கீதாம்ருதம் – அத்தியாயம் 1
அர்ஜுனவிஷாத யோகம்-
த்ருதராஷ்டிர: உவாச
1.தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ;
மாமகா: பாண்டவா: சைவ கிமகுர்வத ஸஞ்சய
திருதராஷ்ட்ரன் கூறினான்
தர்மக்ஷேத்ரமாகிய குருக்ஷேத்திர பூமியில் போர் புரிய ஆயத்தமாக(யுயுத்ஸவ: ) குழுமியுள்ள (ஸமவேதா:) என்னவர்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?
திருதராஷ்டிரன் கௌரவர்களை மாமகா: என்னுடையவர்கள் என்று குறிப்பிடுகிறான். பாண்டவர்களை பாண்டவா:என்கிறான். இதிலிருந்து அவன் பாண்டவர்களை அவனைச் சேர்ந்தவர்களாகக் கருதவில்லை. இதிலிருந்து அவனுடைய பாரபக்ஷம் வெளிப்படுகிறது.
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே- குருக்ஷேத்ரம் என்பதற்கு இன்னொரு பெயர் ஸமந்த பஞ்சகம். இங்கு அக்னி, இந்திரன், பிரம்மா இவர்கள் தவம் செய்த இடம். அதனால் இங்கு மரணம் அடைபவர் உயர்ந்த உலகங்களுக்குச் செல்வர் என்று கருதப்பட்டது
கிம் அகுர்வத – என்ன செய்தனர்.
அது தர்மக்ஷேத்ரம் என்று சொல்வதன் மூலம் தருமமே வெல்லும் என்பது மறைமுகப் பொருள்.
யுத்தம் தவிர்க்க முடியாதது என்று தெரிந்தபின் வியாசர் த்ருதராஷ்டிரனிடம் அவனுக்கு அமானுஷ்ய பார்வை(DIVINE INSIGHT) தருவதாகவும்வும் அதனால் அவன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே போரைக் காண முடியும் என்றும் கூறினார்.
ஆனால் அவன் தான் நேரில் காண விருப்பம் தெரிவிக்காததால் ஸஞ்சயனுக்கு அதைக் கொடுத்தார் . அவன் நேரில் காண்பதைப்போல் எல்லாவற்றையும் பார்த்து திருதராஷ்டிரனுக்கு வர்ணித்தான்.
இப்போது மகாபாரதப்போர் என்பது எதை சித்தரிக்கிறது என்று காண்போம். அது நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டம்., அதாவது நமக்குள்ளே எப்போதும் நடந்துகொண்டிருப்பது.
நல்ல எண்ணங்கள் பாண்டவர்களைப் போல சிறுபான்மை ஆனவை. கேட்ட எண்ணங்கள் கௌரவர்களைப் போல பெரும்பான்மை ஆனவை. ஆயினும் தெய்வசக்தியால் நல்லவை வெற்றி பெறுகின்றன.
ஆயினும் அந்த தெய்வசக்தியைப் பெறுவதற்கு அந்தர்யாமியான பகவானை அர்ஜுனன் போல நமக்கு சாரதியாக இருக்கும்படி வேண்ட வேண்டும்.அவனே சாரதி ஆனால் ஜீவனாகிய நாம் உடலென்னும் ரதத்தில் செல்லும்போது மனம் என்னும் கடிவாளத்தினால் இந்திரியங்களாகிய குதிரைகள் அடங்குகின்றன. அப்போது வெற்றி நிச்சயம். இவ்வாறு பார்த்த்சாரதியாகிய பகவான் நாம் பார்த்த சாரதியாகிறான்.
கீதாம்ருதம் அத்தியாயம் 1
சஞ்சயன் கூறினான்.
2. த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதன: ததா
ஆசார்யம் உபஸங்கம்ய ராஜா வசனம் அப்ரவீத்
ததா- அப்போது , பாண்டவாநீகம் வ்யூடம் – பாண்டவர்களின் அணி வகுத்த சேனையை , ராஜா துர்யோதன: - ராஜாவான துரியோதனன், ஆசார்யம் – ஆசார்யரான துரோணரை, உபஸங்கம்ய- அடைந்து, வசனம் அப்ரவீத் – இந்த வார்த்தைகளைக் கூறினான்.
3. பச்ய ஏதாம் பாண்டுபுத்ராணாம் ஆசார்ய மஹதீம் சமும்
வ்யூடம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேன தீமதா
ஆசார்ய – குருவே , ஏதாம் – இந்த , பாண்டுபுத்ராணாம்- பாண்டவர்களுடைய , மஹதீம் சமும் – பெரிய சேனையை , பச்ய- பாரும். தவ சிஷ்யேன- உம்முடைய சிஷ்யனும், தீமதா- வல்லவனும் ஆன, த்ருபதபுத்ரேண- த்ருபதனின் மகனான த்ருஷ்டத்யும்னனால் , அணிவகுக்கப்பட்டது.
த்ருஷ்டத்யும்னனை உம் சிஷ்யன் என்கிறான். இது துரோணரை கோபமுறச் செய்வதன் பொருட்டாகும்.
துருபதனும் துரோணரும் குருகுலத்தில் ஒன்றாக இருந்தபோது துரூபாதான் துரோணருக்கு தான் முடி சூடியதும் பாதி ராஜ்ஜியம் கொடுப்பதாக் வாக்களித்தான், துரோணர் பிறகு மிகுந்த ஏழ்மை நிலையை அடைந்தபோது அரசனாக் இருந்த் துருபதனிடம் சென்றார். அவன் அவரை அவமதித்தான். அதனால் கோபம் கொண்ட துரோணர் கௌரவ்ருக்கும் பாண்டவருக்கும் குருவான பின் துருபதனை வென்று வருவதே தமக்கு தக்ஷிணை ஆகும் என்று கூற அர்ஜுனன் அவனை வென்று துரோணரிடம் அழைத்து வந்தான். துரோணர் அவனை விடுவித்துத் தன்னை அவமதித்ததற்கு அதுவே தண்டனை என்று கூறி அவனை விடுவித்தார் .
அர்ஜுனன் வீரத்தை மெச்சிய துருபதன் துரோணரிடம் பகைமை கொண்டு அர்ஜுனனை மணக்க ஒரு பெண்ணும் துரோணரைக் கொல்ல ஒரு மகனும் வேண்டும் என்று யாகம் செய்ய யாகத்தீயிலிருந்து த்ரௌபதியும் த்ருஷ்ட்த்யும்னும் தோன்றினர். த்ருஷ்டத்யும்னனை த்ரோணரிடமே வில் வித்தை கற்க அனுப்பினான் துருபதன்.
இது எல்லாம் தெரிந்தபடியால் துரியோதனன் ' துருபத புத்திரன், உம் சிஷ்யன் என்ற பதப்ரயோகத்தினால் அவருடையகோபத்தைத் தூண்டுகிறான். மேலும் துரோணருக்கு அவருடைய சிஷ்யர்களான பாண்டவர்களிடம் ஒரு பரிவு இருக்கும் என்று த்ருஷ்டத்யுமனனை முன்னுறுத்திப் பேசுகிறான்.
மகாத்ஹீம் சமும் – பெரிய சேனை என்று கூறுவதன் காரணம் ,
1.பாண்டவர்களின் சேனை வஜ்ரவ்யூஹம் என்ற அமைப்பில் அணிவகுக்கப்பட்டிருந்தது. அது பார்வைக்கு மிகப்பெரியதாகத் தோன்றும் ஒரு அமைப்பாகும்.
2.துரியோதனனுக்குத் தான் செய்வது அதர்மம் என்று நன்றாகத் தெரியும். ஏனென்றால் அவன் ஒரு இடத்தில் , 'ஜானாமி தர்மம் ந ச மே பிரவ்ருத்தி: , ஜானாமி அதர்மம் ந ச மே நிவ்ருத்தி:' என்று கூறுகிறான். இதன் பொருள், "எனக்கு தர்மம் தெரியும் ஆனால் அதில் விருப்பமில்லை. அதர்மமும் தெரியும் ஆனாலும் அதிலிருந்து விடுபடமுடியவில்லை." அதனா அவன் குற்றமுள்ள நெஞ்சு பாண்டவர் சேனை அவனுடையதைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருப்பினும் அதைக்கண்டு அச்சம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment