ஆன்மீக வாழ்வில் ஒருவருக்கு குரு கிடைப்பது என்பது மிக மிகக் கடினம். குரு கிடைக்கப் பெற சில சமயங்களில் பல பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும். இப்பிறவியில் குரு கிடைக்கப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள் !
குருவை நாம் தேர்ந்தெடுக்க இயலாது. குருவானவர், முந்தையில் நாம் இறைவனிடம் பக்தி செலுத்தி வந்துள்ள விதத்தையும், செய்த நல் வினையின் தன்மையையும் கொண்டே நம்மை தேர்ந்தெடுக்கிறார் !
ஒருவன் பாடப் புத்தகங்களை ஆசிரியர் இல்லாமல், தன் மனம் போன போக்கில் மனப்பாடம் செய்து படித்து வருவதற்கும், நல் ஆசிரியர் துணையோடு பாடப் புத்தகங்களிலுள்ள பொருளை அறிந்து, படித்து வருவதற்கும் உள்ள வித்தியாசத்தில், குரு கிடைத்தலின் மகிமையை அறிந்துக் கொள்ளலாம் !
பழமையில் நாம் இறைவனை நினைத்து வேண்டிய பலனாய், இறைவனே இம்மையில் குருவாய் வந்து ஆட்கொண்டு நல்வழி நடத்துகிறார் !
குருவுக்கு குரு, அந்த குருவுக்கு குரு என்ற எண்ணிக்கையின் முடிவில் ஆதி குருவான ஈசனே அனைத்துமாயிருக்கிறார் என்பதே உண்மை !
குருவானவர், ஒருவரை குழந்தைப் பருவம், இளம் பருவம், முதிய பருவம் மற்றும் மூச்சடங்கும் நேரத்திலும் கூட ஆட்கொள்வார். குரு இம்மையிலும் கிடைக்கலாம். மறுமையிலும் கிடைக்கலாம். அது அவரவர் கர்ம வினையைப் பொறுத்தது !
மலரைப் பார்த்து, அதனருகில் சென்று அதன் வாசனையை நுகர்ந்தறிவதற்கும், மலரைப் பார்க்காமலேயே, காற்றினில் மிதந்து வரும் அதன் வாசனையை நுகர்ந்தறிவது எவ்விதத்திலும் தாழ்வில்லை ! மேன்மை வாய்ந்ததே !
ஒருவரின் முகமறிந்து புரியும் காதலை விட, முகமறியா புரியும் காதலின் ஆழம் மிகுதியே !
அதைப் போன்றே, இம்மையில் சுவாமியை குருவாக கிடைக்கப் பெற்றவர்கள். அவர் போர்த்திய பூதவுடலை பார்த்து, அவரின் அற்புதத்தை அறிந்து, வியந்து, அவரிடம் பக்தி செலுத்தி வந்த விதத்திற்கும், யோகியின் பூதவுடலைப் பார்க்காமலேயே, அவரின் நாமம் கொண்டு, சுவாமியை சூக்கும வடிவில் உணர்ந்து, பக்தி செலுத்தி வருவது எவ்விதத்திலும் சளைத்ததல்ல ! மேன்மை வாய்ந்ததே !
சுவாமியைப் பற்றி செவியில் கேட்டு, நூலில் எழுதியதை கண்களில் படித்து, சுவாமியை நன்கு உள்வாங்கி மனத்தில் நிறுத்தி, அவரின் நாமம் பிறராலறிந்து, அவரிடம் நாமம் கொண்டு பக்தி செலுத்தி வருவது, சுவாமியால், நம்மை ஆட்கொள்ள நடத்தப்படும் தேர்வேயாகும் !
சுவாமியே, பிறரின் வழியாய், குருவாய் நம்மை ஆட்கொள்ளுகிறார் ! இந்நிகழ்வு என்றோ, சுவாமியால் ஆசீர்வதிக்கப்பட்டதே !
இப்பிரபஞ்சத்தில், எவ்வினையும் தூண்டுதலில்லாமல் நடைபெற இயலாது ! சுவாமி குருவாய் ஆட்கொள்ள சிலரை தூண்டுதலாய் பயன்படுத்திக் கொள்ளும் விதமே தனி !
சுவாமியின் அடியராக, நாம் தேர்வு செய்யப்பட்டுவிட்டோமென்றால், இனி நமக்கும், நம் குடும்பத்திற்கும் அவரே கவசமாகி காத்து, நல்வழி நடத்தி சென்றுக் கொண்டேயிருப்பார் ! அவரின் நாமமே அதை திறம்படச் செய்யும் என்பதில் ஐயமேதில்லை !
ஒரு சொட்டு தயிர் கலந்த பால் தயிரானவுடன், மீண்டும் எவ்வாறு பாலாக முடியாதோ, அது போலவே குருவிடம் சென்று ஞானத் தெளிவடைந்தவர், மீண்டும் அஞ்ஞானத்திற்கு செல்ல இயலாது !
அதைப் போன்றே, சுவாமியை குருவாகக் கிடைக்கப் பெற்றவர்கள். சுவாமி சமைத்து தந்த நாமமுதத்தை பருகி, அதன் ருசியால் சுகம் கண்டவர்கள். எந்நாளும் அச்சுகத்தை விட்டகல இயலாது ! மீண்டும் மீண்டும் அந்நாமமுதத்தை பருகி, அந்த ருசியை அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் !
சுவாமியின் நாமத்தில், இப்பிரபஞ்சத்தை இயக்கும் மகா சக்தி அடங்கியுள்ளது. அந்த உயர் நாமத்தை, நாம் அதிகளவில் சொல்லச் சொல்ல, இப்பிரபஞ்சத்தை செம்மையாக நடத்தி, அனைத்து ஜீவராசிகளையும் மேன்மையடைய செய்து, பரமாத்மாவில் கலந்திட செய்ய முக்தியளிப்பார், ஜீவன் முக்தனான நம் சுவாமி !
"இந்தப் பிச்சைக்காரனின் நாமம் ஒவ்வொன்றும், அதைச் சொல்பவர் மட்டுமன்றி, இந்தப் பிச்சைக்காரன், இவன் தந்தையின் பணி, ஏன் இந்த உலகம் முழுவதற்குமே உதவும்" என்ற சுவாமியின் அருள்மொழியை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டு, நாம் ஆன்மீக வாழ்வில் உய்ய, அவரருளால், அவரின் தாள் பணிந்து "யோகி ராம்சுரத்குமார்" எனும் உயர் நாமத்தை கிடைக்கும் நேரங்களிலெல்லாம் உச்சரித்துக் கொண்டேயிருப்போம் ! அவரருளால் நலம் பெறுவோம் !
குருவே சரணம் ! குருவடி சரணம் !
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா !

No comments:
Post a Comment