சலந்திரன்
இந்திரன் சிவ தரிசனத்திற்காக கைலாயம் சென்றார்.
வாயில் காப்போன் இடைமறித்தார்.
பல கேள்விகளை வாயில்காப்போன் இந்திரனை கேட்க, கோபம் கொண்ட இந்திரன் வஜ்ராயுதத்தால் வாயில்காப்போனை தாக்க,
அது சுக்கு நூறாக ஆகி மறைந்து போனது.
ஏனெனில் வாயில் காப்போனாக வந்து நின்றது சிவபெருமானே,
கோபங்கொண்டு நின்ற சிவனாரிடம்
தன்னை மன்னிக்க வேண்டி நின்றார்.
கோபங்கொண்ட சிவபெருமானின் வியர்வை துளிகள் கடலில் விழுந்தது.
அவை ஒன்றினைந்து
சலந்தரன் பிறப்புக்கு காரணமானது.
கங்கை வயிற்றில் சமுத்திரராஜனுக்குப் பிறந்தான்.
வாலிபப் பருவம் அடைந்தபின் அசுரத் தச்சன் மாயனால் சாலந்தரம் என்ற நகரை உருவாக்கி காலநேமி என்பவரின் மகள் பிருந்தையை மணம் செய்துகொண்டு வாழ்ந்தான்.
சிவபெருமான் மீது
தவம் தவம் என சலந்தரன் மேற்கொண்டு சிவபெருமான் தரிசனம் கண்டு "யாராலும் வெல்ல முடியாத" வரம் பெற்றான்.
தேவர்கள் அனைவரையும் போரிட்டு வென்றான்
இந்திரனை போருக்கு அழைத்து வென்று இந்திர லோகத்தினை பெற்றார்.
பிரம்ம தேவரை பிடித்து அவரின் கழுத்தை பிடித்து இருக்கி மூச்சு விட முடியாமல் செய்தவனிடமிருந்து தப்பி ஓடி ஒளிந்து கொண்டார்.
விஷ்ணு பகவானோடு இரண்டாயிரம் ஆண்டுகள் போர்புரிந்து
விஷ்ணு பகவானின் பாராட்டை பெற்றான் சலந்தரன்.
அனைத்து உலகங்கங்களையும் வென்ற சலநதரன் அனைவரையும் துன்பப்படுத்தினான்.
இனி வெல்ல வேண்டியது கைலாயம் மட்டுமே என எண்ணி,
சிவபெருமானை வெல்ல கயிலாயம் வந்தான்.
சலந்தரனை முதியவராக இருந்த சிவன் எதிர்கொண்டு
"எங்கே இவ்வளவு வேகமாக செல்கிறாய்" என கேட்டவுடன்,
சிவனோடு சண்டையிட செல்கிறேன் என்றார் .
சிரித்த முதியவர் தரையில் தனது கால் விரல்களால் வட்டம் ஒன்றை வரைந்தார்.
"நீ முதலில் இந்த வட்டத்தை பெயர்த்து எடு பிறகு சிவபெருமானோடு போரிடலாம்" என்றார்.
இதென்ன பெரிய காரியமா என கூறிய சலந்தரன் வட்டத்தை பெயர்த்து தன் தலை மீது வைத்தான்.
மறுவிநாடி,
அந்த வட்ட சக்கரம்
ஓர் கூர்மையான ஆயுதமாக மாறி
வேகமாக சுழல ஆரம்பித்து,
சலந்தரனின் உடலை பிளந்து சென்றது அந்த ஆயுதம்.
சலந்தரனைக் கொன்றமையால் சிவபெருமான்
சலந்தராகரர் ஆனார்.
இத்திருவுருவம் 64 சிவத் திருமேனிகளுள் ஒன்றாகும்.
திருவிற்குடியில் சலந்தராகரரை தரிசிக்கலாம்.
சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான்.
சங்கு பெற்ற கதை:-
அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று.
பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு 'நமசிவாய' என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்சசைனம் எனப்பெயர் பெற்றது.
அந்த சங்கினை பெற வேண்டி திருமால் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.
திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளான சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார்.
திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.
சக்கரம் பெற்ற கதை:-
சலந்தரனை கொன்ற சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்த திருமால்.
பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார்.
பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார்.
தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால்.
ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார்.
அவரின் பூஜையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.
Thanks to
No comments:
Post a Comment