Friday, July 31, 2020

Lead kindly light - Meaning in tamil

மார்க்க பந்து J K SIVAN

1833ல் கார்டினல் ஜான் ஹென்றி நியூமன் என்ற இளம் பாதிரி, ஒருவர் ஒரு பாட்டை எழுதினார் . இதை எத்தனையோ பேர் ஸ்தோத்ர பாடலாக பாடினார்கள். பகவானை வேண்டினார்கள். இன்றும் எங்கும் அது பாடப்பட்டு வருகிறது.

இத்தாலிக்கு சென்ற நியூமன் பாலெர்மோவில் திடீர் ஜுரத்தில் உடல் நலம் குன்றி படுக்கை யில் இருந்த சமயம் ஒருநாள் படுக்கையில் எழுந்து உட்கார கூட முடியவில்லை. மெதுவாக சுதாரித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார். அழுகை வந்தது. ஒரு பெண் வேலையாள் அவரை கவனித்துக் கொள்பவள் ''எதற்காக ஐயா அழுகிறீர்கள்?'' என்று கேட்டாள் .

''அம்மா எனக்கு இங்கிலாந்தில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எங்கோ வந்த இடத்தில் இப்படி நோய்வாய் பட்டு தவிக்கிறேன். எப்படியாவது என் வீட்டுக்கு போகவேண்டும்.. இங்கிருந்து இங்கிலாந்து செல்லும் கப்பல் இன்னும் 3 வாரங்கள் கழித்து தான் வருமாம். என்ன செய்வேன். அருகிலே ஒரு தேவாலயம் இருக்கிறது அங்கே சென்று தொழுகிறேன். வேண்டிக்கொள்கிறேன். கொஞ்சம் மன நிம்மதியாக இருக்கிறது. அங்கே யார் பேச்சையும் பிரசாங்கத்தையும் நான் கேட்பதில்லை. போவேன் வேண்டுவேன் வருவேன். அவ்வளவுதான். என்கிறார்

நாட்கள் ஓடியது.
அப்பாடா ஒரு நாள் ஒரு ஆரஞ்சு நிற சிறிய கப்பல் வந்தது. பிரான்ஸ் நாட்டில் மார்ஸெல்ஸ் நகரம் போய் சேர்ந்தார். போகும் வழியில் சார்டினியாவுக்கும் கார்சிகாவுக்கும் இடையே போனிபாஸியோ STRAITS OF BONIFACIO எனும் ஜலமார்கத்தில் கப்பல் பிரான்ஸ் நோக்கி போகும்போது ல் நியூமன் எழுதிய அந்த பாட்டு உலக பிரசித்தி பெற்றுவிட்டது.

இங்கிலாந்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிறைய பேர் அடியில் புதையுண்டு , பிராண வாயு இன்றி இறந்தனர். எப்படியோ தெய்வாதீ னமாக ஒரு சிலர் மட்டும் மீட்பு பணியாளர்கள் வந்து காப்பாற்றும் வரை உயிர் வாழ்ந்தனர். அப்போது அவர்கள் எங்கோ ஒரு மூலையில் பாறைகளுக்கு இடையில் அமர்ந்து இந்த பாடலை மனமுருகி பாடி இறைவனை வேண்டினார்கள். மீட்கப்பட்டார்கள்.

டிட்டானிக் எனும் புது கப்பல் முதல் பிரயாணத்தில் அமெரிக்காவை நோக்கி செல்லும்போது மூழ்கியது. கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிய சமயம் சிலர் இந்த பாடலை கடைசியாக பாடியவாறு இறந்தனர். இன்னும் எத்தனை எத்தனை சந்தர்ப்பங்களில் நமக்கு தெரியாமல் திக்கற்ற நிலையில் வெள்ளை யர்கள் இந்த பாடலை பாடி இருக்கிறார்களோ? . அதை தெய்வ பக்தி என்று நாம் எடுத்துக்கொண்டு அந்த பாட்டை படிப்போமா?

இந்த பாட்டு எனக்கு ஞாபகம் வரக்காரணம், இது எனக்கு ஆங்கில பாடத்தில் ஒன்று. இதை
என்னை 11 ம் வகுப்பில் மனப்பாடம் செய்ய வைத்தவர் எங்கள் ஆங்கில வாத்தியார் ஸ்ரீ T N .சுந்தரம். லியோ' ஸ் ஆங்கில நோட்ஸ் போடுவார். தமிழில் கோனார் நோட்ஸ் மாதிரி அது. நல்ல டிமாண்ட்.

Lead, Kindly Light, amidst th'encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.

ஐயா எனக்கு வழிகாட்டுவீர், இருளில் ஒளிப்பாதை காட்டுங்கள். எங்கும் இருள் அப்பி பயமாக இருக்கிறது. என்னை வழிநடத்துங்கள். இவ்வளவு இருட்டாக இருக்கிறதே. நான் செல்லவேண்டிய என் வீடு எங்கோ வெகு தூரத்தில் உள்ளதே. எனக்கு கொஞ்சம் வழி காட்டுங்களேன். அடி யொற்றி நடக்கிறேன். உங்கள் பாதத்தை காட்டுங்கள் அதை பின் பற்றி நடக்கிறேன். காரிருளில் ஒன்றுமே தெரியவில்லை. வழி முழுக்க எனக்கு வெளிச்சம் வேண்டவே வேண்டாம். அடுத்த காலடிக்கு வெளிச்சம் காட்டினாலே போதும் ஐயா.

I was not ever thus, nor prayed that Thou
Shouldst lead me on;
I loved to choose and see my path; but now
Lead Thou me on!
I loved the garish day, and, spite of fears,
Pride ruled my will. Remember not past years!

நான் இப்படி கெஞ்ச சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லையே ஐயா. உங்களை வழிகாட்ட அழைத்ததும் இல்லையே ஐயா. ஆனால் இப்போது நீங்கள் உதவேண்டும். உங்களால் தான் நான் கொஞ்சம் ஒளிபெற்று நடக்க முடியும். வழிகாட்டுங்கள். எனக்கு பட்டப்பகல் பளிச்சென்று சூரிய ஒளி ரொம்ப பிடிக்கும். அப்போது பயம் தலை காட்ட வில்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு ? நடுங்குகிறேன். என் கர்வம் ஆணவம் என்னை வழிநடத்தியது அப்போது. இப்போது அதை நினைக்கவே பிடிக்கவில்லை. மறக்க முயல்கிறேன்.

So long Thy power hath blest me, sure it still
Will lead me on.
O'er moor and fen, o'er crag and torrent, till
The night is gone,
And with the morn those angel faces smile,
Which I have loved long since, and lost awhile!

ஐயா, இந்த கணம் வரை உன் சக்தியால் நான் மூச்சு விடுகிறேன். உங்கள் ஆசி என்னை வாழ வைக்கிறது. என்னை நீங்கள் கட்டாயம் வழி நடத்தி செல்வீர்கள் என்ற உணர்வு, நம்பிக்கை மனது பூரா இருக்கிறது. வழி பூரா மேடு பள்ளம், காடு மேடு முள், சூடு மணல் சேறு சகதி, எப்படியாவது இந்த கும்மிருட்டில் இருந்து பொழுது விடிந்து தெய்வங்கள் இனித்த பளிச் முகத்துடன் புன்னகைத்து என்னை வரவேற் கட்டும். விழி திறக்குமா எனக்கு வழி கிடைக்குமா என்று பாடுகிறேன். அது நிச்சயம் என்பதால் இந்த தடுமாற்றம் அதிக நேரம் நீடிக்காது.....

Meantime, along the narrow rugged path,
Thyself hast trod,
Lead, Saviour, lead me home in childlike faith,
Home to my God.
To rest forever after earthly strife
In the calm light of everlasting life.

ஐயா உன் நிழல் மாதிரி உன் காலடியை ஒட்டி உன் பின்னாலே குறுகிய சந்து பொந்துகளில் எல்லாம் தொடர்ந்து வருகிறேன். வழி நடத்தி செல்லுங்கள், என் வீட்டை காட்டுங்கள், குழந்தைமாதிரி வழி தெரியாமல் நிற்கிறேன் பகவானே, எனக்கு வீடு பேறு கிடைக்க வழி காட்டுங்கள். இந்த துன்பத்தை தொடர்ந்து இனி அமைதியான என்றும் ஒளிமயமான வாழ்வை தரவேண்டி தொழுகிறேன்.

வாழ்க்கை ஒரு சம்சார சாகரம். இதில் கரை சேர, பல பிறவிப்பிணிகள், துயர்கள் தீர, ஜென்ம வினை தீர பகவானை வணங்கு கிறோம். மேலே பாடலில் சொன்னதை வாழ்க்கை துன்பமாக எடுத்துக் கொண்டு படித்தால் அர்த்தம் அற்புதமாக த்வனிக்கும் .எத்தனையோ இடையூறுகள் வாழ்க்கையிலும் உண்டு. அதெல்லாம் தாண்டி கரை சேர வேண்டும். அதற்கு பகவான் துணை இன்றி முடியாது. அவன் வழித்துணைவன். வழி காட்டுபவன், அதனால் தான் ஹிந்துக்கள் நாம் அவனை ''மார்க்கபந்து'' மார்க்க சகாயம், வழித்துணை இறைவன், என்போம்.

அப்பய்ய தீக்ஷிதர் எழுதிய ''மார்க்க பந்து ஸ்தோத்ரம்'' எழுதியிருந்தேனே பிடிக்க வில்லையா, படிக்கவில்லையா?. இன்னொரு தரம் அதை போஸ்ட் பண்ணட்டுமா?

Image may contain: 1 person

No comments:

Post a Comment