Monday, November 18, 2019

Vishnu Sahasranama 827 to 838 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

827. ந்யக்ரோத:, உதும்பர: - ந்யக்ரோத: -கீழேயுள்ள பிரபஞ்சத்திற்கெல்லாம் மேலே இருப்பவர் அல்லது தன் மாயையினால் எல்லாப் பிராணிகளையும் மறைப்பவர். உதும்பர: -ஆகாயத்திற்கு மேற்பட்டவர். (சங்கரர்)

இது ஒரே நாமமாக எடுத்துக்கொண்டால் மிக உயர்ந்தவர்கள் சேவை செய்யும்படி இருந்தும் மிகக் கீழ்ப் பட்டவர்களும் அணுகக் கூடியவர். (ந்யக் என்றால் கீழே, உத் என்றால் மேலே )

828.அச்வத்த: - ச்வ என்றால் நாளை , அச்வ என்றால் நாளை என்பது இல்லாதது அதாவது உலகம் . அதில் திஷ்டதி என்றும் இருப்பவர். அதாவது உலகத்தின் உண்மைப் பொருளாக இருப்பவர்.

அச்வத்த என்றால் அரசமரம். சம்சாரம் என்பது கீழே கிளைகள் மேலே வேர் என்று இருக்கும் சம்சாரத்தைக் குறிப்பிடுகிறது. வேர் என்பது பிரம்மத்தைக் குறிக்கும். அதிலிரும்து விரியும் கிளைகள் போன்றது உலகம். ( இதைப் பற்றி விரிவாக கீதையிலும் கடோபநிஷத்திலும் கூறப்பட்டிருக்கிறது. )

829.சாணூராந்த்ரநிஷூதன: - சாணூரன் முதலியவர்களைக் கொன்றவர்.
830.ஸஹஸ்ரார்ச்சி: - - ஆயிரம் கிரணங்களை உடையவர். ஆயிரம் சூரியன் ஒருமிக்க உதித்தாற்போல் அவருடைய பிரகாசம் இருந்து. ( கீதை) 
831. ஸப்தஜிஹ்வ: - ஸப்த ஜிஹ்வா என்றால் அக்னியைக் குறிக்கும். அக்னிஸ்வரூபமாக் இருப்பவர். 
ஸபத ஜிஹ்வா என்றால் ஏழு நாவுகளை உடைய என்று பொருள். அக்னிக்கு ஏழு நாக்குகள், காலீ, கராலீ, மனோஜவா, ஸுலோஹிதா, ஸுதூம்ரவர்ணா, ஸ்புலிங்கினி, விச்வருசி என்பனவாகும்.

832. ஸப்தைதா: - ஏழு ஜ்வாலைகள் உடையவராக இருப்பவர். அரசு, அத்தி, பலாசு, வன்னி, விகங்கதம் , அசநிஹதம் புஷ்கரபர்ணம் எனும் ஏழுவிதமான் ஸமித்துக்களால் செய்யப்படும் யாகங்களை அடைகிறவர். இந்த ஏழு மரங்களும் புஷ்பங்கள் இல்லாமல் நேராகவே பழங்களைக் கொடுக்கக்கூடியவை.

833. ஸபத வாஹன:-- ஏழு குதிரைகளை உடைய சூரியனாக இருப்பவர். காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ருஷ்டுப், ஜகதீ என்னும் ஏழு சந்த்ஸ்களோடு கூடிய வேத மந்திரங்களுக்கு அதிஷ்டான தேவதைகளாகிய சூரியனுடைய தேர்க் குதிரைகள் ஏழையும் தமக்கு வாகனமாக உடையவர்

834அமூர்த்தி: - வடிவொன்றிலாதவர். அகாரத்தால் குறிக்கப்படும் பிரணவத்தின் ஸ்வரூபமாக இருப்பவர். 
835. அனக:- தோஷமில்லாதவர்.
836. அசிந்த்ய: - நினைக்க ஒண்ணாதவர், இந்த்ரியம் , மனம் புத்தி இவற்றிற்கு அப்பாற்பட்டவர். 
837. பயக்ருத்- அதர்ம வழியில் செல்பவர்க்கு பயத்தைக் கொடுப்பவர்.
838. பயநாசன: - பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவர்.

  

No comments:

Post a Comment