வேதாந்த தேசிகரின் ஹயக்ரீவ ஸ்தோத்திரம்
தேசிகர் பல ஸ்தோத்ரங்களை செய்து இருந்தாலும் இதுவே அவர் முதன்முதலில் செய்ததாகும். திருவஹீந்த்ரபுரத்தில் தேசிகர் கருடனிடம் இருந்து ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் பெற்றார். பிறகு அவர் அங்குள்ள சிறிய குன்றின்மேல் அமர்ந்து இதை ஜபம் செய்தபோது ஹயக்ரீவர் பிரத்யக்ஷமாக அப்போது தேசிகர் இந்த ஸ்தோத்திரத்தால் அவரைத் துதித்தார்.
இப்போது இந்த ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.
1. ஞானாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
ஞானமாகிய ஆனந்தத்தின் உருவானவரும், நிர்மலமான ஸ்படிகம் போல் உருவம் தரித்தவரும், சகல வித்தைகளுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குவோமாக.
ஹயக்ரீவர் அகண்டசச்சிதானந்த பிரம்ம ஸ்வரூபம்., நிர்மலமான ஸ்படிகம் நிறமற்றது. ஸ்படிகம் என்பது தூய்மையைக் குறிக்கிறது. சுத்தப்ரம்மஸ்வரூபம். ஞானானந்தமயம் என்றால் ஞானமே உருவானவர் அதனால் ஏற்படும் இன்பத்தை ஸ்படிகம் என பிரதிபலிப்பவர்.
ஹயக்ரீவர் என்றால் குதிரை முகம் கொண்டவர் என்று பொருள். ஹயக்ரீவ வடிவத்தில் பிரம்மாவின் முன் தோன்றி வேதங்களை மறந்து துக்கித்த அவருக்கு உப்தேசம் செய்தவர்.
பிராணிகளுள் குதிரை அறிவு மிக்கது. யுத்த காலங்களில் அதன் எஜமானன் சொர்வுர்றதை கண்டால் தானாகவே யுத்தபூமியில் இருந்து அவனை வெளிக் கொணர்ந்து விடுமாம்.
இந்த குருபூர்ணிமா அன்று குரு உருவான ஹயக்ரீவரின் ஸ்தோத்திரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு ஸ்லோகம் பதிவிடுகிறேன், மற்றவை என் பதிவில் தொடர்ந்து வரும்.
ஹயக்ரீவஸ்தோத்ரம்
ஸ்லோகம் 2
2.ஸ்வதஸ்ஸித்தம் சுத்தஸ்படிக மணிபூப்ரருத்பிரதிபடம்
ஸுதாசத்க்ரீசீபி: த்யுதிபி: அவதாதத்ரிபுவனம்
அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்
ஹதாசேஷாவத்யம் ஹயவதனம் ஈடீமஹீ மஹ:
ஹயக்ரீவர் ஸ்வத:ஸித்த:, அதாவது தானாகவே தோன்றியவர். எல்லா அவதாரங்களும் அப்படியே.
பிறவி எடுத்ததாக நாம் கருதும் அவதாரங்களும் அவன் மாயையால் அப்படித் தோன்றுகின்றன. பகவானுக்கு கர்பவாசம் என்பது இல்லை.
புருஷ ஸுக்தம் கூறுகிறது, 'அஜாயமானோ பஹுதா விஜாயதே,' பிறவியே இல்லாதவன் பலவாகத் தோன்றுகிறான். கீதையில் கண்ணன் கூறுகிறான், 'ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா,' (ப.கீ. 4-3). பிரகிருதியை கைக்கொண்டு என்னுடைய மாயையால் என்னை நானே தோற்றுவிக்கிறேன்.
ஹயக்ரீவர் சுத்தஸ்படிகபூப்ருத் பிரதிபட என்று வர்ணிக்கப்படுகிறார் . பூப்ருத் என்றால் மலை. பிரதிபட என்றால் போட்டியிடுபவரைக் குறிக்கும். சுத்தஸ்படிகத்தினால் ஆன மலைக்கு போட்டியாக இருப்பவர்.
ஸுதா என்றால் அமுதம். ஸுதாஸத்ரீசீ என்றால் அமுதத்துடன் கூடிய, த்யுதிபி: , ஒளியால், அவதாத திருபுவனம் , மூன்று உலகமும் வெண்மையாக அதாவது தூய்மையாக பிரகாசிக்கிறது. அவர் அருள் அமுதம் போல் நிறைந்து உலகைத்தூய்மை ஆக்குகிறது.
அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்- குதிரை முகம் கொண்ட அவருடைய ஹலஹல என்ற ஹேஷா, கனைப்பு சப்தம், த்ரய்யந்தை: , உபநிஷத்துக்களால் ( த்ரயி என்றால் வேதம் அவற்றின் அந்தம் வேதாந்தம் அதாவது உபநிஷத்) அனுவிஹித , பின்பற்றப்படுகிறது.
ஹயக்ரீவரின் மூச்சுக்காற்றில் இருந்து பிறந்தவை வேதங்களாகும். அதனால் அவரிடம் இருந்து வரும் சப்தமே வேத கோஷம்.
ஹத அசேஷ அவத்யம் , அவர் பக்தர்களின் குறைபாடுகளை நீக்கிவிடுகிறார் .அப்பேர்ப்பட்ட மஹ:, ஒளிஸ்வரூபமான, ஹயவதனம் – ஹயக்ரீவரை , ஈடீமஹி – வணங்குவோமாக.
தேசிகரின் பதப்ரயோகங்கள் ஆச்சரியமானவை. அவருடைய ஸ்லோகங்களை கற்றாலே சம்ஸ்க்ருத ஞானம் வெகுவாக வளரும்.
ஹயக்ரீவஸ்தோத்ரம் ஸ்லோகம் 3/4
3.ஸமாஹாரஸ்ஸாம்னாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
லய: பிரத்யூஹானாம் லஹரிவிததி: போதஜலதே:
கதாதர்பக்ஷுப்யத் கதககுல கோலாஹலபவம்
ஹரது அந்தர்த்வாந்தம் ஹயவதனஹேஷாஹலரவ:
ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் , ஹேஷாஹலரவ:, சாமவேதத்தின் சேகரிப்பு.(ஸமாஹார:) ரிக்வேதத்தின் மறுபதம்.(பிரதிபதம்) யஜுர்வேதத்தின் இருப்பிடம்/ ஒளி. (தாம என்னும் சொல் இருப்பிடம் , ஒளி இரண்டையும் குறிக்கும். )
சாமகானம் வாகீசராகிய ஹயக்ரீவரிடம் இருந்து வருகிறது. ரிக் வேதம் மந்த்ரங்களைக் கொண்டது. அதன் மறு பொருளாக ஹயக்ரீவர் இருக்கிறார். யஜூர்வேதம் வேத கர்மாக்களை குறிப்பதால் அவைகளின் பயன் அவரை அடைவதே என்பதால் அவைகளின் இருப்பிடமும் ,ஒளியைதருபவரும் அவரே.
கற்பதில் உள்ள எல்லா இடையூறுகளையும் (ப்ரத்யூஹானாம்) அழிக்கும் (லய:)வல்லமை வாய்ந்தது. அறிவு எனும் கடலின்( போத ஜலதே:) அலைகளின் வரிசை.( லஹரிவிததி:)
ஊஹ என்றால் அறிவது பிரத்யூஹ என்றால் அதற்கு இடையூறு. ஹய்க்ரீவருடைய கனைப்பு சப்தப்ரம்மமே ஆதலால் கற்பதில் உள்ள இடையூறுகள் அகல்கின்றன.அது மட்டும் அல்ல. மேலும் அறிவு அலைகளை உற்பத்தி செய்யும் சமுத்திரமாகவும் இருக்கிறார்.
அவருடைய கனைப்பொலி வாதம் புரிவதால்செருக்குற்ற ( கதாதர்ப) வாதிகளின் ஆரவாரத்தால் ஏற்பட்ட (கதககுல கோலாஹலபவம் ) கலக்கத்தினால் உண்டான மன இருளை (க்ஷுப்யத் அந்தர்த்வாந்தம்) ஹரது- போக்கடிக்கட்டும்.
ஹயக்ரீவரின் அருளைப் பெற்றவர்கள் எதிர்வாதம் செய்து மக்கள மனதை மயக்குவோருக்கு சவாலாக இருக்கிறார்கள். இதற்கு கவிதார்கிக கேசரி என்று பட்டம் பெற்ற தேசிகரே ஸாக்ஷி.
அப்படிப்பட்டவர்களின் வாதத்தினால் ஏற்பட்ட ஆரவாரத்தை ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் விழுங்கி விடுகிறது.
4.ப்ராசீ ஸந்த்யா காசித் அந்தர்நிசாயா:
பிரக்ஞா த்ருஷ்டே: அஞ்சனஸ்ரீ: அபூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜிவக்த்ரா
வாகீசாக்யா வாசுதேவஸ்ய மூர்த்தி:
, குதிரை முகம் கொண்டதும், ( வாஜிவக்த்ரா- வாஜி என்றால் குதிரை ) மனஇருள் என்ற இரவின் (அந்தர்நிசாயா:) விடியற்காலமாகவும் , (ப்ராசீ சந்த்யா) ஞானக்கண்ணின் (பிரக்ஞா த்ருஷ்டே: ), அதிசயமான (அபூர்வா) கண் மையாகவும் (அஞ்சன ஸ்ரீ: ) வேதங்களை உபதேசிக்கின்ற : (வக்த்ரீ வேதான்) வாசுதேவரின் கல்விக்கடவுள் (வாகீசர் )என்ற ரூபம், (மூர்த்தி:) பாது (bAATHU) மே, என் முன்னர் பிரகாசிக்கட்டும்.
மனஇருள் அஞ்ஞாநத்தினால் வருவது. மனதில் ஹயக்ரீவரின் உருவம் த்ன்றினால் அந்த இருள் உதயசூரியன் வந்தாற்போல் மறைகிறது. மந்திர மை போட்ட கண்களுக்கு எல்லாம் தெரிவதைப்போல் ஹயகிரீவரின் உருவம் ஞானக்கண்ணின் மையாக விளங்குகிறது.
வக்த்ரீ வேதான் என்பது பகவான் வாசுதேவர் ஹயவதனராகத் தோன்றி பிரம்மாவுக்கு வேதத்தை உபதேசம் செய்ததை குறிக்கிறது.
ஹயக்ரீவஸதோத்ரம் - 5, 6
.5.விசுத்த விஞ்ஞானகனஸ்வரூபம்
விஞ்ஞான விச்ராணனபத்த தீக்ஷம்
தயாநிதிம் தேஹப்ருதாம் சரண்யம்
தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே
தூய்மையான(விசுத்த) ஞானத்தின் மொத்தவடிவமான (விஞ்ஞான கனஸ்வரூபம்), ஞானத்தை அருள்வதில் வ்ரதம் பூண்டவரும் (விஞ்ஞான விச்ராணன பத்த தீக்ஷம்) , கருணைக்கு உறைவிடமும், எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாகவும் உள்ள ஹயக்ரீவரை வணங்குகிறேன்
அடுத்துவரும் ஸ்லோகங்கள் ஹயக்ரீவர் தரிசனம் தந்தபோது அவரைப்பார்த்து இயற்றியவை என்று சொல்லப்படுகிறது. அவை ஹயக்ரீவருடன் நேரில் பேசுவது போன்று இருப்பவை.
6. அபௌருஷேயைரபி வாக்ப்ரபஞ்சை:
அத்யாபி தே பூதிம் அத்ருஷ்டபாராம்
ஸ்துவன்னஹம் முக்த இதி த்வயைவ
காருண்யதோ நாத கடாக்ஷணீய:
பிரபோ! ஒருவராலும் இயற்றபடாதவை ( அபௌருஷேயம்) எனப்படும் வேதத்தின் பிரிவுகளாலும்(வாக்ப்ரபஞ்சை:) இன்றளவும் (அத்யாபி) எல்லை காண முடியாத (அத்ருஷ்டபாராம் ) உன் மஹிமையை ( தே பூதிம்) துதிக்கின்ற நான் (ஸ்துவன் அஹம்) அறியாச்சிறுவன் (முக்த இதி) என்று உன்னால் (த்வயா) கருணையுடன் (காருண்யத:) கடாக்ஷிக்கத் தகுந்தவன் (கடாக்ஷணீய:)
வேதங்கள் பகவானின் மூச்சிலிருந்து தோன்றியபடியால அவை அபௌருஷேயம் , ஒருவராலும் இயற்றப்படாதவை எனப்படுகின்றன. அந்த வேதங்களாலும் அவன் பெருமையைக் கூற இயலவில்லை.
தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார், 'யதேகைகககுணப்ராந்தே ஸ்ராந்தா: நிகமவந்தின: யதாவத் வர்ணனே அஸ்ய ,' வேதமாகிற துதிப்பாடகர்கள் பகவானின் ஒரு குணத்தை வர்ணிப்பதற்குள் களைத்துவிடுகின்றார்களாம் . அதனால் அவரை உள்ளபடி வர்ணிக்க வேதங்களாலும் இயலவில்லை என்கிறார் .
மேலும் அவருடைய தன்னடக்கத்தையும் காண்கிறோம், முக்த: என்ற சொல்லின் மூலம்.நான் ஒரு அறியாப்பிள்ளை என்கிறார்.
ஒரு குழந்தையின் புரியாத மழலைச்சொல்லால் எவ்வாறு ஒரு தந்தை பூரிப்படைவானோ அதுபோல பகவான் நாம் துதிக்கும் சொற்களால் மகிழ்வடைகிறான்.,அதனால் நாம் சரியாக உச்சரிக்கிறோமா என்று கூட கவலைப்பட வேண்டுவதில்லை.
ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -7,8
7.தாக்ஷிண்யா ரம்யா கிரிசஸ்யமூர்த்தி:
தேவி ஸரோஜாஸன தர்மபத்நீ
வ்யாஸாதையோ அபி வ்யபதேசவாச:
ஸ்புரந்தி ஸர்வே தவசக்திலேசை:
பிரம்மஸ்வரூபமான தங்களுடைய சக்தியின் வெளிப்பாடே தக்ஷிணாமூர்த்தி அவதாரம் , பிரம்மனின் பத்னியாகிய சரஸ்வதியின் கலைத்திறன், , வியாசர் முதலியோரின் வாக் வைபவம்.
கிரிசஸ்ய மூர்த்தி: , சிவனின் தக்ஷிணாமூர்த்தி ரூபம் ,கிரௌ சேதே இதி கிரிச:, ஹிமாச்சலத்தில் வாசம் செய்வதால். தாக்ஷிண்ய ரம்யா, தெற்குப்பார்த்து அமர்ந்துள்ள அழகிய வடிவம்,
தக்ஷிண என்ற சொல் திறமை அல்லது புத்தி அதாவது ஞானத்தையும் குறிக்கும். அதனால் ஒளிரும் அழகிய உருவமே தக்ஷிணாமூர்த்தி உருவம்.
ஸரோஜாஸனன் , தாமரை மேல் அமர்ந்துள்ள பிரம்மா. அவருடைய தர்ம பத்னி சரஸ்வதி. . மனைவி என்கிற பதத்திற்கு பல சொற்கள் வடமொழியில் உள்ளன . ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
பத்நீ என்றால் பதியினுடைய வேத கர்மாக்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் உடன் இருப்பவள் என்பது அர்த்தம். சரஸ்வதி பிரம்மாவின் படைப்புத்தொழிலுக்கு வேண்டிய அறிவுத திறனாக இருப்பவள். அவளை நாவில் கொண்டதால் பிரம்மா வேதங்களை அறிந்து படைப்புத்த்ழிலை செய்கிறார்.
வ்யாசாதய: - வியாசர் முதலியவர்கள் என்பது வால்மீகி , மற்ற வாக்திறன் கொண்டவர்கள் அனைவரும் அடங்கியது.
8. மந்தோ அபவிஷ்யத் நியதம் விரிஞ்சோ
வாசாம் நிதே வஞ்சிதபாகதேய:
தைத்யாபநீதான் தயயைவ பூயோ அபி
அத்யாபயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்
வாக்கின் நிதியே, (வாசாம் நிதே ) தாங்கள், (த்வம்)அசுரர்களால் அபகரிக்கப்பட்ட ( தைத்யாவ்பநீதான் )வேதங்களை , (நிகமான்), மறுபடியும்,( பூய: அபி), கருணை கூர்ந்து, (தயயா ஏவ, ) உபதேசித்திருக்கவில்லையானால் ,( ந சேத் அத்யாபயிஷ்ய) , (விரிஞ்ச:,) பிரம்மா, நிச்சயமாக , (நியதம்,) துரதிர்ஷ்டவசமாக , (வஞ்சித்த பாகதேய:,) அறிவை இழந்திருப்பார் , (மந்தோ அபவிஷ்யத். )
. பிரம்மா கண் அயர்ந்த போது, மது, கைடபன் என்ற அசுரர்களால் வேதங்கள் அபகரிக்கப்பட்டன. ஹயகிரீவர் பிரம்மாவிற்கு வேதங்களை மீண்டும் உபதேசித்தார்.
ஹயக்ரீவ் ஸ்தோத்திரம் ஸ்லோகம் 9, 1௦
9.விதர்கடோலாம் வ்யவதூய ஸத்வே ப்ருஹஸ்பதிம் வர்தயசே யத: த்வம்
தேனைவ தேவ த்ரிதசேச்வராணாம் அஸ்ப்ருஷ்ட டோலாயிதம் ஆதிராஜ்யம்
தேவ- பகவானே, யத: -எதனால், த்வம்- நீ, விதர்கடோலாம் –மனம் சந்தேகத்தினால் ஊசலாடுவதை, வ்யயவதூய- ஒழித்து, ப்ருஹஸ்பதிம்- பிருஹஸ்பதியை, ஸத்வே- நேர்வழியில், வர்தயசே- நிலை நிறுத்துகிறாயோ, தேன- அந்த செய்கையால், த்ரிதசேச்வராணாம்- தேவர்களுடைய , ஆதிராஜ்யம் – தேவலோக ஆட்சியானது , அஸ்ப்ருஷ்ட டோலாயிதம்- ஊசலாடாமல் இருக்கிறது.
ப்ருஹ்பதி தேவகுருவாவார். அவருடைய ஞானமானது ஹயக்ரீவருடைய அருளால் வந்தது என்று கூறுகிறார் மற்றவர்க்கு உபதேசம் செய்ய தெளிவான உறுதியான அறிவு வேண்டும். ஸந்தேகத்தினால் மனம் ஊசலாடக்கூடாது. பிரம்மஞானம் ஒன்றே எல்லா சந்தேகங்களைய்ம் தீர்க்கக்கூடியது.
உபநிஷத் கூறியபடி,
பித்யதே ஹ்ருதய்க்ராந்தி:சித்யந்தே ஸர்வஸம்சயா:
க்ஷீயந்தே அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே (முண்டகோபநிஷத்)
பிரம்மசாக்ஷாத்காரத்தினால் மனதில் உள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன. எல்லா சந்தேகங்களும் விலகிவிடுகின்றன. எல்லா கர்மங்களும் அழிகின்றன.
நம் கர்மவினையினால் புத்தி பல சந்தேகங்களுடன் குழம்புகிறது. இது பல முடிச்சுகளாக சீரான பாதையில் குறுக்கிடுகிறது. இது எப்போது தீரும் என்றால் பிரம்மஞானம் ஏற்படும்போதுதான். அதுவும் யமைவேஷ வ்ருணுதே தேன லப்யதே என்ற உபநிஷத் வாக்கியப்படி இறைவன் அருள் இருந்தால்தான் நிறைவேறும்
ஹயக்ரீவர் பிருஹஸ்பதிக்கு ஊசலாடாத தெளிந்த அறிவைக் கொடுத்ததனால் தேவலோக சாம்ராஜ்யம் ஊசலாடாமல் நிலை பெற்றது என்கிறார் தேசிகர்.
தேவர்களுக்கு த்ரிதசா: என்று பெயர்.ஏனென்றால் அவர்களுக்கு குழந்தைப்பருவம், பால்யம், இளமைப்பருவம் இந்த மூன்று நிலை தான் உண்டு, வயோதிகம் இல்லை.
1௦.அக்னௌ ஸமித்தார்சிஷி ஸப்ததந்தோ:ஆதஸ்திவான் மந்த்ரமயம் சரீரம்
அகண்டஸாரை: ஹவிஷாம் ப்ரதானை:ஆப்யாயனம் வ்யோமஸதாம் விதத்சே
கொழுந்துவிட்டு எரிகின்ற ( ஸப்தார்சிஷி) , வேள்வியின் அக்னியில் (ஸப்ததந்தோ: அக்னௌ- வேள்வி நெருப்பில், மந்த்ரமயம் சரீரம் – மந்திரங்களே சரீரமாக, ஆதஸ்திவான் – கொண்டு நின்று, அகண்ட ஸாரை: அளவிலா சாரத்தை உடைய , ஹவிஷாம் ப்ரதானை: - ஹவிர்பாகங்களை, வ்யோமஸதாம்- தேவர்களுடைய , ஆப்யாயநம் – சந்தோஷத்தை , விதத்சே –விளைவிக்கிறீர்.
யக்ஞம் ஸப்ததந்து என்று சொல்லப்படுகிறது. ஸப்தபி: தன்வதே – அது ஏழு சந்தஸ்களால் செயற்படுத்தப் படுவதால். அக்னியும் ஸப்தார்சிஸ் அல்லது ஸப்தஜிஹ்வா எனப்படுகிறது. ஆறு விதமான ஜ்வாலைகள் அல்லது நாக்குகள் உடையதனால். ஆறு நாக்குகள் : காளீ, கராலீ, மனோஜவா, ஸுலோஹிதா, தூம்ரவர்ணா, ஸ்புலிங்கிநீ, விச்வதாஸா.
ஹயக்ரீவர் மந்த்ரஸ்வரூபம் ஆவார். மந்திரங்கள் மூலம் தேவர்கள் ஹவிர்பாகங்களைப் பெறுகிறார்கள்.உண்மையில் அக்னியே பகவானின் ஸ்வரூபம். அக்னியின் மூலம்தான் ஹவிர்பாகங்கள் தேவர்களுக்குப் போய்ச்சேருகின்றன. ஸ்ரீ சூக்தத்தில் லக்ஷ்மியின் அருளைப் பெற ஜாதவேதஸ் அதாவது அக்னி பிரார்த்திக்கப் படுகிறது. உண்மையில் அது அக்னிரூபமான் பகவானைக் குறித்து செய்யப்பட ப்ராத்தனையாகும்.
ஹவிஸ் அகண்ட ஸாரமுடையது என்பதன் பொருள், அது தேவர்களை அடைவதன் மூலம் எல்லா அபீஷ்டங்களும் அந்ததந்த தேவர்கள் மூலம் நிறைவேறுகின்றன. தேவர்கள் பகவானின் பிரதிநிதிகளாகவே செயல் படுவதால் அவர்கள் ஹவிர்பாகத்தை அடையச் செய்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறார் பகவான்.
ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -11,12
11. யன்மூலம ஈத்ருக் பிரதிபாதி தத்வம்
யா மூலம் ஆம்னாய மஹாத்ருமாணாம்
தத்வேன ஜானந்தி விசுத்தஸத்வா:
தாம் அக்ஷராம் அக்ஷரமாத்ருகாம் த்வாம்
இந்த பிரபஞ்சம் (ஈத்ருக் தத்வம்) , எதைக் காரணமாகக்கொண்டு (யன்மூலம்), விளங்குகிறதோ (ப்ரதிபாதி), எது, (யா ), வேதங்களாகிய
( ஆம்னாய), மரங்களுக்கு ( மகாத்ருமாணாம் ), வேராக உள்ளதோ (மூலம்), அந்த (தாம்) எழுத்துக்களுக்கு முதன்மையாக உள்ள (அக்ஷரமாத்ருகாம்) பிரணவமாகிய அக்ஷரமாகிய (அக்ஷராம்) உன்னை (த்வாம்), தூய்மையான் சத்வ குணம் உடையவர்கள் (விசுத்தஸத்வா: ), உள்ளபடி (தத்வேன) அறிகிறார்கள் (ஜாநந்தி )
தேவ மனுஷ்ய பிராணி தாவரம் என்ற பிரிவுகள் கொண்ட ஸ்ருஷ்டியானது வேதத்தை மூலமாகக் கொண்டு படைக்கப்பட்டது. வேதமாகிய மரத்தின் மூலவேர் பகவான்தான். வேதங்கள் பிரணவத்தில் இருந்து தோன்றியவை. பகவான் அந்த ப்ரணவவடிவம். ஓமித்யேகாக்ஷரம் ப்ரம்ம என்கிறது உபநிஷத். இதை ஸத்வகுணம் கொண்ட பெரியோர் அறிகிறார்கள்.
12.அவ்யாக்ருதாத் வ்யாக்ருதவான் அஸி த்வம்
நாமானி ரூபாணி ச யானி பூர்வம்
சம்ஸந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம்
வாகீஸ்வர த்வாம் த்வதுபக்ஞவாஸ:
வாகீசப் பெருமானே ,நீ (த்வம்), உருவம் அற்ற நிலையில் இருந்து (அவ்யாக்ருதாத்) எந்த பெயர்களையும் உருவங்களையும் (நாமானி ரூபாணி ச)முந்தைய கல்பங்களில் இருந்தவாறு (யானி பூர்வம், (வ்யாக்ருதவான் அஸி) தோற்றுவிக்கின்றாயோ, அவைகளின் (தேஷாம்) கடைசியில் சேரும் இடமாக (சரமாம் பிரதிஷ்டாம்), உன்னை (த்வாம் ), நீ உபதேசித்த வேதங்கள் ( த்வதுபக்ஞ வாச: ) சம்ஸந்தி- புகழுகின்றன.
அவ்யாக்ருத எனற சொல் சாதாரணமாக மூலப்ரக்ருதியைக் குறிக்கும். அதிலிருந்து மஹத், அஹங்காரம், தன்மாத்திரைகள் பஞ்சபூதங்கள் முதலியவை தோன்றின என்பது ஸ்ருஷ்டிவிளக்கம். ஆனால் இங்கு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி அந்த சொல் சூக்ஷ்ம சித் அசித் விசிஷ்ட பிரம்மமாகிய நாராயணனையே குறிக்கும்.
ஆதியில் ஸத் அதாவது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. அது பலவாக சங்கல்பித்தது. அந்தர்யாமியாக எல்லாவற்றிற்கும் உள்ளே புகுந்து பெயர் உருவம் இவற்றைத் தோற்றுவித்தது என்பது உபநிஷத் வாக்கியம். விஷ்டாத்வதத்தில் பிரபஞ்சமே பிரம்மமாகிய நாராயணன். உருவமில்லாத (அவ்யாக்ருத) பகவான் மாயையினால் நாமம் ரூபம் கொண்ட இவ்வுலகமாகத் தோன்றுகிறான் (வ்யாக்ருதவான் அஸி)
நாமானி ரூபாணி ச யானி பூர்வம் என்பது ஒவ்வொரு கல்பத்திலும் சிருஷ்டி ஒரே மாதிரி நடக்கிறது. அதாவது, சிங்கம் எல்லா கல்பத்திலும் பெயரிலும் உருவத்திலும் குணத்திலும் சிங்கமாகவே இருக்கும் அதேபோல எல்லா உயிர்களும், அசையும் பொருள் அசையாப்பொருள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். பெயர்களும் உருவங்களும் மாறுவதில்லை. இது ஏன் என்றால் சிருஷ்டி வேதத்தை ஒட்டி நடைபெறுகிறது. வேதங்கள் பகவானிடம் இருந்து வந்தவை.
சரமாப்ரதிஷ்டா என்பதை விளக்க ஒரு உதாரணம்:
ஒரு பிரம்மஞாநியிடம் ஒருவன் உபதேசம் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அவர் "நீ யார்? என்றார். அவன் தன் பெயரைச் சொன்னான். "அது உன்பெயர் நீ யார்?? மறுபடியும் கேட்டார். அவன் தன் பதவி, படிப்பு, முதலியவைகளை அடையாளமாகக் கூற அவர் எல்லாவற்றையும் இவ்வாறே தள்ளிவிட்டார். கடைசியில் "நான் யார் என்று தெரியவில்லை சுவாமி " என்று காலில் விழுந்தான். அப்போது அவர் கூறினார் . " ஆத்மாவான . உனக்குள்ளிருக்கும் அந்தராத்மாவான பரமாத்மாவே உண்மையில் நீ . அதுதான் உன் கடைசி அடையாளம் (identity) என்றார்.
விசிஷ்டாத்வைதத்தின் சரீர சரீரிபாவம் இதைத்தான் கூறுகிறது. பிரபஞ்சம் பகவானின் சரீரம். அவனே சரீரி. அதாவது சரீரத்துள் இருக்கும் ஆத்மா. வேதம் இதைத்தான் கூறுகிறது என்கிறார் தேசிகர்.
ஹயக்ரீவஸ்தோத்ரம்
13.முக்தேந்து நிஷ்யந்த விலோபநீயாம் மூர்த்திம் தவாநந்த ஸுதாப்ரசூதிம்
விபஸ்சித: சேதஸி பாவயந்தே வேளாம் உதாராம் இவ துக்த ஸிந்தோ:
விபஸ்சித: - ஞானிகள் , முக்தேந்து நிஷ்யந்த விலோபநீயாம்- அழகிய உருகிய பிறைச்சந்திரனைப் போன்றதும் , ஆனந்தஸுதாப்ரசூதிம்- ஆனந்தாம்ருதத்தை வெள்ளமெனப் பொழிவதும், துக்தஸிந்தோ: - பாற்கடலின் , உதாரவேளாம்- அகன்ற அலை போன்றதும் ஆன, தவ மூர்த்திம் – உனது உருவத்தை , சேதஸி- உள்ளத்தில் பாவயந்தே- தியானிக்கின்றனர்.
ஹயக்ரீவரின் பிரம்மஸ்வரூபத்தை முந்தைய இரண்டு ச்லோகங்களில் நிலைநாட்டியபின்பு அடுத்து வரும் ஐந்து ஸ்லோகங்களில் தேசிகர் ஹயக்ரீவத்யாநத்தால் ஏற்படும் பிரம்மானுபவத்தை வர்ணிக்கிறார்.
முக்த இந்து என்னும் சொல் பிறைச்சந்திரனையோ அல்லது அழகிய சந்திரனையோ குறிக்கும். முக்த என்றால் சாதாரணமாக கபடமற்ற என்பதுபொருள். ஹய்க்ரீவரின் உருவத்தை முக்த இந்து என்பதன் மூலம் அவருடைய சுத்தஸத்வஸ்வரூபம் குறிப்பிடப்படுகிறது.நிஷ்யந்த என்பதன் மூலம் அந்த சந்திரனே உருகி இந்த ஸ்வரூபம் ஆனதோ என்ற பொருள் கிடைக்கிறது., ஆகவே அது விலோபநீயம் , கவர்ச்சிகரமானது, சுத்தவெண்மை ஸ்வரூபம் அவரை தியானிப்பவர் உள்ளத்தில் வெண்மையான பாற்கடலின் வெள்ளமெனப் பெருகும் அலை போல (tsunami of the sunaami ) வியாபிக்கிறது.
14.மனோகதம் பச்யதி ய: ஸதா த்வாம் மநீஷிணாம் மானஸராஜஹம்சம்
ஸ்வயம் புரோபாவ விவாதபாஜ: கிம்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்
ய:-எவர், ஸதா-எப்போதும் , மநீஷிணாம் –ஞானிகளின் , மானஸராஜ ஹம்சம்- மனமாகிற மானசரோவரில் உறைகின்ற ராஜஹம்சத்தைப்போல் உள்ள, த்வாம்- உன்னை , மனோகதம் –உள்ளத்தில் உறைபவனாகக, பச்யதி- காண்கிறாரோ, தஸ்ய – அவருக்கு, கிர:- வாக்குகள், புரோபாவவிவாதபாஜ:-நான் முன்னே நீ முன்னே என்று வழக்காடிக்கொண்டு , ஸ்வயம் – தாமாகவே, கிம்குர்வந்தி- ஏவல் செய்கின்றன.
ஹயக்ரீவரைக் குறிக்கும் ராஜஹம்சம் என்ற சொல்லின் முக்கியத்துவம் என்னவெனில் ஹயக்ரீவ பீஜ மந்த்ரம் ஹம்ஸஸ்ஸோஹம் என்று தொடங்குகிறது. ஹம் என்பது உள்மூச்சு , ஸ: என்பது வெளிமூச்சு . இரண்டும் சேர்ந்தது உயிர்மூச்சான பிரம்மம்.
15. அபிக்ஷணார்தம் கலயந்தி யே த்வாம்
ஆப்லாவயந்தம் விசதை: மயூகை:
வாசாம் பிரவாஹை: அனிவாரிதை:: தே
மந்தாகிநீம் மந்தயிதும் க்ஷமந்தே
யே- எவர்கள்
அபி க்ஷணார்தம் – அரைக் கணமாகிலும்
விசதை: மயூகை: -வெண்மையான கிரணங்களால்
ஆப்லாவயந்தம் –மூழ்கடிக்கும்
த்வாம்- உன்னை
கலயந்தி-தியானிக்கிறார்களோ
தே- அவர்கள்
அநிவாரிதை: தடுக்கப்படாத
வாசாம் பிரவாஹை: - வாக்கு வெள்ளங்களால்
மந்தாகிநீம்- ஆகாச கங்கையை
மந்தயிதும் – வேகம் குறைவதாக
க்ஷமந்தே – செய்ய வல்லவர் ஆகிறார்கள்.
மந்தாகினி என்பது ஆகாசகங்கைக்குப் பெயர். கங்கையின் ஒரு கிளை நதியும் இந்தப்பெயரில் குறிக்கப்படுகிறது. மந்தாகினி என்றால் மெதுவாகச்செல்பவள் என்று பொருள். (மந்தம் அகிதும் சீலம் அஸ்யா:). மந்தாகிநீம் மந்தயிதும் என்னும்போது தேசிகரின் சொல்லாற்றலைப் பார்க்கிறோம்.
இங்கு கங்கையின் பல பெயர்களில் இந்தபெயரைக் கூறிய காரணம் என்ன என்று ஆராயும்போது, ( மகான்கள் ஒரு சொல்லையும் காரணம் இன்றிப் பயன் படுத்தமாட்டார்கள். ) ஆகாச கங்கை பகீரதனால் வேண்டப்பட்டு பூமிக்கு வரும்போது அவள் வேகத்தை பூமி தாங்காதென்று பரமசிவன் தன் ஜடையை விரிக்க கங்கை அகந்தை கொண்டு அவரையும் சேர்த்து பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் எண்ணத்துடன் வெகு வேகமாக பாயும்போது சிவன் அவள் வேகத்தைத்தடுத்து தன் ஜடையில் அவளை இருத்திக்கொண்டார் என்றறிவோம்.
இங்கு தேசிகர் சொல்கிறார் . மந்தாகினியின் வேகத்தை மந்தப்படுத்தும், அதாவது அவளுக்கு ஏற்பட்ட மாதிரி ஒருதடையும் இல்லாமல் பாயும் வாக்கு வெள்ளம் என்று. அற்புதமான கவிசாதுர்யம்!
இந்த ஸ்லோகம் ஹயக்ரீவரின் அருள் பெற்ற தேசிகரின் வாக்கு வெள்ளததையே குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம்.
ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
16.ஸ்வாமின் பவத்த்யான ஸுதாபிஷேகாத்
வஹந்தி தன்யா: புலகானுபந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூடமூலம்
அங்கேஷ்விவ ஆனந்ததும் அங்குரந்தம்
ஸ்வாமின்- ஸ்வாமியே
தன்யா: புண்ணியசாலிகள் ஆன சிலர்
பவத்த்யான ஸுதாபிஷேகாத்- உங்களுடைய தியானம் எனற அமுதகடலில் நீராடுவதால்
அலக்ஷிதே – கண்ணுக்கு புலப்படாத
க்வாபி – ஓரிடத்தில்
நிரூடமூலம் –வேரூன்றி இருந்து
அங்கேஷு – அங்கங்களில்
அங்குரந்தம் – முளைத்து எழுவதாகிய
ஆனந்ததும் இவ – ஆனந்தத்தைப் போன்ற
புலகானுபந்தம் – மயிர்கூச்சலின் தொடர்ச்சியை
வஹந்தி – அனுபவிக்கிறார்கள்
புண்ணியம் செய்தவர்கள் தங்கள் இதயத்தில் ஹயக்ரீவரின் உருவத்தைக் கண்டு அமுதத்தில் ஸ்நானம் செய்ததைப் போன்ற உணர்வைப் பெறுகிறார்கள். அதனால் ஏற்பட்ட மயிர்கூச்சு அந்த ஆனந்தம் வேரூன்றி அங்கங்களில் முளை விட்டதைப்போல தோன்றுகிறது.
தன்யா: என்ற சொல் தனிகர்களையும் குறிக்கும். இங்கு ஹயக்ரீவரீன் அருளைப் பெற்றவர்கள் வித்யாதனம் என்ற பெரும் செல்வத்தை , அடைகிறார்கள்.வித்யாதனம் ஸர்வ தனாத் பிரதானம். கல்விச்செல்வமே எல்லாவற்றிலும் சிறந்த செல்வம். ஏனென்றால் மற்ற செல்வம் இந்த உடலோடு போய்விடும். கல்விச்செல்வமானது பல பிறவிகளில் தொடரும்.ஒருவர் பிறவியிலேயே அறிவாளியாக இருந்தால் பூர்வ ஜன்ம பலன் என்று சொல்கிறோம். மேலும் பகவானே மிகச் சிறந்த செல்வம்.
தேசிகரின் நண்பர் விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தார், அவர் தேசிகர் வறுமையில் இருப்பதை அறிந்து ராஜ சபைக்கு வரும்படி கூறினார் . அப்போது தேசிகர் அதை மறுத்து 'அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம்,' இந்த அத்திகிரியின் மேல் என் பாரம்பரிய சொத்து உள்ளது ," என்று கூறினார். இது பக்தர்களுக்கு பகவானைத்தவிர வேறு மேலான செல்வம் இல்லை என்பதை உணர்த்துகிறது. .
17.ஸ்வாமின் ப்ரதீசா ஹ்ருதயேன தன்யா:
த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமானம்
அமாந்தம் ஆநந்த பயோதிம் அந்த:
பயோபி: அக்ஷ்ணாம் பரிவாஹயந்தி
ஸ்வாமின்- ஸ்வாமியே
தன்யா: - புண்யசாலிகள்
ப்ரதீசா ஹ்ருதயேன – உள் நோக்குகின்ற மனதால்
த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமானம்- உங்களை தியானம் என்ற சந்த்ரோதயத்தால்
அந்த: - இதயத்தினுள்
வர்த்தமானம் – பொங்குகின்ற
அமாந்தம் – அளவில்லாத
ஆனந்த பயோதிம்- ஆனந்தக்கடலை
அக்ஷ்ணாம் பயோபி: - கண்ணீர் மூலம்
பரிவாஹயந்தி- வெளி விடுகின்றனர்.
ஹயக்ரீவரை த்யானம் செய்வதால் உள்ளத்தில் அவரைக்கண்டு ஆனந்தம் கடல் போல பொங்குகிறது. அளவில்லாத வெள்ளம் போல பொங்குவதை கண்கள் எனற கால்வாய் மூலம் வெளியேற்றுகின்றனராம்.
ஹயக்ரீவஸ்தோத்ரம்
18. ஸ்வைரானுபாவா: த்வததீனபாவா:
ஸம்ருத்தவீர்யா: த்வதனுக்ரஹேண
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம்
வைஹாரிகீம் மோஹனபிச்சிகாம் ச
நாத- பெருமானே , விபஸ்சித:-ஞானிகள் , த்வததீனபாவா: , உன்னிடம் மனதை செலுத்தியவராய், ஸ்வைரானுபாவா: - அளவில்லாத பெருமையை உடையவராய் , ஸம்ருத்தவீர்யா:- மனவலிமை பெற்றவர்களாய் , த்வதனுக்ரஹேண – உனதருளால் , வைஹாரிகீம் –உனது விளையாட்டின் விளைவான, மோஹனபிச்சிகாம் – மயக்கும் மயில் தோகை போன்ற, மாயாம்- மாயையை , தரந்தி- கடக்கிறார்கள்.
விசித்திரமானதும் சக்திவாய்ந்ததுமான பகவானின் மாயையால் அதன் விளைவான இந்த உலகத்தின் தோற்றம் உண்மை என்று எல்லோராலும் நம்பப்படுகிறது. விசிஷ்டாத்வைதத்தில் உலகம் பொய் அல்ல . ஈஸ்வரன், ஜீவன், ஜகத் மூன்றுமே உண்மை. ஆனால் இந்த ஜகத் அல்லது உலகம் நாம் காண்பதுபோல் அல்ல. ஞானிகள் எங்கும் பகவானையே காண்கிறார்கள். மற்றவர்களுக்கு இறைவன் தெரிவதில்லை. மந்திரவாதி மயில தோகையை வைத்துக்கொண்டு நம்மை மயக்குவது போல மாயை மயக்குகிறது.
19.ப்ராங்நிர்மிதானாம் தபஸாம் விபாகா:
ப்ர்தய்க்ர நிச்ஸ்ரேயஸஸம்பதோ மே
ஸமேதிஷீரன் தவ பாத பத்மே
ஸங்கல்பசிந்தாமணய: ப்ரணாமா:
ப்ராங்நிர்மிதானாம் – முற்பிறவியின் தவப்பயன்களாய் , பிரத்யக்ர- இதுவரை பெறாத, நிஸ்ஸ்ரேயச –மோக்ஷம் என்னும், சம்பத: - செல்வத்தை அளிக்கும் ,சங்கல்ப சிந்தாமணய: - கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியைப் போன்ற, தவபாத பத்மே- உன் பாத கமலங்களில் செய்யப்பட்ட , ப்ரணாமா: - வந்தனங்கள், ஸமேதிஷீரன் – வளர்ந்து கொண்டே இருக்கட்டும்.
இந்த ஸ்லோகத்தில் இருந்து தேசிகர் ஹயக்ரீவப் பெருமானின் அருளை பிரார்த்திக்கிறார். பகவத் ஸ்வரூபத்தை தியானம் செய்யும் ஸ்லோகங்கள்.
எப்படி பகவானின் பாதங்களில் செய்யப்படும் வந்தனங்கள் சிந்தாமணியைப்போல் கேட்டதைக்கொடுக்க வல்லன என்பதை அடுத்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.
.20. விலுப்த மூர்த்தன்ய லிபிக்ரமாணாம்
ஸுரேந்த்ர சூடாபதலாலிதானாம்
த்வதங்க்ரிராஜீவ ரஜ;கணானாம்
பூயான் பிரசாத:மயி நாத பூயா:
நாத- பிரபுவே
விலுப்த மூர்த்தன்ய லிபிக்ரமாணாம், தலைஎழுத்தை அழிக்க வல்லதும்,
ஸுரேந்த்ர சூடாபதலாலிதானாம்- இந்திரன் முதலியவர்கலின் கிரீடங்களில் படிந்து போற்றப் படுவதும் ஆன
த்வதங்க்ரிராஜீவ ரஜ;கணானாம்-உந்தன் பாதமாகிய தாமரையின் தூசித்துகள்கள்
மயி – என்னிடத்தில்
பூயான் பிரசாத:- மிகுதியான திருவருளை
பூயா:- செய்யட்டும்.
. இந்திரன் முதலானவர்கள் தலையால் தாங்கும்ஹயக்ரீவரின் பாததூசிகள் வணங்குவோரின் விதியை மாற்றி அமைக்க வல்லன. அதனால் போன ஸ்லோகத்தில் கூறியபடி மோக்ஷத்தை அளிக்க வல்லன.
ஹயக்ரீவஸ்தோத்ரம்
21. பரிஸ்புரன் நூபுரசித்ரபானு ப்ரகாசநிர்தூத தமோனுஷங்காம்
பிரபோதராஜீவவிபாதஸந்த்யாம் பததவ்யீம் தே பரிசின்மஹே அந்த:
பரிஸ்புரன் –ஒளிர்கின்ற
நூபுரசித்ரபானு- சதங்கையாகிய சூரியனின்
ப்ரகாசநிர்தூத-பிரகாசத்தினால்
தமோனுஷங்காம் - அறியாமை என்ற இருட்டை ஒழிக்கிறதாய்
பிரபோதராஜீவ- ஞானமாகிய தாமரைக்கு
விபாதஸந்த்யாம்- காலை வேளையைப் போன்றதுமான
பததவ்யீம் தே- உன்னுடைய இருபதங்களை
பரிசின்மஹே அந்த: -மனதினுள் இடைவிடாது த்யானிக்கின்றோம்.
இந்த ஸ்லோகத்தில் தேசிகரின் கவித்வம் மிளிர்கிறது. ஹயக்ரீவரின் பாத அணியானது சூரியனைப்போல் பிரகாசம் கொண்டிருப்பதால் அறியாமையாகிய இருள் அகன்று ஞானமாகிய தாமரை மலர்கிறது. சந்த்யா என்ற சொல் சாயங்காலத்தையும் குறிப்பதால் விபாத சந்த்யா அதாவது சூர்யோதய வேளை என்று கூறப்படுகிறது. விபாதம் என்றால் ப்ரபாதம் அதாவது விடியற்காலம்.,
ஞானம் வருவதுதான் சூர்யோதயம் அதுவரை அறியாமையில் இருப்பதால் அது இரவாகும்.
ஞானேன து ததஞ்ஞானம் யேஷாம் நாசிதம்ம் ஆத்மன:
தேஷாம் ஆதித்யவத் ஞானம் பிரகாசயதி தத்பரம்.(ப.கீ. 5.16)
.இதன் பொருள் : ஞானம் நமது இயற்கையான நிலை. இதை அறியாமை என்னும் இருள் மறைத்துக்கொண்டிருக்கிறது. அது ஞானத்தினால் அகலுமானால் உள்ளே இருக்கும் ஞானம் மேகம் விலகின சூரியனைப்போல் தானே பிரகாசிக்கிறது.
.
22. மஞ்சுப்ரணாதம் மணிநூபுரம்தே த்வத்கிங்கராலங்கரணோசிதானாம்
த்வயைவ கல்பாந்தரபாலிதானாம் மஞ்சூஷிகாம் வேதகிராம் பிரதீம:
இது இன்னொரு அழகான உருவகம்.
மஞ்சுப்ரணாதம்- இனிமையாக சப்திப்பதும்
த்வத்கிங்கராலங்கரணோசிதானாம்- உன்னடியார்களின் சிறந்த தலை ஆபரணமாகவும் உள்ள
மணிநூபுராணாம்- இரத்தின மயமான நூபுரங்களை
த்வயா ஏவ- உன்னாலேயே
கல்பாந்தர பாலிதானாம் – கல்பகாலங்களாக பாதுகாக்கப்பட்ட
வேதகிராம் – வேதங்களின்
மஞ்ஜூஷிகாம் – பொக்கிஷப் பெட்டியாக
பிரதீம: - கருதுகிறோம்.
ஹயக்ரீவர் வேதச்வரூப்ம் ஆகையால் அவருடைய நூபுரங்களின் சப்தம் வேத சப்தமே. கல்பகாலங்களாக பாதுகாத்து வேதங்களை ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மாவுக்கு உபதேசிக்கிறார். அதனால் அவருடைய நூபுரங்கள் வேதங்களை பத்திரமாக வைத்திருக்கும் பெட்டியாகக் கருதப்படுகிறது.
ஹயக்ரீவஸ்தோத்திரம்
23. ஸம்சிந்தயாமி பிரதிபா தசாஸ்தான்
ஸம்துக்ஷயந்தம் ஸமயப்ரதீபான்
விஞ்ஞானகல்பத்ருமபல்லவாபம்
வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே
பிரதிபா – ஞானமாகிய
தசாஸ்தான் – திரியைக்கொண்ட
ஸமயப்ரதீபான் –ஸித்தாந்த தீபங்களை
ஸம்துக்ஷயந்தம் – தூண்டிவிடுகிற
விஞ்ஞானகல்பத்ருமபல்லவாபம்- ஞான உருவாகிய உன் வடிவென்னும் கற்பக மரத்தின் தளிர்கள் போன்ற
வ்ய்க்யான முத்ரா- ஞானமுத்திரையைக் காட்டும்
மதுரம் கரம் – அழகிய வலக்கரத்தை
ஸம்சிந்தயாமி – நன்கு த்யானிக்கிறேன்
இதுவும் அடுத்த இரண்டு ஸ்லோகங்களும் ஹயக்ரீவரின் கரங்களை வர்ணிக்கின்றன.
சித்தாந்தங்கள் வேதாந்த உண்மைகளைக் கூறும் உபநிடதங்கள் எனக் கொள்ளலாம். அவை அஞ்ஞான இருளைப் போக்குவதால் தீபங்களாக உருவகப்படுத்தப் படுகின்றன. அவைகளை அறியும் அறிவே அந்த தீபத்தின் திரியாகும்.அதைத் தூண்டிவிடுவது அதாவது நமக்கு அந்த அறிவைக் கொடுப்பது பகவானின் அருள். அதுதான் ஞானமுத்திரை.
24. சித்தே கரோமி ஸ்புரிதாக்ஷ மாலாம்
ஸவ்யேதரம் நாத கரம் த்விதீயம்
ஞானாம்ருதோதஞ்சன லம்படானாம்
லீலாகடீயந்த்ரம் இவ ஆஸ்ரிதாநாம்
நாத- பிரபோ
ஸ்புரிதாக்ஷமாலாம் – ஜபமாலையுடன் விளங்குவதாய்
ஞானாம்ருதோதஞ்சன லம்படானாம்- ஞானமாகிய அம்ருதத்தை எடுக்க விரும்பும்
ஆஸ்ரிதாநாம்-உன் அன்பர்களுக்கு
த்விதீயம் லீலாகடீயந்த்ரம் இவ –இன்னொரு ஏற்றம் இறைக்கும் யந்திரம் போல் விளங்கும்
ஸவ்யேதரம் கரம் –வலது கரத்தை
சித்தே கரோமி- மனதில் த்யானிக்கிறேன்.
யோகமுத்திரையைக் காட்டும் ஹயக்ரீவரின் வலது கரம் ஜபமாலையையும் தாங்கியுள்ளது. அது மேலும் கீழும் போவதால் ஞானம் என்ற அம்ருதத்தை விரும்பும் அடியார்களுக்கு அதை எடுத்துக் கொடுக்கும் (கிணற்றில் இருந்து நீர் எடுக்க உபயோகிக்கும்) ஏற்றம் இறைக்கும் இயந்திரத்திற்கு ஒப்பிடப்படுகிறது.
ஸவ்ய என்றால் இடது ஸவ்யேதரம் கரம் என்றால் இடது அல்லாத அதாவது வலது கரம்.
25. ப்ரபோதஸிந்தோ: அருணை: பிரகாசை:
ப்ரவால ஸங்காதம் இவ உத்வஹந்தம்
விபாவயே தேவ ஸபுஸ்தகம் தே
வாமம் கரம் தக்ஷிணம் ஆஸ்ரிதானாம்
தேவ-பெருமானே
அருணை: பிரகாசை: - சிவந்த ஒளியால்
ப்ரபோத ஸிந்தோ: -ஞானக்கடலில் இருந்து
ப்ரவாள ஸங்காதம் – பவளக்குவியலை
உத்வஹந்தம் இவ– எடுப்பது போன்று தோன்றுவதும்
ஸபுஸ்தகம் – புத்தகத்துடன் கூடியதும்
ஆஸ்ரிதானாம் – அடியவர்களுக்கு
தக்ஷிணம்- அருள வல்லமை உள்ளதுமான
தே வாமம் கரம் – உன் இடது கரத்தை
விபாவயே –காண்கிறேன்
தேசிகர் ஹயக்ரீவரை பிரத்யக்ஷமாகக் கண்டு இயற்றிய ஸ்தோத்திரம் ஆதலால் நேரில் கண்டபடி வர்ணிக்கிறார். ஹயக்ரீவரின் இடது கரம் புத்தகத்தைக் (புத்தகம் வேத வித்யாஸ்வரூபம்) கொண்டிருக்கிறது. அந்த கரம் சிவந்து இருப்பதால் பவளத்திற்கு ஒப்பிடுகிறார். அந்தப் பவளம் இருந்தது ஞானமாகிய சமுத்திரம். அதை எடுத்து அடியார்க்கு அருளும் கரம் இடதுகரம்.
இங்கு தக்ஷிணம் என்ற சொல் கவி சாதுர்யத்தைக் குறிக்கிறது. தக்ஷிணம் என்றால் வலது கரம் வாமம் என்றால் இடது. இங்கு இடது கரத்தை வர்ணிக்கையில் தக்ஷிணம் என்ற சொல் வல்லமை என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது,.
ஹய்க்ரீவ ஸ்தோத்ரம்
.26.தமாம்ஸி பித்வா விசதை: மயூகை:
ஸம்ப்ரீணயந்தம் விதுஷ: சகோரான்
நிசாமயே த்வாம் நவபுண்டரீகே
சரத்கனம் சந்த்ரம் இவ ஸ்புரந்தம்
விசதை: - வெண்மையான
மயூகை: -கிரணங்களால்
தமாம்ஸி- ( அறியாமையாகிய ) இருளைப் பிளக்கின்றவரும்
விதுஷஸ்சகோரான்- அறிஞர்களாகிய சகோரபட்சிகளை
ஸம்ப்ரீணயந்தம் – இன்புறச்செய்ககின்றவரும்
சரதகனம்- சரத் கால மேகத்தில்
சந்த்ரம் இவ- சந்திரனைப்போல
நவபுண்டரீகே – புதிய வெண் தாமரையில்
ஸ்புரந்தம்- ஒளிர்கின்றவரும் ஆன
த்வாம்- உங்களை
நிசாமயே- தியானிக்கிறேன்.
தேசிகர் ஹயக்ரீவரை வெண்தாமரையில் வீற்றிருப்பவராக தியானிக்கிறார். அவருடைய உருவமும் வெண்மைஆனதால் சரத் கால மேகத்தில் தோன்றும் சந்திரன் போல் உள்ளது.
சரத்கால மேகம் மழைக் காலத்திற்குப்பிறகு நீரின்மையால் வெண்மையாக இருக்கும். சந்திரன் அதைவிட வெண்மை ஆனதால் மேகத்தினிடை பிரகாசிக்கிறது. அது போல வெண் தாமரை மீது ஹயக்ரீவரின் உருவம் பிரகாசிக்கிறது.
அவருடைய உருவத்தில் இருந்து வரும் வெண்மையான கிரணங்கள் அறியாமை என்னும் இருட்டைப் போக்குகின்றன. சகோர பட்சிகள் சந்திரநின் கிரணங்களைப் பருகி இன்புறுவது போல் அறிஞர்கள் ஹயக்ரீவருடைய அருளமுதைப் பருகி இன்புறுகின்றனர்.
சகோர பக்ஷி என்பது புராணங்களிலும் காவியங்களிலும் கூறப்படும் ஒருவகை பக்ஷி. அது சந்திரன் கிரணத்தை மட்டுமே உண்ணும். அதுபோல அறிஞர்கள் ஹயக்ரீவரின் அருளை மட்டுமே விரும்புவர். அவரை துதிப்பதால் அறியாமை என்னும் இருட்டு விலகி ஞானம் பிறக்கிறது.
இதில் ஹயக்ரீஅவரின் முழு உருவம் வெண் தாமரையின் மீது தியானிக்கப்ப்படுகிறது. அவருடைய நிறம் பளிங்கு போல சுத்த சத்வத்தினால் ஒளிவிடுகிறது.
ஹய்க்ரீவ ஸ்தோத்ரம்
.26.தமாம்ஸி பித்வா விசதை: மயூகை:
ஸம்ப்ரீணயந்தம் விதுஷ: சகோரான்
நிசாமயே த்வாம் நவபுண்டரீகே
சரத்கனம் சந்த்ரம் இவ ஸ்புரந்தம்
விசதை: - வெண்மையான
மயூகை: -கிரணங்களால்
தமாம்ஸி- ( அறியாமையாகிய ) இருளைப் பிளக்கின்றவரும்
விதுஷஸ்சகோரான்- அறிஞர்களாகிய சகோரபட்சிகளை
ஸம்ப்ரீணயந்தம் – இன்புறச்செய்ககின்றவரும்
சரதகனம்- சரத் கால மேகத்தில்
சந்த்ரம் இவ- சந்திரனைப்போல
நவபுண்டரீகே – புதிய வெண் தாமரையில்
ஸ்புரந்தம்- ஒளிர்கின்றவரும் ஆன
த்வாம்- உங்களை
நிசாமயே- தியானிக்கிறேன்.
தேசிகர் ஹயக்ரீவரை வெண்தாமரையில் வீற்றிருப்பவராக தியானிக்கிறார். அவருடைய உருவமும் வெண்மைஆனதால் சரத் கால மேகத்தில் தோன்றும் சந்திரன் போல் உள்ளது.
சரத்கால மேகம் மழைக் காலத்திற்குப்பிறகு நீரின்மையால் வெண்மையாக இருக்கும். சந்திரன் அதைவிட வெண்மை ஆனதால் மேகத்தினிடை பிரகாசிக்கிறது. அது போல வெண் தாமரை மீது ஹயக்ரீவரின் உருவம் பிரகாசிக்கிறது.
அவருடைய உருவத்தில் இருந்து வரும் வெண்மையான கிரணங்கள் அறியாமை என்னும் இருட்டைப் போக்குகின்றன. சகோர பட்சிகள் சந்திரநின் கிரணங்களைப் பருகி இன்புறுவது போல் அறிஞர்கள் ஹயக்ரீவருடைய அருளமுதைப் பருகி இன்புறுகின்றனர்.
சகோர பக்ஷி என்பது புராணங்களிலும் காவியங்களிலும் கூறப்படும் ஒருவகை பக்ஷி. அது சந்திரன் கிரணத்தை மட்டுமே உண்ணும். அதுபோல அறிஞர்கள் ஹயக்ரீவரின் அருளை மட்டுமே விரும்புவர். அவரை துதிப்பதால் அறியாமை என்னும் இருட்டு விலகி ஞானம் பிறக்கிறது.
இதில் ஹயக்ரீஅவரின் முழு உருவம் வெண் தாமரையின் மீது தியானிக்கப்ப்படுகிறது. அவருடைய நிறம் பளிங்கு போல சுத்த சத்வத்தினால் ஒளிவிடுகிறது.
27.திசந்து மே தேவ ஸதா த்வதீயா: தயாதரங்கானுசரா: கடாக்ஷா:
ச்ரோத்ரேஷு பும்ஸாம் அம்ருதம் க்ஷரந்தீம்
ஸரஸ்வதீம் ஸம்ச்ரிதகாமதேனும்
தேவ – பிரபுவே
தயாதரங்கானுசரா: - உங்கள் தயை என்னும் அலைகளை பின்பற்றுபவையாக
த்வதீயா:- உங்களுடைய
கடாக்ஷா: - பார்வைகள்
பும்ஸாம் ச்ரோத்ரேஷு- மனிதர்களின் செவிகளில்
அம்ருதம் க்ஷரந்தீம் – அம்ருதத்தைப் பொழிவதாய்
ஸம்ஸ்ரிதகாமதேனும் – அடியவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதாயும் உள்ள
ஸரஸ்வதீம்-வாக்கை
மே- எனக்கு
திசந்து- அளிக்கட்டும்.
ஹயக்ரீவருடைய தயை என்னும் அலைகள் அவர் கடாக்ஷம் விழுவதன் முன்னேயே பக்தர்களை சென்றடைந்து விடுகிறதாம். அவருடைய வாத்சல்யமானது சங்கல்ப மாத்திரத்திலேயே அவர் கண்களால் பார்க்கக்கூட தேவையில்லாமல் அருள் பாலிக்கிறது. அது காமதேனுவைப்போல் வாக்கு வன்மையைத் தருகிறது. அப்படிப்பட்ட வாக்கானது கேட்பவர் காதில் அமுதமெனப் பாய்ந்து அவர்கள் அபிலாஷையைப் பூர்த்தி செய்கிறது.
28. விசேஷவித் பாரிஷதேஷு நாத
விதகத கோஷ்டீ ஸமராங்கணேஷு
ஜிகீஷதோ மே கவிதார்க்கிகேந்த்ரான்
ஜிஹ்வாக்ர ஸிம்ஹாசனம் அப்யுபேயா:
நாதா- ஸ்வாமி
விசேஷவித்- விசேஷாம்சங்களை அறிந்தவர்களை
பாரிஷதேஷு- மத்யஸ்தர்களாகக்கொண்ட
விதக்த கோஷ்டீ-நிபுணர் குழுவின்
ஸமராங்கணேஷு- வாத பிரதிவாதமாகிய போரில்
கவிதார்க்கிகேந்த்ரான்- கவிகளிலும் தர்க்கம் செய்பவர்களிலும் சிறந்தவர்களை
ஜிகீஷத: - வெற்றி கொள்ள விரும்பும்
மே- என்னுடைய
ஜிஹ்வாக்ர – நாவின் நுனியாகிய
ஸிம்ஹாசனம் – சிம்மாசனத்தில்
அப்யுபேயா: - அமர்ந்தருள வேண்டும்.
ஹயக்ரீவர் தேசிகரின் முன் பிரத்யக்ஷமான சமயத்தில் அவர் இந்த ஸ்துதியை செய்தார். அதனால் அவருக்கு ஹயக்ரீவரின் அருள் பூரணமாக் கிடைத்து கவிதார்க்கிக கேசரி, வேதாந்தாச்சார்யர் என்ற பெருமை பெற்றார். அதனால் இந்த இரண்டு ஸ்லோகமும் வாக்கு வன்மை பெற விரும்புவோர் கூறவேண்டியதாகும்.,
ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம்3 அத்தியாயம் 33
இவ்விதம் கபிலருடைய உபதேசத்தைக் கேட்ட தேவஹுதி அஞ்ஞானம் நீங்கியவளாய் கபிலரைத் துதித்தாள்.
" தங்கள் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மாவாலும் பார்க்கப்படாத சிருஷ்டியின் முதல் காரணமாகிய தாங்கள் சகல உலகத்தையும் தன் உந்தியுள் வைத்தவர். அப்படிப்பட்டவர் என் வயிற்றில் எவ்விதம் தோன்றினீர் என்பது ஆச்சரியம்.
ஆனாலும் ஒரு சிறு குழந்தை வடிவில் ஆலிலை மீது இந்த பிரபஞ்சங்களை வயிற்றில் அடக்கி கால் கட்டைவிரலை வாயில் வைத்துத் தோன்றின மாயத்தின் முன் இது ஒன்றுமேயில்லை அல்லவா?
துஷ்டநிக்ர்ஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றிற்காக வராஹரூபம் போன்ற பல சரீரங்களை எடுத்துக்கொள்கிறீர்களே அது போன்ற இதுவும் ஒன்று என்று அறிகிறேன்.எவருடைய நாமஸ்மரணம், கதாஸ்ரவணம், முதலியவற்றாலும், சாஷ்டாங்கமாக வணங்குவதாலும், ஒருமுறையாவது தியானிப்பதாலும் சண்டாளனும் பூஜிக்கத்தகுந்தவன் ஆகிறானோ அவரை நேரில் காணும் பாக்கியம் ஏற்பட்டால் அதன் மகிமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!
நான் வேதங்களின் சாரமானவரும், பரப்ரம்மமும், பரமபுருஷனும், ஒருமுகப்பட்ட மனதால் தியானிக்கத் தகுந்தவரும், கபிலராக வந்த விஷ்ணுவும் ஆன தங்களை வணங்குகிறேன்."
கபிலர் கூறினார்.
"தாயே நான் கூறிய இந்த மார்க்கம் அனுஷ்டிப்பதற்கு எளியது. அதில் நிலை பெற்று சீக்கிரமே நீ முக்திநிலை அடையப் போகிறாய். "
மைத்ரேயர் கூறினார்.
இவாறு தேவஹூதிக்கு ஆத்மா மார்க்கத்தைக் காட்டிவிட்டு கபிலர் அவள் அனுமதி பெற்று அவ்விடம் நீங்கினார். தேவஹூதியும் அவரால் உபதேசிக்கப்பட்ட யோகத்தை அனுசரித்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்த அந்த ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஆழ்ந்தாள்.
முதலில் கணவனைப் பிரிந்து புத்திரனால் மனம் தேறியிருந்த தேவஹூதி புத்திரனும் சென்றபின் சிலகாலம் வ்யாகுலத்தில் ஆழ்ந்தாலும் நாளடைவில் மனம் தேறி ஜீவபாவம் நீங்கி க்லேசங்களில் இருந்து விடுபட்டு பரமானந்த நிலை எய்தினாள். இவ்வாறு நாளடைவில் நிரந்தர சமாதியில் நிலைத்து பகவானுடைய பாதத்தை அடைந்தாள்.
அவள் எந்த இடத்தில் சித்தி அடைந்தாளோ அது சித்திபதம் என்ற பெயருடன் ஒரு புண்யக்ஷேத்திரமாயிற்று.
கபிலர் தாயிடம் இருந்து அனுமதி பெற்று வடகிழக்கு திசை நோக்கிச்சென்றார். சித்தர் சாரணர் கந்தர்வர் முனிவர்கள் அப்சர கணங்கள் முதலியவர்களால் துதிக்கப்பட்டு சமுத்ரராஜனால் இடமளிக்கப்பெற்று மூவுலகையும் காப்பதற்காக இன்னும் யோகநிஷ்டையில் இருக்கிறார்.
எவன் ஆத்மயோகமாகிய இந்த கபிலோபதேசத்தை ச்ரத்தையுடன் கேட்கின்றானோ அல்லது பிறருக்கு அன்புடன் கூறுகின்றானோ அவன் பகவானிடம் நிலைத்த புத்தியுள்ளவனாக ஆகி பகவானை அடைகிறான் என்று கூறி மைத்ரேயர் கபிலாவதாரத்தை முடிக்கிறார்.
ராமாயணத்தில் ஸகரனுடைய குமாரர்கள் யாகக்குதிரையைத் தேடி பாதாளத்திற்கு வந்த போது அங்கு கபிலர் அருகில் அதைக் கண்டு கபிலரைத் திருடன் என்றெண்ணி அவமதித்து அவர் சாபத்திற்காளாகி சாம்பலானார்கள். பின்னர் ஸகரனின் பேரனான அம்சுமான் அங்கு வந்து அவரை வணங்கி தன் பித்ருக்களுக்கு நற்கதி கிடைக்குமாறு செய்கிறான்.
ஹயக்ரீவஸ்தோத்ரம்
31. அகம்பநீயானி அபநீதிபேதை:
அலங்க்ருஷீரன் ஹ்ருதயம் மதீயம்
சங்காகளங்காபகமோஜ்வலானி
தத்வானி ஸம்யஞ்சி தவபிரஸாதாத்
தவப்ரஸாதாத் –உன் கிருபையினால்
அபநீதிபேதை: - தவறான வாதங்களால்
அகம்பநீயானி- அசைக்க முடியாததும்
சங்காகளங்காபகமோஜ்வலானி- எல்லா சந்தேகங்களையும் போக்கி சுடர் விடும்
தத்வானி- உண்மைகள்
ஹ்ருதயம் மதீயம் – என் மனதை
ஸம்யஞ்சி- நன்றாக
அலம்க்ருஷீரன்- அலங்கரிக்கட்டும்
ஹயக்ரீவர் அருளால் ஞானம் ஹ்ருதயத்தில் தோன்றினால் அது எந்த வித வாதத்தினாலும் சந்தேகங்களாலும் அசைக்க முடியாததாக இருக்கும்.
தேசிகர் ஆரம்பத்தில் ஹயக்ரீவரை பிரம்மஸ்வரூபமாக வர்ணித்தார். அதை இங்கு வலியுறுத்துகிறார். பிரம்மசாக்ஷாத்காரமே மனதில் ஹயக்ரீவரின் தோற்றம். அப்போது,
பித்யதே ஹ்ருதயக்ரந்தி: சித்யந்தே சர்வ சம்சயா:
க்ஷீயந்தே அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே
என்ற உபநிஷத் வாக்கியத்தின்படி பிரம்ம சாக்ஷாத்காரம் ஏற்படும்போது ஹ்ருதயத்தில் ஏற்பட்ட முடிச்சுகள் அறுபடுகின்றன. எல்லா சந்தேகங்களும் அழிந்துவிடுகின்றன. கர்மவினை ஓய்ந்து விடுகிறது.
அக்ஞானத்தினால் கரம வினை., அதனால் அறிவு தடைப்படுகிறது. இதுதான் மனதில் உள்ள முடிச்சுகள். அதனால் உண்மை எதுவென்று அறியாததனால் ஏகப்பட்ட சந்தேகங்கள் . பிரம்ம ஞானம் வரும்போது எல்லாம் தெளிவாகிறது.
32. வ்யாக்யாமுத்ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் சங்க சக்ரே
பிப்ரத் பின்னஸ்படிகருசிரே புண்டரீகே நிஷண்ண:
அம்லானஸ்ரீ: அம்ருதவிசதை: அம்சுபி: ப்லாவயன் மாம்
ஆவிர்பூயாத் அனகமஹிமா மானசே வாகதீச:
கரஸரஸிஜை:- தாமரைக்கரங்களில்
வ்யாக்யாமுத்ராம்- ஞானமுத்திரை
புஸ்தகம்- புத்தகம்
சங்கச்சக்ரே- சங்கு சக்கரம் இவைகளை
பிப்ரத்- தாங்கியவரும்
பின்னஸ்படிகருசிரே- பிளந்த படிகம் போன்ற
ருசிரே- அழகிய
புண்டரீகே – வெண் தாமரையில்
நிஷண்ண: - அமர்ந்திருப்பவரும்
அம்லானஸ்ரீ: - குன்றாத ஒளியுடன்
அனகமஹிமா- எல்லையற்ற மகிமை கொண்டவரும் ஆன
வாகதீச: - ஹயக்ரீவர்
மானசே- என் மனதில்
அம்ருதவிசதை: - அம்ருதம் போன்ற
அம்சுபி: - கிரணங்களால்
மாம்- என்னை
ஆப்லாவயன்- மூழ்கடித்துக்கொண்டு
ஆவிர்பூயாத்- தோன்றட்டும்.
இவ்வாறு தேசிகர் ஹயக்ரீவ ஸ்துதியை ஸ்ரீ ஹயக்ரீவரின் அழகிய தோற்றத்தை வர்ணிப்பதன்மூலம் நம் மனதில் அவர் உருவத்தை ஸ்மரிக்கச் செய்து நிறைவு செய்கிறார்.
.
33. வாகர்த்தஸித்திஹேதோ: படத ஹயக்ரீவஸம்ஸ்துதிம் பக்த்யா
கவிதார்கிக கேஸரிணா வேங்கடநாதேன விரசிதாம் ஏதாம்
கவிதார்கிக கேஸரிணா – கவிகளுக்கும் தர்க்க நிபுணர்களுக்கும் சிம்ஹம் போன்ற
வேங்கடநாதேன – வேதாந்த தேசிகரால்
விரசிதாம்- இயற்றப்பட்ட
ஏதாம்- இந்த
ஹயக்ரீவஸம்ஸ்துதிம்- ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை
வாகர்த்தஸித்திஹேதோ:-- பொருட்செறிவான வாக்குவன்மையைப் பெற
பக்த்யா- பக்தியுடன்
படத- படியுங்கள்.
No comments:
Post a Comment