ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்ம பிரதட்சிணம் தானா?"
("அவன்...நந்தனார் பரம்பரை..."என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் பெரியவா.-இந்த நிகழ்ச்சியில் உடனிருந்த தொண்டர்கள் உருகிப் போய்விட்டார்களாம்.ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள் பார்வையில் அவன் பரமேசுவர பக்தன்; பின் வேறு என்ன தகுதி வேண்டும்?)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
..
கிராமதேவதை கோயிலுக்குப் போய்விட்டு, ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த இடத்துக்கு (அந்தணர் தெரு) வந்து கொண்டிருந்தார்கள் பெரியவாள், உடன் ஏழெட்டுப் பேர்கள் மட்டும் வந்தார்கள்.
வழியில் ஒரு வாய்க்கால் மதகு,இருபுறமும் இரண்டடி உயரத்துக்கு சிமெண்ட் சுவர், அவற்றில் ஒன்றில்,பரங்கிக்காய்,பூசணிக்காய்,தேங்காய்அவரைக்காய், இளநீர்,வேர்க்கடலை- எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.
கோயிலுக்குப் போகும்போது இல்லாத இந்தக் காய்கறிகள் இப்போது எப்படி வந்தன?" என்று எல்லோருக்கும் ஒரு சின்ன ஆச்சரியம்.
ஆனால், அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த மதகுச் சுவர் அருகில் பெரியவா சற்று நின்றார்கள்.
பதினைந்தடி தூரத்தில் அடக்க ஒடுக்கமாய், பக்திப் பரவசமாய்,கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு...ஒரு.. திருக்குலத்துத் திருத்தொண்டன்.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் கீழே உருளத் தயாராக இருந்தன.
பெரியவாள்,ஒரே இடத்தில் சிலை போல நிற்காமல்,இப்படியும் அப்படியுமாக நாற்புரமும் திரும்பியவாறே தொண்டர்களிடம் ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஆமாம் அந்த நேரத்துக்குச் சம்பந்தமில்லாத குழந்தைத்தனமான பேச்சுக்கள்.
இந்தப் பேச்சுக்கு இப்போது என்ன அவசியம்?
பின்னர், " இதெல்லாம் எதுக்காக இங்கே வெச்சிருக்கான்னு கேளு" என்றார்கள்.
கேட்டார், ஒரு சிஷ்யர்.
"சாமிக்குத்தான் வெச்சிருக்கேன்; எல்லாம் தோட்டத்திலே வெளைஞ்சது...சாமி கோயிலுக்குப் போறதைப் பார்த்தேன். இந்த வளியாகத்தானே திரும்பி வருவாங்கன்னு, ஓடிப்போயி வூட்லேந்து கொண்டாந்தேன்..நான் பாலு,தயிரு கொடுத்தா சாப்பிடமாட்டாங்களே...இதுகளை சாப்பிடுவாங்க இல்லையா...?"
பெரியவா,சிஷ்யர்களிடம் கைஜாடையால் அந்தக் காய்கறிகள் எல்லவற்றையும் எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
"குகன் கொடுத்ததை இராமன் ஏற்றுக்கொண்ட மாதிரி...! அவன் நமக்கு முன்மாதிரி! நாளைக்கு இதெல்லாம் சந்த்ரமௌளீஸ்வரருக்கு அர்ப்பணம்." ('அவன்' என்றது ராமனை)
பத்தடி சென்று,நடையை மெதுவாக்கி,
தற்செயலாய்த் திரும்பிப் பார்ப்பதைப் போல ஒரு விநாடி நேரம் அவனைப் பார்த்தார்கள்.அவன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
ஐந்து நிமிஷம் பெரியவாள் பேசவில்லை.
"ஏண்டா, என் முன்னாடி நமஸ்காரம் பண்றவாளுக்கு என் முதுகு தெரியுமோ?"
"தெரியாது"
"முதுகைப் பார்க்கணும்னா என்ன பண்ணணும்?"
"பெரியவாளைப் பிரதட்சிணம் பண்ணணும்,,"
ஒரு நிமிஷம் கனமான இடைவெளி.
"...இல்லேன்னா அவன் எதிரிலே நான் ஆத்ம பிரதட்சிணம் பண்ணணும்...அப்போ, முன்னே, பின்னே,பக்கவாட்டிலே பார்க்கலாம் இல்லையா?"
சிஷ்யர்களுக்குப் பொட்டில் தெறித்தது.
மதகுச் சுவர் அருகே நின்று, ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்மபிரதட்சிணம் தானா?
யாருக்காக? எந்த ஒரு சிவபக்தனுக்கு, தன் சுயஸ்வவரூபத்தைக் காட்டினார்கள்...?
அவன்...அவன்....அவனுக்காக...
.
கறிகாய்களைத் தூக்கிச்சென்ற சிஷ்யர்களுக்கு அவைகள், சபரிப்பாட்டி ராமனுக்குக் கொடுத்த கனிந்த பழங்கள் போல் தோன்றின.
பூசணிக்காய் சிவலிங்கமாகத் தோன்றியது; பூசணிச் சாம்பல் திருநீறாக வெண்ணித்தது.
முகாம் தங்கியிருந்த வீடு வந்துவிட்டது.
"அவன்...நந்தனார் பரம்பரை..."என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் பெரியவா.
இந்த நிகழ்ச்சியில் உடனிருந்த தொண்டர்கள் உருகிப் போய்விட்டார்களாம்.ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள் பார்வையில் அவன் பரமேசுவர பக்தன்; பின் வேறு என்ன தகுதி வேண்டும்?

No comments:
Post a Comment