Tuesday, October 20, 2020

Geetanjali - Tagore

கீதாஞ்சலி 42 J K SIVAN தாகூர்
42. வாழ்க்கை எனும் ஓடம்
42. Early in the day it was whispered that we should sail in a boat, only thou and I, and never a soul in the world would know of this our pilgrimage to no country and to no end.
In that shoreless ocean, at thy silently listening smile my songs would swell in melodies, free as waves, free from all bondage of words.
Is the time not come yet? Are there works still to do? Lo, the evening has come down upon the shore and in the fading light the seabirds come flying to their nests.
Who knows when the chains will be off, and the boat, like the last glimmer of sunset, vanish into the night?
இன்று விடிகாலை என்காதில் உன் குரல் ...ரகசியமாக.. வா நீயும் நானும் மட்டும் தனியாக ஒரு படகில்.போவோம்..கிளம்பி விட்டோம்....ஒரு ஆழமான கடலில் மிதந்து போகிறோம்.....உலகில் வேறு எந்த ஒரு ஜீவனுக்கும் நமது இந்த ரகசிய பயண ஏற்பாடு தெரியாது. எங்கே போகிறோம் என்று நமக்கே தெரியாது, ஏதோ எல்லையே இல்லாத ஒரு இடத்திற்கு....
நாம் செல்வது கரையே இல்லாத ஒரு கடல்.....நான் ஆனந்தமாக படகை செலுத்துகிறேன்.... 
கூடவே ''இனிமையாக'', என்னால் முடிந்த அளவு இனிமையாக, பாடுகிறேன். நீ மௌனமாக உன் புன்சிரிப் போடு கேட்கிறாய். என் ''பிர்கா'' க்களும் அலை அலையாக, இந்த கடலின் அலை போல, வார்த்தைகளின் கட்டுப்பாடு இல்லாமல் காற்றில் ஆடுகிறது... வெறும் கற்பனைப் பயணமா? ஏன் இன்னும் நேரம் வரவில்லையா? இன்னும் மாளாத வேலை உனக்கு இருக்கிறதா?
பார்த்தாயா, அதற்குள் அந்தி நெருங்கி விட்டது. சூரியன் மறையப்போகிறான். ஒளி குறைந்துவிட்டதே என்று பறவைகள் வேகமாக தமது கூடுகளை நோக்கி திரும்புகிறதே.
கிருஷ்ணா உண்மையில், இந்த சங்கிலி எப்போது விலகும்?. எப்போது படகு புறப்படும்? , சூரியனின் கடைசி ஒளி இருளில் மறைவது போல் இந்த படகும் எப்போது அதோ அந்த நீண்ட எல்லை யற்ற கடலில் இருளில் மறையும்?
கீதாஞ்சலி 43 J K SIVAN
தாகூர்
43. கருணா சாகரா வா
43 The day was when I did not keep myself in readiness for thee;
and entering my heart unbidden even as one of the common crowd, unknown to me,
my king, thou didst press the signet of eternity upon many a fleeting moment of my life.
And today when by chance I light upon them and see thy signature,
I find they have lain scattered in the dust mixed with the memory of joys
and sorrows of my trivial days forgotten.
Thou didst not turn in contempt from my childish play among dust,
and the steps that I heard in my playroom are the same that are echoing from star to star.

கிருஷ்ணா, நீ எப்போது வருவாய் என்று தெரியாதே. நான் தயாராகவில்லையே .
அழைக்காமலே வருபவன், சொல்லாமலே வந்து நிற்பவன் நீ. முன் பின் அறியாத ஏதோ வெளியூரான் போல, என் ராஜா, கிருஷ்ணா, நீ என் மாறி மாறி தோன்றும் எண்ணற்ற கணங்களில் உன் அழிவற்ற அன்பின் முத்திரையை என் மீது பதிவிடுபவன்..
ரொம்ப ஆச்சர்யம் கிருஷ்ணா. இன்று அதிர்ஷ்டவசமாக நான் உன் அன்பின் அடையாளத்தை என் எண்ணங்களில் தேடினேன்.
அடப்பாவி எவ்வளவு முட்டாள் நான். உன் அருமையான தூய கருணையை குப்பை குப்பையான என் இன்ப துன்ப எண்ண புழுதியில் கலக்கும்படி விட்டுவிட்டேன் என்று தெரிந்தது.
நீ எங்கே நான் எங்கே? துளியும் என் செயலுக்காக என் மீது நீ அருவருப்பைக் காட்டவில் லையே.
எங்கும் பரவி இருப்பவனாயிற்றே. சிறு குழந்தை அப்படி தான் நல்ல பொருளைக் கொடுத்தால் அதன் அருமை பெருமை தெரியாமல் டப்பென்று தூக்கி எறிந்து உடைக்கும் என்று பெரும்போக்காக என்னை அரவணைத்தவன்.
என் குடிசையில் உன் காலடி சத்தம் கேட்கிறது கண்ணா, நீ பெரிய மாட மாளிகை, புழுதி மிகுந்த குடிசை ரெண்டுமே ஒன்றாக கருதுபவன். என் சுக துக்க கணங்களில் நான் உழல்பவன் .நான் சிறுவன், புழுதியில் புரண்டு விளையாடுபவன். நீ என்னை புறக்கணிக்கமாட்டாய். அடடா, நீ என்னை நெருங்கி வரும் காலடி சப்தம், ஆகாயத்தில் ஒரு நக்ஷத்ர மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்கு நீ நகரும் எதிரொலியோ?
கீதாஞ்சலி 41 J K SIVAN
தாகூர்
41 காத்திருந்து கண் பூத்தது
41. Where dost thou stand behind them all, my lover, hiding thyself in the shadows?
They push thee and pass thee by on the dusty road, taking thee for naught.
I wait here weary hours spreading my offerings for thee,
while passers-by come and take my flowers, one by one,
and my basket is nearly empty.
The morning time is past, and the noon.
In the shade of evening my eyes are drowsy with sleep.
Men going home glance at me and smile and fill me with shame.
I sit like a beggar maid, drawing my skirt over my face, and
when they ask me, what it is I want, I drop my eyes and answer them not.
Oh, how, indeed, could I tell them that for thee I wait,
and that thou hast promised to come. How could I utter for shame
that I keep for my dowry this poverty.
Ah, I hug this pride in the secret of my heart.
I sit on the grass and gaze upon the sky and dream of the sudden splendour of thy coming--
-all the lights ablaze, golden pennons flying over thy car, and they at the roadside standing agape,
when they see thee come down from thy seat to raise me from the dust,
and set at thy side this ragged beggar girl a-tremble with shame and pride,
like a creeper in a summer breeze.
But time glides on and still no sound of the wheels of thy chariot.
Many a procession passes by with noise and shouts and glamour of glory.
Is it only thou who wouldst stand in the shadow silent and behind them all?
And only I who would wait and weep and wear out my heart in vain longing?
என் உள்ளங்கவர் கள்வா, எங்கே போனாய் ? ஏன் எதற்காக எல்லோர் பின்னாலும் சென்று இருளில் நின்றுகொண்டு மறைந்து ஓரமாக நிற்கிறாய்? எல்லோரும் ஏதோ அவசரத்தில் உன்னை பிடித்து தள்ளிவிட்டு உன்னை தரையில் புழுதியில் விழவைத்து விட்டு எதற்கு எங்கோ அவசரமாக செல்கிறார்கள்? ஒருவருக்கும் நீ லக்ஷியமில்லையா? நான் அப்படியில்லையே.
என்னைப்பார். நான் உன்னையே வேண்டி மணிக்கணக்காக கால் கடுக்க விழி இமைக்காமல் உன்னையே நினைத்து, நீ வரும் வழி பார்த்து காத்திருக்கிறேன். உன்னால் எனக்கு எத்தனை பெருமை தெரியுமா? எத்தனையோ பேர் என்னிடம் பூ வாங்கி செல்கிறார்கள். என் கையில் உனக்கு அளிக்கவேண்டும் என என்னாலியன்ற உனக்கு பிடித்த புஷ்பங்கள் கூடை நிறைய வாங்கி வைத்திருக்கிறேன். வா, வந்து பெற்றுக் கொள், ஒன்று ஒன்றாக எடுத்துக் கொண்டு விடு. கூடை காலியாகட்டும்.
இதோ காலை நேரம் ஓடிப்போய்விட்டது. பகலும் வந்தது. சாயங்காலம் தலையை காட்டிவிட்டது. கொட்டாவி விட்டுக்கொண்டு கண் சொக்குகிறது தலை என்னை அறியாமல் கவிழ்கிறது. தூக்கமா? உனக்காக காத்திருந்து களைத்து விட்டேனா?
உன்னைத்தவிர எல்லோரும் என் கண்ணில் படுகிறார்கள் கிருஷ்ணா. எங்கே அத்தனை பேர் பின்னால் எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டிருக்கிறாய்? நீ என்ன நிழலா? எவ்வளவு மக்கள் வருகிறார்கள் போகிறார்கள். உன்னை ஒரு பொருட்டாகவே எவரும் கருதவில்லையே. எவ்வளவு மணியாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். என் எதிரே பார்த்தாயா எத்தனை பொருட்கள் உனக்கு பிடிக்குமே என்று பரப்பி வைத்திருக்கிறேன். நிறைய பூக்கள் மலையாக குவித்து வைத்திருக்கிறேன். வருவோர் போவோர் ஒவ்வொன்று எடுத்துப்போகிறார்கள். நான் தடுக்கவில்லை. எல்லாமே அதனால் என் கூடைகள் காலி.
எல்லோரும் என்னை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கி தின்கிறது. நான் பிச்சைக்கார பெண் போல அனாதையாக என் பாவாடை நுனியால், கிழிந்த முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். ''ஏன் பெண்ணே இப்படி சோகமாக இருக்கிறாய்? என்ன குறை உனக்கு? என்று சிலர் கேட்டார்கள். நான் தலையை குனிந்து கொண்டேன். என்ன பதில் சொல்ல முடியும்???
ஆமாம் நான் என் க்ரிஷ்ணனுக்காக காத்திருக்கிறேன் என்றா அவர்களிடம் சொல்லமுடியும்? என் கிருஷ்ணன் வருவாதாக சொன்னான் வருவான்... என்றா சொல்வேன். உனக்கு கொடுக்க என்னிடம் இருக்கும் ஸ்த்ரீதனம் என்ன தெரியுமா... என் ஏழ்மை, வறுமை, இயலாமை இதே தான்..
காலையில் வந்தேன், சூரியன் உச்சிக்கு போய் பகல் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக வெயில் குறைந்து மாலை வேளை . இருள் வந்துவிடும். ரொம்ப களைத்துப்போய்விட்டேன். தூக்கம் தூக்கமாக வருகிறது. காலையில் என்னை கடந்து சென்றவர்கள் மாலையில் திரும்புகிறார்கள். என்னைப்பார்த்து ஒரு சிரிப்பு. தலையாட்டல். உனக்காக காத்திருக்கும் ஏமாந்த சோணகிரி என்பதாலா? நிறையபேர் நின்று ''எதற்காக உட்கார்ந்து இருக்கிறாய் இவ்வளவு நேரமாக, என்ன வேண்டும் உனக்கு ?'' என்று கேட்கிறார்கள். கண்களை தாழ்த்தி கீழே பார்த்தவாறு பேசாமல் ''ஒன்றுமில்லை'' என்று தலையாட்டத்தான் முடிகிறது.
''கண்ணனை காணேன் ,இன்னும் வரக் காணேனே. வரேன் என்று சொல்லி வார்த்தை தவறிவிட்டான் '' என்று எப்படி சொல்வேன்?
இதோ இந்த புல் தரையில் அமர்ந்து வானத்தை பார்த்தவாறு நீ வருவாய் என கனவு காண்கிறேன். பொன் போல் ஒளியோடு, தலையில் இறகோடு, உன் ரதம் அழகாக பெரிய சிறகு விரித்து பறந்து வருவது போல் , நீ வரும் அந்த அழகை வாய் பிளந்து எல்லோரும் பார்ப்பது போல், தேரிலிருந்து ஜம்மென்று கம்பீரமாக இறங்கி என்னை நோக்கி நீ வருவது போல், இந்த புழுதியில் நடந்து வந்து இந்த ஏழைப் பிச்சைக்காரியை, என்னை, கூட்டி உன் அருகில் அமர்த்திக்கொண்டு..... நான் நாணத்தால் நடுங்க வியர்க்க, அதே சமயம் பெருமிதம் பெற, கோடைக்கால காற்றில் ஆடும் கொடியாக......''.
என்ன செய்வது.. நேரம் தான் பறக்கிறது. உன் தேரல்ல.. உன் தேர் சக்கர ஓசை இன்னும் கேட்கவில்லையே. தெருவில் எத்தனை வாகனங்களின் சப்தம். இழுத்துச் செல்லும் மிருகங்கள், மனிதர்களின் ஓசை... கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் எத்தனை பெருமையோடு, சந்தோஷத்தோடு..... நீ எங்கே?? அத்தனைக்கும் பின்னால் எங்கெயோவா? உனக்காக நான் மட்டும் தான் அழுதுகொண்டு காத்திருக்கிறேனா, இதயம் வெடிக்க, கண்களில் ஏமாற்ற கண்ணீரோடு?? எல்லாம் வீணா? சொல் கிருஷ்ணா?.

No comments:

Post a Comment