சபிண்டீகரணம் முடிந்த மறுநாள் பிர்ம்மயஞ்யம் முதல் நம்முடைய பிதுர் கர்மா ஆரம்பமாகி விடுகிறது. அதிலிருந்து என்ன புண்ணிய காலங்கள் வருகிறது என்பதை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான காலங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் பஞ்சாங்கத்தில் பார்த்து தீர்மானிக்க வேண்டும் கொஞ்சம் கடினம் இருந்தாலும் தெரிந்துகொள்ளலாம்.*
*இதற்காகத்தான் நம்முடைய வருடப்பிறப்பு அன்று பஞ்சாங்க படனம் என்று வைத்திருக்கிறார்கள். அன்று என்ன செய்ய வேண்டும் என்றால் காலையிலேயே நவகிரகங்களை பூஜை செய்து, பஞ்சாங்கம் கணிக்க வேண்டும் அதுதான் அன்றைய காரியம்.*

*திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் இந்த ஐந்தையும் கணிக்க வேண்டும். இதற்கு நிறைய கணக்குகள் போட்டு கணிக்க வேண்டும். மூன்று விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் முதலில் தர்மசாஸ்திரம் முழுமையாக தெரிய வேண்டும். ஜோதிடம் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். நாம் இருக்கக்கூடிய தான பகுதிகளிலே கிரகங்களினுடைய நிலைகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.*

*சூரிய உதயம் அஸ்தமனம், இவைகள் உடைய காலங்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் எந்த ஒரு புண்ணிய காலத்தையும் தீர்மானிக்க முடியும். சூட்சுமமாக தீர்மானிக்க வேண்டும் ஆனால், ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள முடியும். இது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாடசாலைகளில் நாம் வேத அப்பியாசம் செய்யும் போது சொல்லிக் கொடுப்பார்கள்.*

*நாம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். பாடசாலைகளில் இருப்பதினால் ஒரு நல்ல லாபம் உண்டு நமக்கு. பஞ்சாங்கம் பார்க்கத் தெரிய வேண்டும் ஒரு நாள் பார்த்துக்கொள்ள தெரிய வேண்டும்.*

*இன்றைக்கு இந்த புண்ணிய காலம் உண்டா இல்லையா என்கின்ற அளவுக்கு நமக்கு ஒரு ஞானம் வந்து சேரும். அந்த அளவுக்கு வேத வித்தையை கற்கக் கூடிய இடங்களில் நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.*

*ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் நம்முடைய ஈடுபாடுகள் எல்லாம் வேற இடத்திலே செல்வதினால், இந்த பஞ்சாங்கம் கணிக்க கூடி பக்கத்திலேயே நமக்கு புரிதல் குறைவாக இருக்கிறது.*

*ஆனாலும் இந்த கர்மாக்களை செய்து தான் ஆக வேண்டும் என்பதினால், நிறைய பேர் நமக்கு சகாயம் செய்கிறார்கள். இந்தப் பஞ்சாங்கங்கள் கணித்து அதை ஒரு லிஸ்ட் ஆகவே போட்டுக் கொடுக்கிறார்கள் இன்று.*

*ஏனென்றால் இந்த ஷண்ணவதி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு விழிப்புணர்வு எல்லோருக்கும் கிடைக்கிறது. கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்ற ஈடுபாடு வருகிறது ஒரு 15 நிமிட காரியம் தானே அதை செய்வோம். ஈடுபாடு வருவதே ஒரு மறுமலர்ச்சி தான். அதற்கு நிறைய பேர் லிஸ்ட் போட்டுக் கொடுக்கிறார்கள் அதை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.*

*சுக்ல பக்ஷத்தில் வந்தால் சங்கம காலத்திலேயே செய்துவிட வேண்டும். சமயம் இருக்கும் பொழுது பத்தரை மணி அளவில் ஸ்நானம் செய்துவிட்டு செய்யலாம். பொதுவாகவே சிரார்த்த காரியங்களில் காலையில் ஒரு தடவை ஸ்நானம் செய்துவிட்டு, வேஷ்டியை உலர்த்தி காய போட வேண்டும். திரும்பவும் மாத்தியான்னிக காலத்தில் ஒரு முறை ஸ்நானம் செய்துவிட்டு, உணர்த்திய அந்த வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு அந்த பிதுர் கர்மாவை செய்ய வேண்டும்.*

*இது அனைத்து பிதுர் கர்மாக்களிலும் பொருந்தும். சுக்ல பட்சத்தில் வந்தால் சங்கம காலத்திலேயே நாம் செய்து விடலாம் என்று நமக்கு விட்டு கொடுத்திருக்கிறார்கள் ஏனென்றால் காலையில் நம்மால் ஒரு காபி சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை.*

*ஆனால் தர்ப்பணம் செய்து முடிக்கின்ற வரையிலும் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தான் இருக்க வேண்டும். நாம் ஏதாவது சாப்பிட்டு அது வயிற்றில் தங்கி இருந்தால் அதனோடு கூட நாம் பிதுர் காரியங்கள் செய்தோமானால், அது பலனில்லாமல் போகும். நம் வயிற்றில் இருக்கக்கூடிய ஆகாரம் விஷமாக மாறும். ஆகையினாலே நாம் ஏதாவது சாப்பிட்டால் காபியோ அல்லது ஏதாவது அவைகள் நம்முடைய வயிற்றிலிருந்து வெளியே மல மூத்திர விசர்ஜனம் ஆக வரவேண்டும். பிறகு ஸ்நானம் செய்துவிட்டு அந்த பிதுர் கர்மாவைச் செய்ய வேண்டும்.*

*இதை தர்ம சாஸ்திரம் சொல்லவில்லை நானாக சொல்கிறேன். மிரண்டால் தர்மசாஸ்திரம் அதற்கு விட்டுக்கொடுக்கவில்லை இந்த நாட்களில் காலை வேளையில் ஒரு காபி ஆவது சாப்பிட வேண்டியிருக்கிறது என்பதினால்  அவைகள் ஜீரணமாகி மல மூத்திர விசர்ஜனம் ஆகும் வரை காத்திருந்து பிறகு ஸ்நானம் செய்துவிட்டு கர்மாவை செய்ய வேண்டும்.*

*அதாவது பிதுர் கர்மா செய்யும்போது வயிற்றிலே எந்த ஆகாரமும் தங்கி இருக்கக் கூடாது. தாகமாக இருக்கிறது என்றால் தீர்த்தம் மட்டும் சாப்பிடலாம் தப்பில்லை இது எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.*

*கூடிய வரைக்கும் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் செய்யவேண்டும் எல்லாவற்றுக்கும் மனசுதான் காரணம். மனதை ஒரு பரிபக்குவம் செய்துகொண்டால் நம் சொல்படி கேட்கும். அது போல் இருக்க பழக்கப்படுத்திக் கொண்டால் அது நடைமுறைக்கு வந்துவிடும்.*

*இந்த ஷண்ணவதி ஸ்ராத்தங்களை நாம் தர்ப்பணம் ஆக செய்கிறோம். அதற்கும் தர்மசாஸ்திரம் விட்டுக்கொடுத்து இருக்கிறது. இரண்டு பிராமணர்களை வரித்து, அப்படி ஸ்ராத்தம் ஆக செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் ஹிரண்யமாக செய்ய வேண்டும். அப்படியும் இல்லையென்றால் தர்ப்பணம் ஆக செய்ய வேண்டும். இதுபோன்ற கிரமம் இந்த ஷண்ணவதி தர்ப்பணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது*

*ஆனால் எப்படி செய்தாலும் தர்ப்பணம் என்பது உண்டு. சில இடங்களிலே சிராத்தம் செய்வதற்கு முன்னர் தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு சிராத்தம் செய்ய வேண்டும். சில இடங்களில் சிராத்தம் செய்த உடன் தர்ப்பணம் செய்ய வேண்டும்.*

*சில இடங்களில் சிராத்தம் செய்த மறுநாள் தர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படி மூன்று விதமாக பிரித்திருக்கிறார்கள் எதை எங்கெங்கே செய்ய வேண்டும் என்பதை ஸ்ராத்தம் என்கின்ற தலைப்பில் விரிவாக பார்த்திருக்கிறோம். அப்படி இந்த ஷண்ணவதி ஸ்ராத்தங்களை  தர்ப்பணம் ஆகவே செய்யலாம் என்று தர்ம சாஸ்திரம் காட்டுகிறது.*

*ஸ்நானம் செய்துவிட்டு இந்த ஷண்ணவதி ஸ்ராத்தங்களை தர்ப்பணம் ஆகவே செய்யலாம். மற்ற ஸ்ராத்தங்களுக்கு இப்படி பொருந்தாது.  நாம் செய்யக்கூடிய நாந்தீ அல்லது வருடாவருடம் செய்யக்கூடிய தாயார் தகப்பனார் ஸ்ராத்தத்திற்க்கு இது பொருந்தாது.*

*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் விரிவாக பார்க்கலாம்*

No comments:

Post a Comment