Friday, July 17, 2020

RIVER KRISHNA

'''' கிருஷ்ணா, நீ நதியா?'' J K SIVAN

சிலவருஷங்களுக்கு முன்பு நண்பர்களோடு ஆந்திரா சென்று பல ஸ்தலங்களை பார்த்த போது விஜயவாடா வில் இறங்கி னேன். அட, எதிரே பிரம்மாண்டமான கிருஷ்ணா நதி. விடியற்காலை நேரம் இருட்டு அகலும் முன்பு அந்த மா பெரும் கரிய நிற நதியில் ஸ்நானம் செய்ததை நினைத்தால் இப்போதே உடம்பு ஈரமாகி துடைத்துக் கொள்ள துண்டை தேடுகிறது. அங்கிருந்து அருகே தான் கனக துர்கா ஆலயம் சென்றது நினைவில் இருக்கிறது.

நதிகள் பரந்த மனம் உடையவை. நம்மைப் போல கோடு போட்டு '' நீ ஆந்திரா, கோட்டுக்கு இந்தப்புறம் நான் தமிழ்நாடு'' என்று இல்லை. மஹாராஷ்டிராவில் மேற்கு தொடர்ச்சி மலையில் மஹாபலேஷ்வர் அருகே 4300 அடி உயரத்தில் பிறந்து, 1400 கி.மீ. தூரம் ஓடும் கிருஷ்ணா நதி பாதி மகாராஷ்டிரா, மீதி ஆந்திரா இப்போது தமிழ்நாட்டுக்கும் கொஞ்சம் தண்ணீர் தருகிறது.. என்ன தாராள குணம். கிருஷ்ணா(னு)க்கு..

கிருஷ்ணா பொதுவாக அமைதியாக மெதுவாக ஓடுபவள் என்று பெயர்பெற்ற நதி. மராத்தியில் அவளை "Santh vaahate Krishnamaai"(संथ वाहते कृष्णामाई) என்பார்கள். எண்ணற்ற ஜீவராசிகள் உயிர்வாழ அருள்பவள். தமிழகத்தை விட ஆந்திராவில் நிறைய பெண்கள் கிருஷ்ணவேணிகள் . கிருஷ்ணாவின் ஒரு முக்கிய உபநதி துங்கபத்திரா.

கிருஷ்ணா கர்நாடகாவையும் தொடுபவள். கூடல சங்கமா எனும் இடம் கிருஷ்ணாவும் மலபிரபா எனும் நதியும் சங்கமிக்கிறது இன்னொரு பெரிய நதியான கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைத்திருக்கிறார்கள். கிருஷ்ணா வின் கரைகளில் தான் எவ்வளவு சிறிதும் பெரிதுமான கோவில்கள். பச்சைபசேலென சில காடுகளும் உண்டு. அநேக பறவைகள் மிருகங்களின் சரணாலயம் அது.

தென்கிழக்காசிய தீபகற்பத்தின் ரெண்டாவது நீளமான நதி கிருஷ்ணா. ஹிந்துக்கள் பாபங்களைப் போக்கும் புண்யநதி என்று ஸ்நானம் செய்யும் புனித நதிகளில் ஒன்று கிருஷ்ணா. கிருஷ்ணா ஆண் பெயர் கொண்ட நதி என்று நினைக்கவேண்டாம். திரௌபதிக்கும் கிருஷ்ணா என்று தான் பெயர். தமிழகத்தில் காவேரி பெண் பெயர் கொண்டவள். கிருஷ்ணாவிலிருந்து தமிழகத்துக்கும் நீர் வருகிறது. ZERO சீரோ பாயிண்ட் என்ற இடத்தில் கால்வாய் வெட்டி வருகிறது. பூண்டி அருகே பார்த்திருக்கிறேன். புட்டபர்த்தி பாபாவின் கைங்கர்யம் நமக்கு.

சரஸ்வதியின் சாபத்தால் மஹா விஷ்ணு கிருஷ்ணா நதியாக பிறந்தார் என்று ஒரு புராண கதை. மஹாராஷ்டிராவில் கிருஷ்ணாபாய் ஆலயத்தில் ஒரு குண்டத்தில் பசுமுகத்தில் இருந்து உற்பத்தியாகிறது கிருஷ்ணா நதி. அந்த ஆலயம் புராதனமான சிவன் கோவில் . அதில் அழகான கிருஷ்ணன் விக்ரஹம் உள்ளது. 1888ல் ரத்னகிரியை ஆண்ட ஒரு ராஜா கட்டியது. பன்னிரெண்டு வருஷததுக்கு ஒருமுறை நதிகளில் புண்ய ஸ்நானம் செய்வது புஷ்கரம். கிருஷ்ணாவிலும் புஷ்கரம் விமரிசையாக உண்டு.
\
ஒரு காலத்தில் புஷ்கர் என்று ஒரு பிராமணன் தவம் செயது சிவபெருமான் அருளால் நதிகளை புண்யநதிகளாக்கும் சக்தி பெற்றான். பிரஹஸ்பதி அவனை ராசி சக்ரத்தின் 12லும் ஆண்டுக்கு ஒன்றாக ஒரு புண்யநதியை பரிசுத்தப்படுத்த செயகிறார். புஷ்கரன் இவ்வாறு நதிகளை பரிசுத்தப் படுத்தி புண்யதீர்த்தங் களாக்கினான். புஷ்கரம் என்று அவன் பெயரால் பன்னிரண் டு ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நதியிலும் இது உண்டு.

எப்போதாவது நேரம் கிடைத்தால் 1400 கி.மீ. தூரம் பயணிக்கும் இந்த கிருஷ்ணா நதியின் கரைகளிலுள்ள புண்ய க்ஷேத்ரங்களை பற்றி எழுத ஆசை. பகவான் கிருஷ்ணன் அருள் புரியட்டும்.

Image may contain: outdoor
Image may contain: sky, ocean, outdoor, nature and water
Image may contain: mountain, sky, ocean, outdoor, nature and water

No comments:

Post a Comment