Tuesday, December 17, 2019

276 shiva temples with phone numbers

பெரியவாளை நினைச்சுட்டே இருக்கிறது ஒரு வித பக்தி. அவர் சொன்னதை செய்றது ஒரு விதமான பக்தி. அவர் சொன்னதை தானும் செய்து மற்றவங்களும் செய்யணும்னு எதிர்பார்க்கிறது வேற விதமான பக்தி.

 பெரியவா எஜமான் தான். ஆனா எஜமானுக்கெல்லாம் எஜமான் தான் பெரியவா . ஆனா அவரை நாம் அப்படி பார்க்கலை. இப்படி ஒரு பிறவியான்னு ஆச்சர்யமா இன்னிக்கு வரைக்கும் பார்த்துட்டு தான் இருக்கிறோம்.

என்னிக்காவது வாயைத்திறந்து தனக்கு இது வேணும் அது வேணும்னு சொல்லியிருக்காரா? வாயைத் திறந்தா வேதபாடசாலை, பாடசாலை குழந்தைகள், கோவில் புனருத்ராணம், சாஸ்திரம் இப்படித்தான் வாயில் வரும். நிஜமாவே அவர் வாழ்ந்த காலம் பொற்காலம். 

அவர் என்ன கையை சுற்றி எலுமிச்சம்பழம் கொடுத்தாரா இல்லை வாட்ச் கொடுத்தாரா? இல்லை என்னை இத்தனை நாள் வணங்கு உன்னை கோடீஸ்வரன் ஆக்கி விடறேன்னு சொன்னாரா? எதுவுமே சொல்லலை. அம்பாளை போய் நமஸ்காரம் பண்ணு. பரமேஸ்வரனை நமஸ்காரம் பண்ணு. பித்ரு காரியம் ஒழுங்கா பண்ணு. சாஸ்திரத்தை அனுசரிச்சு நடந்துக்கோ. நித்ய கர்மானுஷ்டானத்தை விடாதே இப்படித்தானே யாரா இருந்தாலும் உபதேசிப்பார்.

யாரோ ஒருத்தருடைய உபன்யாஸத்தில் கேட்டேன். //டேய் நான் தப்பு பண்ணிடக் கூடாதுடா. நான் தப்பு பண்ணிட்டேன்னா என்னை திட்டுவா எல்லோரும். அப்படி திட்டினா அது ஆச்சார்யா பகவத்பாதாளை போய் சேரும். அது எத்தனை பெரிய துரோகம் தெரியுமா? குருவுக்கு கெட்ட பெயர் நான் வாங்கி கொடுக்கலாமா//   கேட்கும் போதே கண்ணீர் வரும்.   அப்ப கூட தன்னை ஒரு குரு அப்படின்னு பெரியவா ஒத்துக்கலை. அப்படிப்பட்ட வினயம், குருபக்தி, தீர்க்கமான சிந்தனை யாருக்கு வரும்?
இது தான் பெரியவா.🙏

No comments:

Post a Comment