Thursday, February 13, 2020

Mukunda maalai part 35,36,37 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

முகுந்தமாலை

35.நமாமி நாராயண பதபங்கஜம் 
கரோமி நாராயண பூஜனம் ஸதா
வதாமி நாராயண நாமநிர்மலம் 
ஸ்மராமி நாராயணதத்வம் நிர்மலம்

ஸதா- எப்போதும், நாராயண பாதபங்கஜம் - நாராயணனின் திருவடித்தாமரையை, நமாமி – வணங்குகிறேன். நாராயண பூஜனம் கரோமி- நாராயணனை பூஜிக்கிறேன். நாராயண நாம நிர்மலம் – நாராயணனுடைய பாவனமான நாமத்தை வதாமி- கூறுகிறேன் அவ்யயம்- அழிவற்றதான நாராயணதத்வம் நாராயணன் என்னும் உண்மைப் பொருளை ஸ்மராமி – நினைக்கிறேன்.

காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் , கரோமி யத் யத் ஸகலம் பரஸ்மை நாராயணாய இதி ஸமர்ப்பயாமி. இதுதான் இந்த ஸ்லோகத்தின் கருத்து.

அவன் பாதங்களை வணங்குவது காயிகம். அவன் நாமத்தைக் கூறுவது வாக்கினால் செய்வது. அவனை பூஜிப்பது இந்த்ரியங்களால் செய்வது. நாராயணஸ்வரூபத்தின் உண்மையை நினைப்பது மனதினால் செய்ய கூடியது.

36.ஸ்ரீநாத நாராயண வாசுதேவ ஸ்ரீக்ருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே 
ஸ்ரீபத்மநாப அச்யுத கைடபாரே ஸ்ரீராம பத்மாக்ஷ ஹரே முராரே
37. அனந்த வைகுண்ட முகுந்த கிருஷ்ண 
கோவிந்தா தாமோதர மாதவேதி 
வக்தும் ஸமர்த்தோ அபி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜனானாம் வ்யஸனாபிமுக்யம்

ஸ்ரீநாத,) நாராயண, வாசுதேவ, ஸ்ரீக்ருஷ்ண, பக்தப்ரிய சக்ரபாணே 
ஸ்ரீபத்மநாப, அச்யுத கைடபாரே ஸ்ரீராம பத்மாக்ஷ ஹரே முராரே
அனந்த வைகுண்ட முகுந்த கிருஷ்ண 
கோவிந்தா தாமோதர மாதவ , 
இதி- இவ்விதம் 
வக்தும் ஸமர்த்த: அபி- சொல்லும் திறமை இருந்தும் 
ந வக்தி கஸ்சித்- யாரும் சொல்வதில்லை.
அஹோ – என்னே 
ஜனானாம் – ஜனங்களின் 
வ்யஸனாபிமுக்யம் – உலக துக்கங்களில் ஈடுபாடு!

நாமஸ்மரணம் செய்வது மிக எளிது. கலௌ நாமசங்கீர்த்தனம் என்கிறது பாகவதம். அதாவது கலியில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே போதும் என்று பொருள் . நாம் அது கூடச் செய்யாமல் உலகில் துக்கப்படுகிறோமே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

  


No comments:

Post a Comment