Saturday, September 12, 2020

How many people for Mahalaya sraddham?

*06/09/2020* *முசிறி அண்ணா மஹாளயம் என்கின்ற தலைப்பில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய இந்த மஹாளய சிராத்தத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

*இந்த மாஹாளய ஸ்ராத்தத்தில் யார் யாரெல்லாம் நாம் பூஜிக்கிறோம் என்பதை தர்ம சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாகவே பித்ருக்களை உத்தேசித்து நாம் செய்யக்கூடிய சிராத்தம் தர்ப்பணம் அது நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களுக்கும் பங்கு போகிறது, என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

*சிராத்தம் முடிகின்ற பொழுது பிண்ட பிரதானம் நடக்கின்ற சமயத்திலே, ஒரு ஸ்லோகம் சொல்கின்றோம் அங்கே, இதற்கு என்ன அர்த்தம் என்றால் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து, கயா ஷேத்திரத்திலேயோ அல்லது அதற்கு சமமான ஒரு ஷேத்திரத்திலேயோ  ஒரு வன்னி இலை அளவு ஒரு பிண்டத்தை நாம் வைத்துவிட்டால், நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களுக்கும் அது போய் சேர்கிறது. 101 தலைமுறைகள் கரை சேர்கிறார்கள் என்று இந்த சுலோகம் சொல்கிறது.*

*இதை வருடாவருடம் நாம் செய்யக்கூடிய ஸ்ராத்தத்தில் சொல்கிறோம். அங்கே ஏன் இந்த சுலோகத்தை நாம் சொல்கிறோம் என்றால், ஏழு கோத்திர காரர்களுக்கும் பங்கு இருக்கிறது. ஸ்ராத்தத்தில் பிரதானம் என்று மூன்று இருக்கின்றது.*

*அக்நோகரணம் என்று சொல்லக்கூடிய தான ஹோமம், பிராம்மண போஜனம், பிண்ட பிரதானம். இது மூன்றும் பிரதானம். இதில் தான் நாம் நம்முடைய தாயார் தகப்பனார் வர்க்கத்தை பூஜிக்கிறோம்.*

*இது இல்லாமல் நிறைய அங்கங்கள் செய்கின்றோம் ஸ்ராத்தத்திலே. ஹோமம் ஆனபிறகு ஆரம்பத்திலிருந்து பார்த்தோமேயானால், அன்ன அபிமர்ஷனம் என்று 1 செய்கிறோம். பிறகு தத்தம் செய்கிறோம். போஜனம் ஆனபிறகு விக்கிரம் என்று ஒன்று செய்கிறோம். வாயச பிண்டம் என்று ஒன்று செய்கிறோம்.*

*இப்படி நிறைய பித்ருக்களை உத்தேசித்து நாம் செய்கிறோம். இவைகள் யாவும் நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களுக்கு போய் சேர்கிறது. யார் அந்த ஏழு கோத்திர காரர்கள் என்றால், தன் கோத்திரம்,   தன் மனைவி கோத்திரம், அத்தை கோத்திரம், தாய்மாமா கோத்திரம், சகோதரி கோத்திரம், பெண்ணுடைய கோத்திரம், நாட்டுப்பெண் கோத்திரம்.*

*இப்படி இந்த ஏழு கோத்திர காரர்களுக்கும் போய் சேருகிறது, நாம் செய்யக்கூடியது ஆன ஸ்ராத்தம். இப்படி அது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இந்த மஹாளய பட்சத்தில் நாம் நாம் செய்யக்கூடிய இந்த சிராத்தத்தில் இவர்கள் அத்தனை பேரையும் தனித்தனியாகவே நாம் வரணம் செய்து பண்ணுகிறோம்.*

*இவர்களுக்குத்தான் காருண்ய பித்ருக்கள் என்று பெயர். தாயார் வழியில் தகப்பனார் வழி மாதா மஹ வர்க்கம், இவைகள் இல்லாமல், பாக்கி அனைவருக்கும் காருண்யர்கள் என்று பெயர். நாம் செய்யக்கூடிய மஹாளய  சிராத்தத்தில் யாரை யாரை எல்லாம் வரிக்க  வேண்டும் என்றால், அதாவது விஷ்வே தேவர், தகப்பனார் வர்க்கம், தாயார் வர்கம், ஸபத்தீனி மாதா, தகப்பனார் இரண்டு கல்யாணம் செய்து கொண்டு இருந்தால் இன்னொரு தாயாருக்கு பெயர் ஸபத்தீனி மாதா. பத்தினிகளோடு சேர்ந்து மாதாமகர்கள், பித்துருவியன் தகப்பனாரோடு கூட பிறந்தவர்கள், சித்தப்பா சகோதரர்கள், தன் புத்திரர்கள், பிதுர் பகினி, தகப்பனாருடன் கூட பிறந்த சகோதரி அத்தை, தாய் மாமா, தாயாருடன் கூடப் பிறந்த சகோதரிகள், தாயார் வழியில் பெரியம்மா, சித்தி, வளர்ப்பு தாயார் ஜாமயஹா, தாத்திரி என்று பெயர். பிறகு சகோதரிகள், தன் பெண், மனைவி, மாமனார், பாவுகன் அதாவது சகோதரியின் கணவர், நாட்டுப் பெண், மச்சினன், குரு, ஆச்சாரியன், சுவாமி- அதாவது நம்முடைய வாழ்க்கைக்கு துணை புரிந்தவர்கள், சகா- தோழன், இவர்களுக்கு எல்லாம் காருண்யர்கள் என்ற பெயர்.*

*இவர்கள் அனைவரையும் வரித்து நாம் செய்ய வேண்டியது இந்த மஹாளய ஸ்ராத்தம். மிகவும் முக்கியம். ஆகையினாலே தனித்தனியாக இவர்களை வரித்து நாம் பூஜை செய்ய வேண்டும். ஐந்து அல்லது ஆறு பிராமணர்களை, வைத்துக்கொண்டு செய்ய வேண்டும் இந்த மஹாளய சிராத்தம்.*

*விஷ்வே தேவர்க்காக ஒருவர், பிதுர் வர்க்கம் ஒருவர், மாத்ரு வர்க்கத்திற்கு ஒருவர், ஸபத்தீனி மாதா இளைய தாயார் ஒருவர் இருந்தால், மாதாமஹர் ஒருவர் காருணிகளுக்கு ஒருத்தர். இப்படி வைத்துக் கொண்டு இந்த மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும்.*

*இவர்கள் அத்தனை பேருக்கும் பாகம் போய் சேர்கிறது இந்த மகாளய சிராத்தத்தில். இந்த மஹாளய பட்சத்திலேயே நாம் செய்யவேண்டிய தாயார் தகப்பனார் ஸ்ரார்தம் வந்தது ஆனால், ஸ்ரார்த்தம் செய்தபிறகு மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.‌*

*தாயார் தகப்பனார் ஸ்ரார்தம் முன்பாக மஹாளயம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது செய்யாதது மாதிரிதான். இதை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

*அப்படி இவ்வளவு பெயர்களை உத்தேசித்து நாம் இந்த மஹாளய சிராத்தம் செய்கிறோம். எதற்காக இவ்வளவு பெயர்களை உத்தேசித்து நாம் செய்கிறோம் என்றால் அதிலே ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

No comments:

Post a Comment