Friday, December 13, 2019

Vessel cleaning-periyavaa

நம்ப முடிகிறதா?

*அண்டா, குண்டா, பாத்திரங்களை தண்ணி இழுத்து அலம்பி வைத்த*
*ம ஹா    பெ ரி ய வா*

ஒவ்வொரு வரியையும் கேட்டுக் கேட்டு கண்களில் கண்ணீருடன் எழுதியது.

பேச்சு - மதிற்பிற்குரிய  *கணேஷ் சர்மா* அவர்கள்.
எழுத்து - பிரேம்ராஜ்.
--------------------------------------
 "மாப்பிள்ளை ராம மூரத்தி"ங்கிற பக்தர்.  அவர்தான் பூஜைகட்டில சந்திர மொளலீஸ்வரர் நைவேத்திய, பூஜை பாத்திரங்களை தேய்க்கிறவர்.  

ரொம்ப பரிதாபமா இருக்கும்.  மடத்தில பார்த்தேள்னா அண்டா, அண்டாவா எல்லாத்தையும் சமைக்கணும்.  கரி அடுப்பு, பித்தளை பாத்திரம்.  பூஜை எல்லாம் முடியரத்தே 3மணி, 4மணி ஆயிடும்.  சாப்பிட்டு, சித்த தலையை சாச்சா போதும்ண்னு இருக்கும்.   அது ஆச்சோ இல்லையோ சாயந்திர பூஜைக்கு ரெடி ஆகணும்.  ராத்திரி பூஜை எவ்வளவு மணிக்கு முடியும்னு தெரியாது.  அதுக்கப்பறம் கிளீன் பண்ணிட்டு படுத்துண்டா பொழுது விடிஞ்சுடும்.  

ஒரு நாள் மத்யானம, நல்ல வெய்யில்.  கிணத்தடியில உக்காந்துண்டு எல்லா பாத்திரத்தையும் போட்டுண்டு தேச்சிண்டிருக்கார் ராம மூர்த்தி.  இத்தனை பாத்திரங்களையும் கரி போக தேய்த்து அலம்பி வைக்கணும். இந்த காலம் போல ஸ்விட்ச் போட்டா  தண்ணி வர காலம் இல்லை.  கிணத்திலிருந்து தண்ணி இழுக்கணும், அலம்பி வைக்கணும்.  

மாப்பிள்ளை ராம மூர்த்தி ரொம்ப சாது.  வாயே திறக்க மாட்டார்.  அப்படி இருக்கும் போது பார்த்தா,  யாரோ நடந்து வர சப்தம்.  பாரத்தா பெரியவா.  

"ராம மூர்த்தி உன்னை பார்த்தா பாவமா இருக்குடா; இத்தனை பாத்திரம் தேச்சுண்டு இருக்கே; ஒண்ணு பண்ணுடா, நீ எல்லத்தையும் தேச்சு, தேச்சு வை; நான் கிணத்திலிருந்து தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி உள்ளே எடுத்துண்டு  போய் கவுத்து வைக்கிறேண்டா!"

ராம மூர்த்தி நடுங்கிப் போய்விட்டார்.  தலையொழுத்தா பெரியவாளுக்கு!  எதுக்கு நாங்க இருக்கோம்!  இது பெரியவா பண்ற காரியம் இல்லை.  

"ஏண்டா!  நான் பண்ணக் கூடாதா? சந்திர மொளலீஸ்வரர் கைங்கர்யம்டா?  பூஜை பண்ணினாதான் கைங்கர்யமா?  நீ ஒண்டி கட்டையா இருக்க; இத்தனை பாத்திரத்தையும் தேய்த்து அலம்பி வைக்கணும்.  வெய்யிலா வேற இருக்கு. தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி உள்ள கொண்டு போய் கவுக்குறேண்டா!"

எந்த சங்கராசார்யராவது, எந்த மடாதிபதியாவது இப்படி சொல்வாளா?  சொல்லமாட்டா,  இவர் ஒருத்தர்தான் இப்படி  சொல்வா!  ஏன்னா, *மனிதன்*; *மாமனிதன்*,.  மனுஷாளோட சிரமம்  தெரிஞ்சவர்.  அதனால்தான் "பெரியவானா" நமக்கு கண்ணுல தண்ணி  வருது.  அப்படி இருக்கச்சே, ராம மூர்திக்கு 5 ரூபாய் கொடுத்தால் என்ன 50 ரூபாய் கொடுத்தால் என்ன? சம்பளமா முக்கியம்?  இந்த ஒரு வார்ததை போதாதா?  

நாம்பளா  இருந்தால் என்ன பண்ணுவோம். சொல்லிடுவோம்.  அவரும், அப்படியா பெரியவா 4-5 பக்கெட் தண்ணி இழுத்து அலம்பி உள்ளே வைங்கோன்னு சொல்ல முடியுமா?  

வேண்டாம்னு சொன்னா; போய் விடுங்கிறியா?" "சரி, சரி, என்ன எங்க பண்ணவிடுவே" அப்படீன்னு போய்விடுவோம்.  பெரியவா போகலை.  அதுதான் அங்க விசேஷம். அதுதான் பெரியவா!

இல்லைடா, நீ பண்ற அந்த கைங்கர்யம் ஒரு நாள் எனக்கு பாக்யம் கிடைச்சுது.  நானும் பண்றேனே!  

சொல்லிவிட்டு சும்மா நிற்கவில்லை.  பண்றா!  தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி பாத்திரங்களை உள்ளே எடுத்துண்டு போய் கவுத்து வைக்கிறார்.

*அதுதான் மஹா பெரியவா*! 

இவ்வளவு எளிமையான ஒர் சங்கராச்சார்யாளை; ஒர் மடாதிபதிபதியை பார்க்க முடியமா? 

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
காஞ்சி சங்கர காம கோடி சங்கர
🙏🙏

No comments:

Post a Comment