Tuesday, July 28, 2020

Mango tree- Periyavaa

"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன்

பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன
பெரியவா)

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன் பெரியவாளிடம் வந்தான்.

"மாஞ்செடி நட்டு வளர்க்கிறேன்.பூக்கிறது.
உதிர்ந்து போய்விடுகிறது; காய்ப்பதே இல்லை" என்று வருத்தத்துடன் கூறினான்.

பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.

பெரியவாள், இரு தரப்பினரையும் சமமாகப்
பார்த்து அவரவர்களுக்கு உரிய விதத்தில்
பதில் சொல்லுவார்கள்.

"காய்க்காத மாமரத்தின் பக்கத்தில் இன்னும் சில மரங்கன்றுகளை நடு. அந்தக் கன்றுகள் வளர்ந்து பூக்கத் தொடங்கியதும், எல்லா மரங்களும் காய்க்க ஆரம்பிக்கும்" என்றார்கள்,பெரியவாள்.

அப்போது விவசாயத்துறை அதிகாரி ஒருவர் அங்கே இருந்தார்.பெரியவாளின் அறிவுரைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார். அவர் சொன்னார்.

"சில மாமரங்களில் பெண் பூ நிறைய இருக்கும். ஆண் பூ அதிகம் இருக்காது. வேறு சில மரங்களில் ஆண் பூ நிறைய இருக்கும். பெண் பூ குறைவாக இருக்கும்.

மகரந்தைச் சேர்க்கை ஏற்படாமல் பூக்கள்
கருகிப்போய் உதிர்ந்துவிடும். பல மரங்கள்
இருந்தால் இந்தக் குறையினால் பாதிப்பு
ஏற்படாது. தேனிக்கள் எல்லா மரங்களையும்
மொய்க்கும். மகரந்தசேர்க்கை ஏற்படும்.
மரங்கள் காய்க்க ஆரம்பித்துவிடும்"

"இது எப்படி மகா பெரியவாளுக்குத் தெரியும்?"

கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய
நிபுணர் பெரியவா.

No comments:

Post a Comment