Thursday, May 21, 2020

Divya padukas

அந்தர் ஜ்யோதி: கிமபியமிநாம்
அஞ்ஜநம் யோக த்ருஷ்டே:
சிந்தா ரத்நம் ஸூலப மிஹ ந:
ஸித்தி மோக்ஷாநுரூபம்|
தீநாநாத வ்யஸநசமநம்
தைவதம் தைவதானாம்
திவ்யம் சக்ஷூ: ச்ருதிபரிஷதாம்
த்ருச்யதே ரங்கமத்யே||
(ஸ்வாமி தேசிகன் -- ஶ்ரீபகவத் த்யான ஸோபாநம்) 

யோகிகளின் இதயத்தில் ப்ரகாசிக்கின்றதாய் ஞானக் கண்ணுக்கு மை போன்றதாய் இவ்வுலகில் நமக்கு எளியதான இம்மைப் போகங்கள்,மோக்ஷம் இவற்றைத் தரவல்ல சிந்தாமணி போன்றதாய் ,அசக்தர்களுடையவும் அநாதர்களுடையவும் , துன்பத்தை ஒழிப்பதாய் வேதராசிகளுக்கு தெய்விகக் கண்போன்றதாய் எல்லாத் தெய்வங்கட்கும் மேம்பட்ட தெய்வமாயள்ள ஒரு வஸ்து திருவரங்கத்தின் நடுவில் காணப்படுகின்றது.

இந்த மேம்பட்ட தம்முடைய அநுதின ஆராதன வஸ்து யாது என்பதை ஶ்ரீபாதுகா ஸஹச்ரத்தில் புக்ஷ்ப பத்ததியில் ஸாதிக்கின்றார்.

""தைவதம் மம ஜகத்த்ரயார்ச்சிதா
திவ்ய தம்பதி விஹாரபாதுகா|
பாணிபாத கமலார்ப்பணாத் தயோ:
யா பஜத்யநுதினம் ஸபாஜநம்..""

மூன்று லோகங்களாலே பூஜிக்கப்பட்டிருக்கிறதும் ,உயர்ந்தவர்களான பதிபத்னிகளுடைய வளையாட்டிற்காக இருக்கிறதுமான பாதுகையானது எனக்கு ஆராதிக்கத் தகுந்ததாயும், ,பலனைக் கொடுக்கக் கூடியதாயும் இருக்கிறது.

மேலே கூறிய வினாவுக்கு ஆச்சரியமாய் தனது நித்ய ஆராதனத் தெய்வம் ஶ்ரீரங்கநாத திவ்யமணி பாதுகைகளே என்று பதில் உரைத்தாரோ!!!👌👌👌👌

நித்யஶ்ரீ நித்ய மங்களம்

 கண்ணாய்க் கண்கள் இருந்தாலும் அவைகாண
ஒளியாய் இருப்வனே!
என்னால் 
என்னால் ஏதுமில்லை; எனதும்உன்கைப் பொருள்தானே!
அண்ணாந்து பார்க்க விண்ணாயும், அசித்துசித்துக் குள்ளாயும்,
மண்ணாரந்த யாவும்அவையாயும்
மாயமயக்கும் மாயவனே!

நின்னலால்
கண்டேன்
வேறில்லை;
நின்னையே
கொண்டேன்
வேறில்லை;
நினக்கேயன்றிச்
சரணில்லை;
நினதன்றியானும்
எனதில்லை!


🙏🙏

No comments:

Post a Comment