Tuesday, February 25, 2020

5 apacharas not to be done at any cost

*அபசாரங்கள் ஐந்து*

*ஸ்ரீமதுபயவே. திருமலை. சதுர்வேத சதக்ரது. நாவல்பாக்கம். வாஸுதேவ தாதாசார்ய ஸ்வாமி, திருவனந்தபுரம்.*


@@@@@@


*ஸ்ரீபாஷ்யகாரர், தம் கத்யத்தில் ஐந்து வித அபசாரங்களை ஸாதிக்கிறார்.*

இவை எல்லாமே பகவத் அபசாரங்களே. 

*பகவானின் அஜ்ஞையை மீறி நடப்பதே பகவத் அபசாரம்.*

*நம் ஸ்வாமி தேசிகன் அந்த ஐந்து அபசாரங்களை விளக்கினார்.*

அந்த விளக்கம் பின்வருமாறு:- 



@@@@@@

*1. அக்ருத்யகரணம் - செய்யக்கூடாததைச் செய்தல்:* 

@@@@@@
       
பகவத் அபசாரம், பாகவத அபசாரம் முதலியவையும் செய்யக் கூடாதவையே. 

அவையும் அக்ருத்ய கரணங்களே. 

ஆனாலும், அவற்றைப் பின், தனியாகக் கணக்கிடுவதால், இங்கு அக்ருத்யகரணம் என்பதால், 

"தன் வர்ணாச்ரமங்களுக்கு விருத்தம் ஆனவற்றைச் (சாஸ்த்ரத்தில் நிஷேதிக்கப்பட்டதைச்) செய்தல்" எனும் அபசாரமே விவக்ஷிதம். 

உதாரணம்: ப்ராஹ்மணன் ஸுராபாநம் செய்தல் முதலியன.


@@@@@@

*2. க்ருத்ய-அகரணம் - செய்யவேண்டியதைச் செய்யாதிருத்தல்:*
            
@@@@@@

செய்ய வேண்டியதைச் செய்யா விட்டால், அதுவும் சில விஷயங்களில் ஒரு அக்ருத்யகரணமே - செய்யக் கூடாததைச் செய்த கணக்கில் சேரும். 

எனினும், சரணாகத ரக்ஷணம் முதலிய க்ருத்யங்களைச் செய்யாதிருந்தால், மஹாபாதகம் வரும் என்பதை விசேஷித்து உணர்த்த, இதைத் தனியாகச் சொல்கிறார். 

இங்கும், "தன் வர்ணாச்ரம தர்மங்களை, அவற்றின் காலத்தில், செய்யச் சக்தி இருந்தும் செய்யாது இருத்தல்" எனும் அபசாரம் விவக்ஷிதம். 

உதாரணம்: காலத்தில் ஸந்த்யா வந்தனாதிகளைச் செய்யாமை. 



@@@@@@

*3. பகவத் அபசாரம் - பகவானிடத்தில் அபசாரப்படுதல்:* 

@@@@@@
      
எல்லா அபசாரங்களுமே, பகவத் ஆஜ்ஞையை (சாஸ்த்ரங்களில் பகவான் விதித்த கட்டளைகளை) மீறி நடத்தலால், பகவத் அபசாரம் தான். 

எனினும் அக்ருத்ய கரணாதிகளைச் சொல்லி விட்டதால், இங்கு பகவத் அபசாரம் என்பதால், பகவானிடம் ஸாக்ஷாத் ஆகப் பண்ணும் அபசாரங்கள் சொல்லப் படுகின்றன. 

(பகவத் ஸந்நிதியில் செய்யக்கூடாத 32 அபசாரங்கள் முதலியன.) 



@@@@@@

*4. பாகவத அபசாரம் - பாகவதர்களிடத்து அபசாரப்படுதல்:* 

@@@@@@

பணத்துக்காகவோ, வேறு காரணத்துக்காகவோ, பாகவதர்களுக்கு விருத்தம் ஆனதைச் செய்தல். 


@@@@@@

*5. அஸஹ்ய அபசாரம் - பொறுக்க முடியாத மஹா அபசாரங்கள்:* 

@@@@@@

அபசாரங்களிலேயே மிக மோசமாய்ச் சொல்லப்பட்டவை - குரு த்ரோஹம், ஆசார்ய அபசாரம், ஈச்வர நிந்தை முதலியன. 

இந்த அபசாரங்கள் ஐந்தில், முன் சொல்லப்பட்டதை விட, அடுத்து அடுத்து சொலப்பட்ட அபசாரங்கள் மிகக் கொடியவை. 

இந்த அபசாரங்கள் யாவையும் நாம் விலக்கவேண்டும்.

No comments:

Post a Comment