வாழ்விலோர் திருநாள் J K SIVAN
பூரம் 27 நக்ஷத்ரங்களில் 11 வது. ஆடி மாதம் பூரம் விசேஷம் கொண்டது? எப்படி? அது தான் இந்த கட்டுரை.
வைணவத்தில் பன்னிரண்டு ஆழ்வார்களில் அவள் ஒருவள் மட்டுமே ஆழ்வாள் . அவள் பிறந்த நாள் இன்று. ஆடிப்பூரம். பிறந்தநாளா இல்லை மஹாலக்ஷ்மி தாய், பூலோகத்தில் சேயாக அவதரித்த சிறந்த நாளா? ரெண்டும் ஒன்றே. அவளைப்பற்றி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஊரும் உலகமும் அறிந்த ஆண்டாள் அவள். கற்றறிந்த வித்தகர்கள் கூடை கூடையாக அவளைப்பற்றி பேசுகிறார்கள். நான் தருவது ஒரு உத்ரணி துளசி ஜலம் தான்.
ஆழ்வார்களில் அவள் ஒருவள் அரங்கனோடு ஐக்கியமானவள். மற்றவர்கள் மனதளவில் உறவு கொண்ட வர்கள். அவள் இன்று தான் விஷ்ணு சித்தரால் வில்லிபுத்தூரில் அவரது நந்தவனத்தில் துளசி செடிகளின் இடையே கண்டெடுக்கப் பெற்றவள். அவளால் அவர் பெரியாழ்வார் ஆனார். அவரது செல்லப்பெண். முப்பது பாடல்களேயானாலும் அவளது திருப்பாவை சைவ வைணவர்கள் அனை வராலும் மனப்பாடம் செய்யப்பட்டு ரசிக்கப் பட்டு எல்லா குழந்தைகளாலும் பாடப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களில் இடம் பெற்றது. . அவள் ஒருவளுக்கே எல்லா வைணவ ஆலயங்களிலும் பன்னிரு ஆழ்வார்களில் எவரும் பெறாத தனி சந்நிதி.
விஷ்ணு சித்தரைப் பொருத்தவரை அவரது ஒரே லட்சியம் தினந்தோறும் தனது பெரிய அகண்ட நந்த வனத்தில் துளசி மற்றும் அநேக நறுமண மலர்கள் பூத்துக்குலுங்க வேண்டும். அவற்றை மாலையாக தொடுத்து ரங்கமானாருக்கு சார்த்தவேண்டும். தினமும். அதற்காகத்தான் நிறைய துளசி செடிகள், மலர்க் கொடிகள் எல்லாம் வளர்த்தார். குழந்தை போல் வளர்த்த அந்த நந்த வனம் புஷ்ப வனமாக காட்சியளித்தது. அன்றாடம் விடிகாலை பரந்தாமனைப் பாடியவாறு பெரிய பூக்குடலை யோடு விஷ்ணுசித்தர் நந்தவனம் முழுதும் சுற்றி அந்த மலர்கள் கொடிகளோடு பாசத்தோடு பேசியவாறு துளசியையும், மற்ற பூக்களையும் பறித்து ஆஸ்ரமத்துக்கு கொண்டு வந்து தானே அவற்றை தொடுத்து மாலையாக்கி தனது கையாலேயே அழகிய மணவாளனுக்கு, ரங்க மன்னாருக்கு, வட பத்ர சாயீக்கு சூட்டி மகிழ்வார். விசிறுவார். அப்படி ஒருநாள் பூப்பறிக்கும் நேரத்தில் தான் கோதையை துளசிவனத்தில் காண நேர்ந்தது .
ஆண்டாளின் திருப்பாவை பரமனின் திருவடியை அடைய வைக்கும் வழிகாட்டி . திருப்பாவை சாமான்யமான ஒரு பாடல் புத்தகமல்ல. நான்கு வேதத்தையும் தன்னுள்ளே அடக்கிகே கொண்டிருக்கும் ஒரு அதிசய அபூர்வ நூல். .வேதத்தின் வித்து. அழகு தமிழில், எளிதில் கண்ணனைக் காட்டுவது.
'''தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசா வஸ்யாத்
கர்ணாம்ருதை : ஸ்துதி ஸதை: அநவாப்த பூர்வம்
த்வன் மௌலி கந்த சுபகாம்: உபஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதானுகுணாம் பிரசாதம்
"எண்ணற்ற நூற்றுக் கணக்கான பாசுரங்களை அரங்கனைப் போற்றி விஷ்ணு சித்தர் பாடியிருக்கலாம். இருந்து விட்டு போகட்டுமே. இதற்காக பகவான் மதுசூதனன் அவருக்கு எந்த பட்டமும் சிறப்பும் அளிக்க வில்லையே. அம்மா, கோதையே , சுடர்க்கொடியே, எப்போது நீ சூடிய மலர் மாலையை, உன் கூந்தல் சுகந்தத்துடன் விஷ்ணு சித்தர் அரங்கனுக்கு சூட்டினாரோ அக்கணமே அவர் அரங்கனைப் புகழ் பாடும் ஆழ்வார் களிலேயே ''பெரிய'' ஆழ்வார் என்ற பட்டம் பதவி பெற்றுவிட்டார். '' என்று அமைகிறது ஸ்ரீ தேசிகரின் மேற்கண்ட கோதாஸ்துதி ஸ்லோகம்.

ஒன்று நிச்சயம் ஸார் இந்த உலகத்திலேயே வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் ஏதாவது ஒரு மஹான், ஆச்சர்யம், பகவான் அம்ச அவதாரங்கள் சம்பந்தப்பட்டதாகவே அமைந்து இந்துக்களாகிய நம்மை மகிழ்விக்கிறது. மற்றெவர் இந்த பாக்யம் செய்தவர்?
No comments:
Post a Comment