Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
தசாவதாரமும் கீதையும் -கிருஷ்ணாவதாரம்- 1
கிருஷ்ணாவதாரம்
இந்த அவதாரத்தின் பெருமையை சொல்வது என்பது எளிதல்ல. கிருஷ்ணன் யோகேஸ்வரன் என்றும் ஜகத்குரு என்றும் போற்றப் படுகிறான். பிறந்தவுடனேயே தந்தைக்கு என்னசெய்ய வேண்டும் என வழிகாட்டியவன் அல்லவா! அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவமும் பொருள் நிறைந்தது.
பாகவதம் கூறுகிறது, க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் என்று. கிருஷ்ணாவதாரம் பூர்ணாவதாரம் .ஏனென்றால் அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அவனுடைய தெய்வத்தன்மை வெளிப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் அது புலப்படவில்லை. இதையே கீதையில்
ஜன்மகர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நேதி மாமேதி பாண்டவ(ப.கீ. 4.9)
"எவன் ஒருவன் என் ஜன்மம் செய்கை இவற்றை சரியாகப் புரிந்துகொள்கிறானோ அவன் இந்த உடலை விட்டு நீங்கிய பின் மறுபடி பிறப்பதில்லை என்னையே வந்தடைகிறான் ."என்று கூறி மேலும் ,
"நாஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய" நான் எல்லோருக்கும் புலப்படுவதில்லை (ப.கீ.7.25)
"அவஜானந்தி மாம் மூடா: மானுஷீம் தனுமாஸ்ரிதம்," மூடர்கள் என்னை மனிதப்பிறவியாகக் கருதுகிறார்கள்," என்றும் கூறுகிறார்.
இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். பகவானுக்கு கர்பவாசம் என்பது கிடையாது . தேவகி கௌசல்யை போன்றவர்கள் கர்பத்தில் அவன் வளர்வது போன்ற தோற்றம் மாயையே ஆகும். இது 'காஷ்டா யதா ஆனந்தகரம் மனஸ்த: ,' கிழக்கு திசை சந்திரனை தரிப்பது போல என்ற சொற்கள் விளக்குகின்றன. கிழக்கு திசையில் சந்திரனை கிழக்கு திசை தரிப்பதில்லை. அவன் அங்கு தானாகவே தோன்றுகிறான்
பகவான் அவதாரத்தை வர்ணிக்கும்போது ஆவிர்பபூவ , தோன்றினான் என்றுதான் கூறப்படுகிறது. பிறந்தான் என்று இல்லை. மேலும் மனஸ்த: ததார மனதில் தரித்தாள் என்பதன் மூலம் பகவானுடைய சரீரம் மனதால் உருவானதே அன்றி பிரகிருதி சம்பந்தமானது அல்ல என்று தெரிந்துகொள்ளலாம். அவதரிக்கையில் அவன் சங்குசக்கரம் ஆபரணங்கள் இவையுடன் காணப்பட்டதே சான்றாகும்.
கிருஷ்ணன் அசுரர்களை அழித்த செய்கையானது பகவான் நம் மனதின் கெட்ட எண்ணங்களை ஒழிப்பதற்கு சமமானது. மஹாபாரத யுத்தம் என்பது சதா நம் மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்களுக்கும் கெட்ட எண்ணங்களுக்கும் ஏற்பட்டு வரும் போரையே குறிக்கும். தன் அவதாரத்தின் நோக்கத்தை 'பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் என்று கீதையில் கூறியுள்ளபடி தர்மத்தின் பக்கம் நின்று அதர்மத்தை அழிப்பதே என்று தெளிவுபடுத்துகிறார். பகவானுக்கு பாரபட்சம் என்பது இல்லை. இதையே 'ஸமோஹம் ஸார்வபூதேஷு ந மே த்வேஷ்யொ அஸ்தி ந ப்ரிய: ' (ப.கீ. 9.29) என்னும் சொற்களால் தெளிவுபடுத்துகிறார்.
பரப்ரம்மத்தின் ஸ்வரூபம் ஸத் சித் ஆனந்தம் எனப்படுகிறது. ராமாவதாரம் ஸத் என்றால் வாமனாவதாரம் சித். கிருஷ்ணாவதாரமோ ஆனந்தமயம்.
இதன் விளக்கத்தை அடுத்து காண்போம்.
தசாவதாரமும் கீதையும் -கிருஷ்ணாவதாரம்-2
நம் மனம் பகவானிடத்தில் ஒன்றும்போது அது அவன் கையில் உள்ள புல்லாங்குழல் போல் ஆகிறது. எப்படி என்றால் புல்லாங்குழல் என்பது ஒரு துளைகள் உள்ள வெற்றுக்குழல். அதுபோல் நம் மனதில் உள்ள மாசுகள் நாமசங்க்கீர்த்தனம் முதலியவைகளால் வெளியேறி விடுகின்றன. பிறகு அவன் விரல்கள் நம் மனதில் தெய்வீக இசையை இசைக்கின்றன.
ஜீவாத்மாவானது இறைவனைப் பிரிந்து உலகத்துன்பங்களால் அல்ல்லுறுகிறது. அப்போது அவனிடம் மறுபடியும் சேர இயலாமல் தவிப்பதே ராதை மற்றும் கோபியரின் விரஹ வேதனையாகும்.
கோபியர்கிருஷ்ணனைத்தேடிஇரவில்யமுனைக்கரைக்குப்போகின்றபோது அவரவர்வீட்டில்அவர்கள்இருக்கின்றதுபோலவேதோன்றிற்று.அதாவதுஅவர்கள்யோகசரீரம்அங்கேசென்றது என்று சுகர் கூறுகிறார்.
நம் மனதில் ஆயிரம் எண்ணங்கள். அவைஎல்லாம் இறைவனைக் குறித்தே இருக்குமேயானால் நம் மனதில் நடப்பது ராசக்ரீடை. .ஒவ்வொரு எண்ணமும் ஒருகோபி.எல்லாம்கண்ணனைப்பற்றியே.அதனால்அவைகளின்நாடுநாயகமாய்இருப்பதுஅவனே.ஒவ்வொருஎண்ணமும்கண்ணனையேபற்றிநிற்பதால் ஒவ்வொருகோபியின்இடையில்ஒருகண்ணன்.லீலாசுகர்சொல்கிறமாதிரி, 'அங்கனாம்அங்கனாம்அந்தரேமாதவோ ---' அப்போதுஎழுவதுஇனிமையான்குழலோசை 'ஸந்ஜகௌவேணுனாதேவகிநந்தன:'
எல்லா எண்ணங்களும் சேர்ந்து ஒரே எண்ணம் ஆனால் அதுதான் ராதை.
முனிவர்கள் எல்லா உயிர்களும் பகவானுடன் கைகோர்த்து உள்ளன என்று கருதுகிறார்கள். இதையே பகவான் கீதையில்,
மத்த: பரதரம் ந அன்யத் கிம்சித் அஸ்தி தன்ஞ்சய
மயி சர்வம் இதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ )ப.கீ. 7.7)
'அர்ஜுனா, என்னிலும் வேறான மற்றைய பொருள் இல்லை .இவ்வுலகனைத்தும் நூலில் மணிகளைப் போல என்னில் கோக்கப்பட்டுள்ளன ,' என்று கூறுகிறார். அவ்வாறு பார்க்கின் இந்த உலகமே ப்ருந்தாவனம். அதில் பகவானுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் லீலையே ராஸக்ரீடை..
யாதவாப்யுதயத்தில் தேசிகர் கூறுகிறார் .
பாதாஸ்ரிதானாம் ப்ரமசாந்திஹேது: ப்ரியாஸஹஸ்ரம் ப்ரமயாம்ஸ்சகார
தன்னை அண்டினவர்களின் ப்ரமையை போக்கக் காரணமானவன் தன் பிரியமான ஆயிரம் கோபியரையும் சுற்ற வைத்தான் . ப்ரமா என்ற சொல்லின் இரு பொருள்கள் , ப்ரமை அல்லது மயக்கம் , சுற்றுதல்.
ப்ராமயன்ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா" என்மாயையால் எல்லா ஜீவர்களையும் இய்ந்திரத்தில் சுற்றுவதைப்போல சுற்றவைக்கிறேன்'என்று கீதையில் அவன் கூறியதற்கு உதாரணம் போல் அந்த குரவையாட்டம் இருந்தது.
கோபியரும் உத்தவரும் கீதையில் கூறியுள்ள பக்தி யோகத்தின் இலக்கணமாகத் திகழ்கிறார்கள்.
மச்சித்தா மத்கதப்ராணா:போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச(ப.கீ.10.9)
என்னிடம் மனம் ஒன்றியவர்களாய் வாழ்க்கையையே என்னிடம் அர்ப்பணித்து உள்ளோர் அவர்கட்குள் என் நினைவாகவே பேசுவதில் ஆனந்தம் அடைகின்றனர்.
இவ்வாறு க்ருஷ்ணாவதாரம் ஒரு ஞானானந்த லஹரியாக உள்ளது.
பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் பரித்ராணாய ஸாதூனாம் ---என்ற கீதைவாக்கியத்தின் உதாரணம்
No comments:
Post a Comment