Thursday, November 21, 2019

Vishnu Sahasranama 856 to 879 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

856.ஆச்ரம:-- ஸர்வேஷாம் விச்ராம பதஸ்தானம் –சம்சாரமாகிய காட்டில் அலைந்தவர்க்கு இளைப்பாறும் இடம். முக்தியை விரும்பினோர் அடையும் இடம்.
857. ச்ரமண:- ச்ரமண என்றால் தபஸ்வி. நரநாராயண அவதாரத்தைக் குறிக்கும் சொல். யோகமார்க்கத்தில் முழுமை அடையாதவரை அடுத்த பிறவியில் அதைத் தொடரும்படி செய்பவர். அஞ்ஞானிகள் கர்ம பயனை அனுபவிக்கும்படி செய்பவர். 
858.க்ஷாம: -பிரஜைகளை சம்ஹாரகாலத்தில் அழிப்பவர் ( சங்.) யோகத்திலிருந்து வழுவியவர்களுக்கும் சம்சாரத்தைக் கடக்கும் திறமையை அளிப்பவர்
859. ஸூபர்ண: -அழகிய இறக்கைகளை உடையவர் . இது பகவான் சனகாதியருக்கு உபதேசிக்க எடுத்த ஹம்சாவதாரத்தைக் குறிக்கிறது. 
ஸு என்றால் நல்ல என்று பொருள். பாரயதி இதி பர்ண: தாண்டச்செய்பவர். சம்சார சாகரத்தை சுலபமாக தாண்டச்செய்பவர்.
வேதங்கள் என்ற இலைகளோடு கூடிய சம்சாரமாகிய வ்ருக்ஷ வடிவினர். (சங்கரர்)

860. வாயுவாஹன: -வாயு என்றால் கருடன் என்று கொள்ளலாம் . வாயுவேகம் கொண்டவராதலால். அத்னால் வாயுவாஹன: என்றால் கருடவாகனன் என்று பொருள். அல்லது வாஹயதி, இயக்குபவர் என்ற அர்த்தத்தில் வாயு வாஹன: என்றால் எல்லாவற்றையும் காற்று மூலம் இயக்குபவர். காற்று இல்லையேல் இயக்கம் இல்லை ..

861. தனுர்தர:- சார்ங்கம் என்ற வில்லை உடையவர் . அல்லது வில் தாங்கியவர் எனராமாவதாரத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
862. தனுர்வேத:- தனுர்வேதம் என்னும் வில் வித்தையை அறிந்தவர். ரமரைக் குறிக்கும். சொல். எல்லா வித்தைகளும் பகவானிடம் இருந்து வந்ததால் தனுர்வித்தையை அறிந்தவர் அவர் ஒருவரே.

863. தண்ட: - தண்டிப்பவரின் ஆயுதமாகவும் தண்டனையாகவும் இருப்பவர். 
தண்டோ தமயதாம் அஸ்மி- கீதை. 
864. தமயதா- துஷ்டர்களை தண்டிப்பவர். 
865. தம:- எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். 
866. அபராஜித: - ஒருவராலும் ஜயிக்க முடியாதவர் 
867. ஸர்வஸஹ: - எல்லவற்றையும் தாங்குபவர் . வைதாரையும் வாழவைப்பவர். பக்தர்கள்செய்யும் குற்றங்களை மன்னிப்பவர்
868. நியந்தா- அனைவரையும் அவரவர் கடமைகளில் நிற்கும்படி செய்பவர் 
869. நியம:- அனைவரையும் அவரவர் கடமைகளில் நிற்கும்படி செய்பவர்.
870. யம: -கர்ம பலன்களை அந்தந்த தெவதைகலின் மூலம் கொடுப்பவர் 
இத்துடன் முந்தைய நாமத்தைச் சேரத்தால் யமம், நியமம் , போன்ற உடல் மன்ம் இவற்றின் கட்டுபாட்டின் மூலம் அடையப் படுபவர்.

871. ஸத்யவான் – மோக்ஷத்திற்குக் காரணமான சுத்தசத்வ வடிவினர். 
சத்வம் என்றால் திவ்ய சக்தி. மிகவும் அதிக சக்தி உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம் 
872.ஸாத்விக: -சத்வ குணத்தை ப்ரதானமாக உடையவர் .
.873. ஸத்ய: - ஸத்யத்தில் நிலை பெற்று இருப்பவர். ஸத்யமே உருவானவர். 
'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம ,' – உபநிஷத்

874. ஸத்யதர்ம பராயண:-சத்தியத்தையும் தர்மத்தையும் முக்கியமாகக் கொண்டவர். சத்யம் தர்மம் இவைகளின் வழி செல்வோர்க்கு அடைக்கலமாக உள்ளவர். 
875. அபிப்ராய: - முமுக்ஷுக்களால் வேறு பலனை விரும்பாது நினைக்கப்படுகிறவர்.
876. ப்ரிய:- எல்லோராலும் விரும்பப்படுகிறவர்.
877. அர்ஹ:- பூஜிக்கததகுந்தவர் .
ப்ரியார்ஹ என்பதை ஒரெ நாமமாகக் கொண்டால் பக்தர்களின் ப்ரியத்திற்குத் தகுந்தவர் என்பது பொருள். 
878. ப்ரியக்ருத்- -பக்த்ர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றவர்.
879. ப்ரீதிவர்தன: - பக்தர்களின் அன்பை விருத்தி செய்கின்றவர். அன்பு வளர்ந்து தன்னைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாத நிலையை அளிப்பவர் .

No comments:

Post a Comment