#சிந்தூர_திலகாஞ்சிதா
அம்பாளின் திருமுகத்தில் திலகம் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது. இளம் சிவப்பு வண்ணமான சிந்தூரத்தினால் ஒளி வீசப் பெற்று விளங்குகிறது. சூரியன் உதிக்கும் முன்பு அருணந்தான் முதலில் தோன்றுவான் அதுவும் இளம் சிவப்பாகத்தான் இருக்கும். அதே மாதிரி மாலை சூரியன் அஸ்தமிக்கும் போதும் இளம் சிகப்பு வண்ணமான சிந்தூர நிறம் தான்.
எப்படி சூரியன் எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் இளம் சிகப்பு நிறத்தில் ஒளிவிட்டு பிரகாசிக்கின்றதோ அது போல தான் தேவியும் சிந்தூர திலகத்துடன் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் பிரகாசிக்கிறாள். அபிராமி பட்டர் அந்தாதி முதல் பாடலில் "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்" என்று துவங்குகிறார்.
லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அம்பிகை சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள். #ரக்தவர்ணா தோற்றதிற்கான சிவந்த நிறம் கொண்டாள். ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில் "ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா". அம்பிகை இந்த உலகத்தின் மீது கொண்ட பெரும் கருணையினால் சிகப்பு வடிவம் கொண்டாள் என்கிறார். அபிராமி பட்டரும் அந்தாதியில் "சிந்தூர வர்ணத்தினாள்" என்று செந்தமிழால் வர்ணிக்கிறார்.
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
No comments:
Post a Comment