Friday, September 25, 2020

Why no relief from Corona? - musiri dikshitar

17/06/2020 முசிறி அண்ணா தர்ம சாஸ்திரங்கள் உடைய வரிசையில் *யுக தர்மத்தைப் பற்றி* இன்று தொடங்குகிறார்.

ஸ்மிருதி என்று தர்ம சாஸ்திரத்திற்க்கு பெயர். அதாவது *மகரிஷிகள் நமக்கு அனுக்கிரகம் செய்தவைகள் தான் ஸ்மிருதிகள்* வேதத்தில் சொல்லப்பட்ட வைகளைக் கோர்த்து கொடுப்பவை தான் இவை, என்று சொல்லப்படுகின்றன.

*வேதம் என்பது அனந்தம்.  மிகப் பெரியது. ஒரு ஆயுஷ்ல ஒரு புருஷனால் படித்து முடிக்க முடியாது. நாம் படிப்பது ஒரு சதவீதத்தை விட குறைவுதான். அவ்வளவுதான் நம்மால் அதை படிக்க முடியும். அதற்கு மேல் நம்மால் புத்தியில் ஏத்திக்கொள்ள முடியாது.   கொஞ்சம் தான் நாம் படிக்கிறோம் ஆனால் முழு வேதத்தையும் நாம் படித்ததாக நினைக்கிறோம். அது அப்படியல்ல வேதம் என்பது மிகப்பெரியது. ஆனால் அனைத்து வேதங்களையும் நாம் முழுமையாக தெரிந்து கொண்டால்தான் நம்முடைய தர்மத்தை நாம் செய்ய முடியும். அதனால் மகரிஷிகள் நமக்கு தேவையான அனுஷ்டானங்களை கடமைகளை நிறைவேற்றுவதற்கு, கோர்ட்டு கொடுத்தவர்தான் தர்ம சாஸ்திரம் என்று சொல்கிறோம்.*

உதாரணத்திற்கு ஆசமனம் என்று எடுத்துக் கொண்டால் அது அச்சுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ என்று நாம் சொல்கிறோம்.  ஆனால் இவைகள் நாம் அத்தியனம்  செய்யக்கூடிய வேதங்களில் வரவில்லை.

அப்படி என்றால் நாம் என்ன நினைக்கிறோம் இது ஏதோ பகவான் நாமா புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் செய்யக் கூடிய காரியங்களில் பகவான் மாமாவுடன் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம். நம்முடைய புத்தி அவ்வளவுதான் யோசனை செய்யும் அந்த விஷயத்தில்.

ஏன் அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ என்று சொல்ல வேண்டும் வேறு ஏதாவது ராமாயண நமஹ கிருஷ்ணாய நமஹ  என்று சொல்லலாம் இல்லையா? *அப்படி அதை நினைக்காமல் அது வேற சாகாந்திரத்தில் இருக்கக்கூடிய வேத மந்திரம் தான்* அது.

நாம படித்த வேதத்தில் அது வரவில்லை ஆனால் சாகாந்திர மந்திரம் என்ற பெயர். அகண்டமான உள்ள வேதத்தில் மகரிஷிகள் அப்படி எடுத்துக் காண்பித்திருக்கிறார்கள்

பகவான் நாமா என்று பார்க்காமல் மந்திரம் என்று அதை பார்க்க வேண்டும். அதனால் நம்முடைய கர்மாக்களுக்கு தேவையான மந்திரங்களை, (மற்றவை எல்லாம் தேவையில்லை என்று நினைக்கக்கூடாது) அனைத்துமே தேவைதான் ஆனால் நம்முடைய ஒரு ஆயுள் காலத்தில் அனைத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. அதனால் மகரிஷிகள் நமக்குத் தேவையான கடமைகளை செய்வதற்கு மந்திரங்களை வரிசைப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.

*அது என்னென்ன மந்திரங்கள் நாம் எந்தெந்த கர்மாவில் அதை உபயோகம் செய்ய வேண்டும், அதைப்பற்றி சொல்வதுதான் ஸ்மிருதிகள். இதைத்தான் தர்மசாஸ்திரம் என்று சொல்கிறோம்.*

வேத மந்திரங்களை மகரிஷிகள் நேராகப் பார்த்து இதெல்லாம் நமக்கு வரிசைப்படுத்தி வேத மந்திரங்கள் என்று காண்பிக்கிறார்கள்.

*வேதத்தில் சொல்லப்பட்ட வைகள் தான் ஸ்மிருதிகள் அதுதான் வேதம் என்ற நம்பிக்கையோடு நாம் நம்முடைய கடமைகளைச் செய்ய வேண்டும்.*

*_அப்படி இல்லாமல் இந்த மகரிஷி இப்படி சொல்லியதால் நாம் செய்ய வேண்டுமா, அல்லது காலத்திற்குத் தகுந்தாற்போல் இதை எப்படி மாற்றலாம், என்று நினைக்கக்கூடிய அவனுக்கு பெயர்தான் நாஸ்திகன். வேத நிந்தஹா என்று பெயர். அதாவது தாயார் விஷயத்தில், சந்தேகப்படக் கூடியவன். தாயார் என்று சொல்லி அம்மா என்று கூறுகின்றோம். இவள் தான் நம்மை தகப்பனாரிடம் இருந்து பெற்று இருக்கிறாளா, என்று தயாரை போய் நாம் சந்தேகப்படலாமா? எவ்வளவு பெரிய தப்பு அது? அதேபோல்தான், வேதத்தையும் மகரிஷிகள் சொல்வதையும் நாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். இதை ஏன் இப்படி செய்ய வேண்டும் இந்த காலத்தில் இதெல்லாம் சாத்தியமா? இது எல்லாம் முடியுமா? நம்முடைய சௌகரியப்படி இதை எப்படி மாற்றி அமைக்கலாம். என்று நினைக்கின்ற அவன் தாயாரை சந்தேகப்படக் கூடியவனாக ஆகிறான். அப்படி செய்கின்ற அவனை என்னவென்று சொல்வது? இந்த அளவுக்கு நமக்கு எச்சரிக்கை செய்து மகரிஷிகள் என்ன சொல்லி இருக்கிறார்களோ அதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். அப்படி உனக்கு கடைபிடிக்க வேண்டிய அபிப்பிராயம் இல்லை என்றால் விட்டு விட்டு வெளியே போய்விடு என்று சொல்கிறார்கள். அவன் போகமாட்டான் வேதத்தையும் ஸ்மிருதி களையும் நம்புகிறவர்கள் அவனை அங்கிருந்து ஒதுக்கிவிட / வெளியேற்றிவிட வேண்டும்._*

_ஏனென்றால் அவன் ஒருவன் அப்படி இருந்தால் அவனை வைத்து இன்னும் பத்து பேர் கெட்டுப் போவார்கள். ஆகையினாலே இதுபோல் பேசுகின்றவனை எந்த ஒரு நல்ல விஷயத்திலும் நாம் சேர்த்துக் கொள்ளக்கூடாது ஓரம் கட்டி விட வேண்டும்._

இதுதான் தர்மம் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சுகம் நமக்கு கிடைக்கின்றது, என்று காண்பிக்கின்றது தர்மசாஸ்திரம்.

*அந்த விஷயங்களில் எல்லாம் நமக்கு ஒரு சரியான புரிதலும் நம்பிக்கையும் இல்லாததினால், அதை கடைபிடிப்பதில் நமக்கு ஒரு சோம்பல் இருப்பதினால், இன்றைக்கு நாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஏதோ ஒரு வியாதி வந்துவிட்டது அது நம் கண்ணுக்கே தெரியவில்லை. மரண பயத்தில் நாம் கண்ணுக்கு தெரியாத இந்த வியாதி மூலம் பயந்து உள்ளோம்.  எப்படி முடியப் போகின்றது என்று தெரியவில்லை. புது வருடம் பிறந்தால் முடிந்துவிடும் என்றும் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு முடிந்துவிடும் என்று நினைத்தோம் ஆனால் முடியவில்லை. கிரகணம் வந்து முடிந்த பிறகு சரியாக போய்விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் என்ன என்றால் நம்முடைய வேதத்தையும், நம்முடைய மகரிஷிகளின் ஸ்மிருதி களையும், நாம் நம்பவே இல்லை. ஆகையினாலே வேதத்தையும் மகரிஷிகள் சொன்ன இந்த ஸ்மிருதிகளையும் நாம் கடைபிடிப்பதால் கண்ணுக்குத் தெரியாத ஒரு சுகம், கண்ணுக்குத் தெரியாத ஒரு வியாதியால் அழிக்கப்பட்டு கொண்டு வருகின்றது. முக்கியமாக ஒரு அச்சம் ஆனது நம் அனைவருக்கும் வந்துவிட்டது. காரணம் நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் நமக்கு ஒரு நம்பிக்கையும் புரிதலும் ஈடுபாடும் இல்லாத காரணத்தினால்.*

அது இருக்கக் கூடாது  மகரிஷிகளின் வாக்கியங்களும் தர்ம சாஸ்திரங்களும் அடிப்படையாக மிக மிகத் தேவை என்பதை நாம் உணரவேண்டும். அடுத்ததாக மிக முக்கியமான ஒரு தர்மத்தை நாம் பார்க்க இருக்கிறோம் அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்

No comments:

Post a Comment